இந்தியர்களை ஏங்க வைக்கும் புதிய ஹோண்டா சிபிஆர்250ஆர்ஆர் பைக்!

கூடுதல் சக்தியை வெளிப்படுத்தும் எஞ்சின் உள்ளிட்ட அம்சங்களுடன் மேம்படுத்தப்பட்டுள்ள புதிய ஹோண்டா சிபிஆர்250ஆர்ஆர் பைக் வெளியிடப்பட்டு இருக்கிறது. இந்த பைக் குறித்த கூடுதல் தகவல்களை தொடர்ந்து பார்க்கலாம்.

இந்தியர்களை ஏங்க வைக்கும் புதிய ஹோண்டா சிபிஆர்250ஆர்ஆர் பைக்!

ஆரம்ப ரக பிரிமீயம் ஸ்போர்ட்ஸ் பைக் மார்க்கெட்டில் ஹோண்டா சிபிஆர்250ஆர்ஆர் பைக் சிறந்த தேர்வாக இருந்து வருகிறது. டிசைன், தொழில்நுட்பம், எஞ்சின் என அனைத்திலும் வலுவான போட்டியாளராக உள்ளது. ஆசிய நாடுகளில் மட்டும் விற்பனை செய்யப்பட்டாலும், இந்த பைக்கிற்கு பெரும் ரசிகர்கள் பட்டாளம் உலக அளவில் உண்டு. முழுமயைான ஃபேரிங் பேனல்களுடன் சூப்பர் பைக்குகளுக்கு உரிய டிசைன் அம்சங்களுடன், சக்திவாய்ந்த எஞ்சின் தேர்வுடன் இந்த பைக் விற்பனையில் இருந்து வருகிறது.

இந்தியர்களை ஏங்க வைக்கும் புதிய ஹோண்டா சிபிஆர்250ஆர்ஆர் பைக்!

இந்த நிலையில், வாடிக்கையாளர்களின் எண்ணத்தை பூர்த்தி செய்யும் விதத்தில், புதுப்பொலிவு கொடுக்கப்பட்டு இருக்கிறது. புதிய ஹோண்டா சிபிஆர்250ஆர்ஆர் பைக்கின் டிசைனில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. ஹோண்டா சிபிஆர்1000ஆர்ஆர்-ஆர் பைக்கின் டிசைன் அம்சங்கள் இந்த புதிய மாடலில் பயன்படுத்தப்பட்டு அதிக வசீகரமாக மாற்றப்பட்டுள்ளது

இந்தியர்களை ஏங்க வைக்கும் புதிய ஹோண்டா சிபிஆர்250ஆர்ஆர் பைக்!

வேர்ல்டு சூப்பர்பைக் ரேஸிங்கில் ஹோண்டா பைக்குகளில் வழங்கப்படும் சிவப்பு, நீலம் மற்றும் வெள்ளை வண்ணக் கலவையிலான கிராஃபிக்ஸ் ஸ்டிக்கருடன் இந்த பைக் வந்திருப்பது குறிப்பிடத்தக்க விஷயமாக இருக்கிறது.

இந்தியர்களை ஏங்க வைக்கும் புதிய ஹோண்டா சிபிஆர்250ஆர்ஆர் பைக்!

புதிய மாடலில் எல்இடி விளக்குகள், டபுள் பேரல் சைலென்சர், தங்க வண்ணப் பூச்சு செய்யப்பட்ட ஃபோர்க்குகள், டிஸ்க் பிரேக் மற்றும் சக்கரங்கள் என அதிக கவக்ச்சிகமாக மாற்றப்பட்டுள்ளது. இந்த பைக்கில் முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

இந்தியர்களை ஏங்க வைக்கும் புதிய ஹோண்டா சிபிஆர்250ஆர்ஆர் பைக்!

புதிய ஹோண்டா சிபிஆர்250ஆர்ஆர் பைக்கில் பேரலல் ட்வின் சிலிண்டர்கள் அமைப்புடைய லிக்யூடு கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 40.5 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும். முந்தைய மாடலின் எஞ்சினைவிட 3 பிஎச்பி பவர் அதிகமாக வெளிப்படுத்தும்.

இந்த பைக்கின் எஞ்சினின் டார்க் திறன் குறித்த தகவல் இல்லை. எனினும், 23.3 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும். இந்த பைக்கில் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. ரைடு பை ஒயர் தொழில்நுட்பம், ஸ்லிப்பர் க்ளட்ச், குயிக் ஷிஃப்ட்டர் வசதிகள் உள்ளன. கம்போர்ட், ஸ்போர்ட், ஸ்போர்ட் ப்ளஸ் என மூன்று விதமான ரைடிங் மோடுகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்தியர்களை ஏங்க வைக்கும் புதிய ஹோண்டா சிபிஆர்250ஆர்ஆர் பைக்!

புதிய ஹோண்டா சிபிஆர்250ஆர்ஆர் பைக்கின் முன்புறத்தில் அப்சைடு டவுன் ஃபோர்க்குகள் கொண்ட சஸ்பென்ஷனும், பின்புறத்தில் மோனோ ஷாக் அப்சார்பரும் கொடுக்கப்பட்டுள்ளன. இரண்டு சக்கரங்களிலும் பெட்டல் டிஸ்க் பிரேக்குகள், டியூவல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் ஆகியவையும் இடம்பெற்றுள்ளன.

இந்தியர்களை ஏங்க வைக்கும் புதிய ஹோண்டா சிபிஆர்250ஆர்ஆர் பைக்!

ஆசிய நாடுகளில் விற்பனைக்கு செல்ல இருக்கும் இந்த புதிய மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுவது குறித்த அறிவிப்பு இல்லை. இந்தியாவில் ஹோண்டா சிபிஆர்250 பைக் மாடல் மதிப்புமிக்க மாடலாக இருந்தது.

ஆனால், இந்த சிபிஆர்250ஆர்ஆர் பைக் மாடலானது விலை அடிப்படையில் இந்த பைக் இந்தியாவிற்கு ஒத்துவராது என்று ஹோண்டா கருதுகிறது போலும். எனினும், இந்தியாவில் ஆரம்ப ரக ஸ்போர்ட்ஸ் பைக் மார்க்கெட் வலுவாக இருப்பதால், இந்த பைக்கை அறிமுகம் செய்வது குறித்த ஹோண்டா பரிசீலிக்கலாம்.

Source: Young Machine

More from DriveSpark

Article Published On: Saturday, March 28, 2020, 11:38 [IST]
English summary
Honda CBR250RR (2020) has been unveiled globally. The new motorcycle was unveiled globally in a Honda Virtual Motorcycle Show. The 2020 CBR250RR produces more power than its predecessor and features new styling and equipment.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+