பெரிய என்ஜின் அமைப்புடன் உருவாகியுள்ள புதிய ஹோண்டா ஃபோர்ஸா... அறிமுக தேதி வெளியீடு...

ஹோண்டா அதன் புதிய தயாரிப்பான ஃபோர்ஸா ஸ்கூட்டரின் புதிய டீசர் வீடியோவை வெளியிட்டுள்ளது. அதன் மூலம் தெரியவந்துள்ள தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

பெரிய என்ஜின் அமைப்புடன் உருவாகியுள்ள புதிய ஹோண்டா ஃபோர்ஸா... அறிமுக தேதி வெளியீடு...

ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனம் புதிய ஃபோர்ஸா ஸ்கூட்டரை அடுத்த அக்டோபர் மாதம் 14ஆம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளது. அதை தான் தற்போது வெளியாகியுள்ள டீசர் வீடியோவும் வெளிக்காட்டுகிறது.

ஃபோர்ஸா குடும்பம் விரைவில் பெரியதாக உள்ளது' என்ற வாசகத்துடன் நிறைவு பெறும் இந்த டீசர் வீடியோ, ஹோண்டா நிறுவனம் பெரிய அளவிலான தோற்றத்தை கொண்ட ஸ்கூட்டராக புதிய ஃபோர்ஸா-வை அறிமுகப்படுத்தவுள்ளதை தெளிவாக வெளிக்காட்டுகிறது.

பெரிய என்ஜின் அமைப்புடன் உருவாகியுள்ள புதிய ஹோண்டா ஃபோர்ஸா... அறிமுக தேதி வெளியீடு...

தற்சமயம் இந்திய சந்தையில் ஃபோர்ஸா 125 மற்றும் ஃபோர்ஸா 300 ஸ்கூட்டர் மாடல்களை ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. இவை இரண்டும் வெவ்வேறு விதமான ரசனை கொண்ட வாடிக்கையாளர்களால் வாங்கப்பட்டு வருகின்றன.

பெரிய என்ஜின் அமைப்புடன் உருவாகியுள்ள புதிய ஹோண்டா ஃபோர்ஸா... அறிமுக தேதி வெளியீடு...

ஆனால் விரைவில் அறிமுகமாகவுள்ள புதிய ஃபோர்ஸா தனக்கென்று புதிய வாடிக்கையாளர்கள் கூட்டத்தை சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த டீசர் வீடியோ, முன்பக்க கௌல் மற்றும் என்ஜின் உறை உள்ளிட்டவற்றை சில முரட்டுத்தனமான டிசைன் லைன்களுடன் ஸ்கூட்டர் பெற்றிருப்பதையும் வெளிக்காட்டுகிறது.

பெரிய என்ஜின் அமைப்புடன் உருவாகியுள்ள புதிய ஹோண்டா ஃபோர்ஸா... அறிமுக தேதி வெளியீடு...

இதில் இருந்து ஸ்கூட்டரை மிகவும் ஆக்ரோஷமான தோற்றத்தில் ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனம் வடிவமைத்திருப்பதை அறிய முடிகிறது. அதேபோல் முழு எல்இடி விளக்குகள், க்ரூஸ் கண்ட்ரோல் உள்ளிட்ட சில ஆடம்பர வசதிகளையும் புதிய ஃபோர்ஸா ஸ்கூட்டரில் எதிர்பார்க்கலாம்.

பெரிய என்ஜின் அமைப்புடன் உருவாகியுள்ள புதிய ஹோண்டா ஃபோர்ஸா... அறிமுக தேதி வெளியீடு...

ஹோண்டா பிராண்டின் ஃபோர்ஸா ஸ்கூட்டர்கள் குறிப்பாக வளர்ச்சி அடைந்துவரும் நாடுகளுக்காக உருவாக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இந்த வகையில் தான் புதிய ஃபோர்ஸா ஸ்கூட்டர் மாடல் அடுத்த மாதத்தில் இந்தியாவிற்கு கொண்டுவரப்படுகிறது.

Most Read Articles

English summary
Honda to launch new Forza scooter on 14th October
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X