ஹோண்டா ஆப்ரிக்கா ட்வின் சிஆர்எப் 1100எல் இந்திய அறிமுக விபரம் வெளியானது

ஹோண்டா ஆப்ரிக்கா ட்வின் சிஆர்எப் 1100எல் பைக்கின் இந்திய அறிமுக விபரம் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. இதுபற்றிய கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஹோண்டா ஆப்ரிக்கா ட்வின் சிஆர்எப் 1100எல் இந்திய அறிமுக விபரம்

ஹோண்டா ஆப்ரிக்கா ட்வின் சிஆர்எப் 1000 ஆஃப்ரோடு சூப்பர் பைக் வாடிக்கையாளர் மத்தியில் அதிவேக வரவேற்பை பெற்ற மாடலாக இருந்து வருகிறது. கடந்த செப்டம்பர் மாதம் இந்த பைக்கிற்கு மாற்றாக 2020 ஆப்ரிக்கா ட்வின் சிஆர்எஃப் 1100எல் என்ற புதிய தலைமுறை மாடல் வெளியிடப்பட்டது.

ஹோண்டா ஆப்ரிக்கா ட்வின் சிஆர்எப் 1100எல் இந்திய அறிமுக விபரம்

தற்போதைய மாடலைவிட அதிக செயல்திறன் மற்றும் கூடுதல் தொழில்நுட்ப அம்சங்களுடன் புதிய ஆப்ரிக்கா ட்வின் 1100 மாடல் வந்தது. இந்த நிலையில், இந்த புதிய மாடல் வரும் ஏப்ரல் மாதத்தில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருப்பது தெரிய வந்துள்ளது.

ஹோண்டா ஆப்ரிக்கா ட்வின் சிஆர்எப் 1100எல் இந்திய அறிமுக விபரம்

புதிய ஹோண்டா ஆப்ரிக்கா ட்வின் 1100எல் பைக்கில் வீலி கன்ட்ரோல், கார்னரிங் ஏபிஎஸ், ரியர் லிஃப்ட் கன்ட்ரோல், க்ரூஸ் கன்ட்ரோல், கார்னரிங் விளக்குகள் என ஏராளமான பாதுகாப்பு தொழில்நுட்ப வசதிகள் இடம்பெற்றுள்ளன.

ஹோண்டா ஆப்ரிக்கா ட்வின் சிஆர்எப் 1100எல் இந்திய அறிமுக விபரம்

இந்த பைக்கில் 6.5 அங்குல டிஎஃப்டி தொடுதிரையுடன் கூடிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆப்பிள் கார் ப்ளே செயலியை இந்த சாதனம் சப்போர்ட் செய்யும். இந்த பைக்கில் புளூடூத் கனெக்ட்டிவிட்டி வசதி உள்ளது.

ஹோண்டா ஆப்ரிக்கா ட்வின் சிஆர்எப் 1100எல் இந்திய அறிமுக விபரம்

ஹோண்டா ஆப்ரிக்கா ட்வின் 1100எல் மாடலில் புதிய ஃப்ரேம் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த பைக்கில் எலெக்ட்ரானிக் அட்ஜெஸ்ட் வசதியுடன் புதிய சஸ்பென்ஷன் அமைப்பு கொடுக்கப்பட்டு இருக்கிறது. முன்புறத்தில் ஷோவா 45 மிமீ கேட்ரிட்ஜ் வகை இன்வர்டெட் டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்குகளும், பின்புறத்தில் கேஸ்சார்ஜ்டு சஸ்பென்ஷனும் பயன்படுத்தப்பட்டுள்ளன.

ஹோண்டா ஆப்ரிக்கா ட்வின் சிஆர்எப் 1100எல் இந்திய அறிமுக விபரம்

இந்த பைக்கில் முன்புறத்தில் 310 மிமீ இரண்டு டிஸ்க்குகள் கொண்ட பிரேக் சிஸ்டமும், ின்புறத்தில் 256 மிமீ ஹைட்ராலிக் டிஸ்க் பிரேக்கும் உள்ளன. டியூவல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டமும் நிரந்தர பாதுகாப்பு அம்சமாக கொடுக்கப்படுகிறது.

ஹோண்டா ஆப்ரிக்கா ட்வின் சிஆர்எப் 1100எல் இந்திய அறிமுக விபரம்

இந்த பைக்கில் சப் ப்ரேம் அமைப்பிலும் குறிப்பிடத்தக்க மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளதுடன், தனியாக கழற்றும் வசதியையும் அளிக்கிறது. இதன் ஸ்விங் ஆர்ம் மிக இலகுவாக மாற்றியுள்ளனர்.

ஹோண்டா ஆப்ரிக்கா ட்வின் சிஆர்எப் 1100எல் இந்திய அறிமுக விபரம்

இந்த பைக்கில் டூர், அர்பன், கிராவல் மற்றும் ஆஃப்ரோடு என நான்கு ரைடிங் மோடுகள் கொடுக்கப்பட்டுள்ளன. ஓட்டுனர் விருப்பத்தின் அடிப்படையில் ரைடிங் மோடுகளையும் செட்டிங் செய்து கொள்ளும் வாய்ப்பும் இருக்கிறது.

ஹோண்டா ஆப்ரிக்கா ட்வின் சிஆர்எப் 1100எல் இந்திய அறிமுக விபரம்

ஹோண்டா ஆப்ரிக்கா ட்வின் 1100எல் பைக்கில் இருக்கும் 1,084 சிசி எஞ்சின் அதிகபட்சமாக 109 பிஎச்பி பவரையும், 105 என்எம் டார்க் திறனையும் வழங்கும். தற்போதைய மாடலைவிட இந்த பைக்கில் இருக்கும் எஞ்சின் 2.5 கிலோ வரை எடை குறைவாக இருக்கிறது. 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது டிசிடி கியர்பாக்ஸ் தேர்வுகள் கொடுக்கப்படுகின்றன.

ஹோண்டா ஆப்ரிக்கா ட்வின் சிஆர்எப் 1100எல் இந்திய அறிமுக விபரம்

தற்போது விற்பனையில் உள்ள மாடலில் இருக்கும் 999.11சிசி எஞ்சின் அதிகபட்சமாக 102 பிஎச்பி பவரையும், 93 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இந்த மாடலுக்கு ரூ.13.5 லட்சம் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. புதிய மாடலுக்கு ரூ.15.5 லட்சம் விலை நிர்ணயிக்கப்படும் வாய்ப்புள்ளது.

More from DriveSpark

Article Published On: Sunday, January 12, 2020, 12:12 [IST]
English summary
Honda Motorcycle & Scooter India ha announced that they will launch the all-new Honda Africa Twin CRF 1100L this April.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+