அறிமுகமான 3 மாதத்திற்குள்ளாகவே டியோ பிஎஸ்6 ஸ்கூட்டரின் விலையை மீண்டும் உயர்த்திய ஹோண்டா ...!

ஹோண்டா மோட்டார்சைக்கிள்ஸ் & ஸ்கூட்டர்ஸ் இந்தியா நிறுவனம் டியோ பிஎஸ்6 ஸ்கூட்டரின் விலையை கணிசமாக உயர்த்தியுள்ளது. இதன்படி இந்த ஸ்கூட்டர் மாடலின் இரு வேரியண்ட்களும் ரூ.552 வரையில் விலை அதிகரிப்பை பெற்றுள்ளன.

அறிமுகமான 3 மாதத்திற்குள்ளாகவே டியோ பிஎஸ்6 ஸ்கூட்டரின் விலையை மீண்டும் உயர்த்திய ஹோண்டா ...!

ஹோண்டா டியோ எஸ்டிடி மற்றும் டிஎல்எக்ஸ் என்ற இரு விதமான வேரியண்ட்களில் சந்தைப்படுத்தப்பட்டு வருகிறது. இதில் பிஎஸ்6 டியோ எஸ்டிடி வேரியண்ட்டின் விலை ரூ.60,542 ஆகவும், டிஎல்எக்ஸ் வேரியண்ட்டின் விலை ரூ.63,892 ஆகவும் உள்ளது.

அறிமுகமான 3 மாதத்திற்குள்ளாகவே டியோ பிஎஸ்6 ஸ்கூட்டரின் விலையை மீண்டும் உயர்த்திய ஹோண்டா ...!

பிஎஸ்6 தரத்திற்கு இணக்கமாக அப்டேட் செய்யப்பட்ட டியோ மாடல் கடந்த பிப்ரவரி மாதத்தில் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் தற்போது அறிமுகமான மூன்று மாதங்களிலேயே இதன் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

அறிமுகமான 3 மாதத்திற்குள்ளாகவே டியோ பிஎஸ்6 ஸ்கூட்டரின் விலையை மீண்டும் உயர்த்திய ஹோண்டா ...!

பிஎஸ்4 மாடலுடன் ஒப்பிடுகையில் பிஎஸ்6 டியோ ஸ்கூட்டரின் எஸ்டிடி வேரியண்ட் ரூ.5,749 வரையிலும், டிஎல்எக்ஸ் ட்ரிம் ரூ.7,099 வரையில் விலை உயர்வை பெற்றிருந்தன. இருப்பினும் இந்த விலை அதிகரிப்பிற்கு ஏற்ற வகையில் பிஎஸ்6 டியோ ஸ்கூட்டர் அப்டேட் செய்யப்பட்ட ஃப்யூல்-இன்ஜெக்டட் என்ஜினை பெற்றுள்ளது.

அறிமுகமான 3 மாதத்திற்குள்ளாகவே டியோ பிஎஸ்6 ஸ்கூட்டரின் விலையை மீண்டும் உயர்த்திய ஹோண்டா ...!

பிப்ரவரி மாத அறிமுகத்தின்போது ஹோண்டா டியோ பிஎஸ்6 ஸ்கூட்டருக்கு 20க்கும் மேற்பட்ட காப்புரிமை விண்ணங்களை ஹோண்டா நிறுவனம் பெற்றிருந்தது. இந்த பிஎஸ்6 ஸ்கூட்டரில் இந்நிறுவனம் வழங்கியுள்ள ஏசிஜி ஸ்டார்டர் சிஸ்டம், ஸ்கூட்டரை எப்போதும் அமைதியாக வைக்கவும், எளிமையாக ஸ்டார்ட் செய்யவும் உதவும்.

அறிமுகமான 3 மாதத்திற்குள்ளாகவே டியோ பிஎஸ்6 ஸ்கூட்டரின் விலையை மீண்டும் உயர்த்திய ஹோண்டா ...!

ஃப்யூல் இன்ஜெக்‌ஷன் மற்றும் மேம்படுத்தப்பட்ட ஸ்மார்ட் பவர் சிஸ்டத்துடன் இந்த ஸ்கூட்டரில் பொருத்தப்பட்டுள்ள பிஎஸ்6 தரத்திற்கு இணக்கமான 110சிசி என்ஜின் அதிகப்பட்சமாக 8000 ஆர்பிஎம்-ல் 7.6 பிஎச்பி பவரையும், 4,750 ஆர்பிஎம்-ல் 9 என்எம் ஸ்கூட்டருக்கு வழங்கும்.

அறிமுகமான 3 மாதத்திற்குள்ளாகவே டியோ பிஎஸ்6 ஸ்கூட்டரின் விலையை மீண்டும் உயர்த்திய ஹோண்டா ...!

ஓட்டுனருக்கு தேவையான தகவல்களை வழங்குவதற்கு முழுவதும் டிஜிட்டல் மயமாக்கப்பட்ட இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக ரியல்-டைம் ரேஞ்ச் மற்றும் எரிபொருள் அளவு உள்ளிட்டவற்றுடன் ட்ரிப் மீட்டர், நேரம் மற்றும் சர்வீஸ் இண்டிகேட்டர் உள்ளிட்ட வசதிகளையும் பெறலாம்.

அறிமுகமான 3 மாதத்திற்குள்ளாகவே டியோ பிஎஸ்6 ஸ்கூட்டரின் விலையை மீண்டும் உயர்த்திய ஹோண்டா ...!

இவற்றுடன் இந்த பிஎஸ்6 ஸ்கூட்டரில் சைடு-ஸ்டாண்ட் போட்டால் தானாக என்ஜின் நின்றுவிடும் சிஸ்டமும் உள்ளது. எல்இடி தரத்தில் ஹெட்லேம்ப்பை கொண்டுள்ள ஹோண்டா டியோ மாடல், ரீடிசைனில் முன்புற ரிப்கள், புதிய பாடி கிராஃபிக்ஸ் மற்றும் லோகோ டிசைன், ட்யூல்-டோன் பெயிண்ட் அமைப்பு உள்ளிட்ட அம்சங்களையும் பெற்றுள்ளது.

அறிமுகமான 3 மாதத்திற்குள்ளாகவே டியோ பிஎஸ்6 ஸ்கூட்டரின் விலையை மீண்டும் உயர்த்திய ஹோண்டா ...!

பின்புறத்தில் புதிய டிசைனில் டெயில்லேம்ப்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன் ஸ்போர்ட் ஸ்ப்ளிட் க்ராப் ரெயில்கள் ஸ்கூட்டருக்கு புத்துணர்ச்சியான மற்றும் முரட்டுத்தனமான தோற்றத்தை வழங்குகின்றன. இதன் இரு பயன்பாட்டு ஸ்விட்ச் மூலமாக இருக்கை அடியில் உள்ள சேமிப்பிடம் மற்றும் எரிபொருள் டேங்க் உள்ளிட்டவற்றை பயன்படுத்த முடியும்.

அறிமுகமான 3 மாதத்திற்குள்ளாகவே டியோ பிஎஸ்6 ஸ்கூட்டரின் விலையை மீண்டும் உயர்த்திய ஹோண்டா ...!

சஸ்பென்ஷனிற்கு டியோ ஸ்கூட்டர் மாடல் முன்புறத்தில் டெலிஸ்கோபிக் சஸ்பென்ஷனையும், பின்புறத்தில் மூன்று வழிகளில் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய சஸ்பென்ஷன் அமைப்பையும் கொண்டுள்ளது. இதன் வீல்ஸ்பெஸ் 22மிமீ-க்கு அதிகரிக்கப்பட்டுள்ளதால் சிறப்பான நிலைத்தன்மையை ஸ்கூட்டருக்கு வழங்கும்.

அறிமுகமான 3 மாதத்திற்குள்ளாகவே டியோ பிஎஸ்6 ஸ்கூட்டரின் விலையை மீண்டும் உயர்த்திய ஹோண்டா ...!

ப்ரேக்கிங் பணிக்கு புதிய ஒருங்கிணைந்த ப்ரேக் சிஸ்டத்துடன் ட்ரம் ப்ரேக்குகள் இரு சக்கரங்களிலும் வழங்கப்பட்டுள்ளது. இத்தகைய வசதிகளுடன் டியோ ஸ்கூட்டர் மாடல் உள்ளதால் தற்போது கொண்டுவரப்பட்டுள்ள விலை அதிகரிப்பு இதன் விற்பனையை பெரிய அளவில் பாதிக்காது என்பது உறுதி.

Most Read Articles
English summary
Honda Dio BS6 Prices Increased Within Three Month Of Launch
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X