அட்டகாசமான நிறங்களில் வெளிவந்தது புதிய 2020 ஹோண்டா க்ரோம் 125 மினிபைக்..

ஹோண்டா மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் சர்வதேச சந்தையில் 2020 க்ரோம் 125 மினிபைக் மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய ஹோண்டா 125சிசி மினிபைக்கை பற்றிய கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

அட்டகாசமான நிறங்களில் வெளிவந்தது புதிய 2020 ஹோண்டா க்ரோம் 125 மினிபைக்..

ஹோண்டா எம்எஸ்எக்ஸ்125 மினிபைக் பற்றி நம்மில் சில பேருக்கு தெரிந்திருக்க வாய்ப்பு உண்டு. இதன் அடுத்த தலைமுறை வெர்சன் தான் இந்த புதிய 2020 க்ரோம் 125 மாடல் ஆகும். இது அதன் முன்னோடி மாடலில் இருந்து மிகவும் குறைவான மாற்றங்களையே ஏற்றுள்ளது.

அட்டகாசமான நிறங்களில் வெளிவந்தது புதிய 2020 ஹோண்டா க்ரோம் 125 மினிபைக்..

குறிப்பாக மெக்கானிக்கல் பாகங்களை பொறுத்த வரையில் இந்த புதிய மினிபைக்கில் எந்த அப்டேட்டும் கொண்டு வரப்படவில்லை என்றாலும் கூடுதல் நிறத்தேர்வுகளை இதற்கு ஹோண்டா நிறுவனம் வழங்கியுள்ளது. இந்த வகையில் இந்த 125சிசி மினிபைக் அமெரிக்க சந்தையில் ஜெரி ரெட், ப்ளூ ராஸ்பெர்ரி, ஹலோவீன் ஆரஞ்ச் மற்றும் இன்க்ரீடிபிள் க்ரீன் என்ற நான்கு விதமான நிறங்களில் விற்பனை செய்யப்படவுள்ளது.

அட்டகாசமான நிறங்களில் வெளிவந்தது புதிய 2020 ஹோண்டா க்ரோம் 125 மினிபைக்..

ஆனால் இதன் ஏபிஎஸ் வெர்சன் ஜெரி ரெட் என்ற ஒற்றை நிற தேர்வு மட்டும் தான் வழங்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் இதன் எக்ஸ்ஷோரூம் விலை 3,399 டாலர்களில் (ரூ.2.57 லட்சம்) இருந்து 3,599 டாலர்கள் (ரூ.2.73 லட்சம்) வரையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அட்டகாசமான நிறங்களில் வெளிவந்தது புதிய 2020 ஹோண்டா க்ரோம் 125 மினிபைக்..

மினிபைக் மார்க்கெட்டில் ஹோண்டா நிறுவனம் மங்கி என்ற மற்றொரு தயாரிப்பையும் 3,999 டாலர்களில் (ரூ.3.02) சந்தைப்படுத்தி வருகிறது. மங்கி மினிபைக்குகளுக்கு அமெரிக்காவில் மிக பெரிய அளவில் வரவேற்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.

அட்டகாசமான நிறங்களில் வெளிவந்தது புதிய 2020 ஹோண்டா க்ரோம் 125 மினிபைக்..

மீண்டும் 2020 ஹோண்டா க்ரோம் 125 பைக்கை பற்றிய தகவலுக்கு வருவோம். இந்த மினிபைக்கில் இயக்க ஆற்றலுக்கு 124.9சிசி ஏர்-கூல்டு ஃப்யூல்-இன்ஜெக்டட் சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த என்ஜின் மூலமாக 9.57 பிஎச்பி மற்றும் 10.9 என்எம் டார்க் திறனை பைக் அதிகப்பட்சமாக பெற முடியும்.

அட்டகாசமான நிறங்களில் வெளிவந்தது புதிய 2020 ஹோண்டா க்ரோம் 125 மினிபைக்..

வெறும் 103 கிலோ மட்டுமே எடை கொண்டதாக இருக்கும் இந்த மினி பைக்கில் ட்ரான்ஸ்மிஷன் அமைப்பாக 4-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. மினி பைக் மாடலாக இருப்பினும் இந்த பைக்கில் இருக்கையின் உயரம் குறிப்பிடத்தக்க வகையில் 762மிமீ-ல் வழங்கப்பட்டுள்ளது.

இதன் 12 இன்ச் சக்கரங்களில் ப்ரேக்கிற்கு 220மிமீ மற்றும் 190மிமீ டிஸ்க் ப்ரேக்குகளும், சஸ்பென்ஷனிற்கு 31மிமீ யுஎஸ்டி ஃபோர்க்ஸ் முன்புறத்திலும், மோனோஷாக் பின்புறத்திலும் பொருத்தப்பட்டுள்ளது. இதன் மைலேஜ் அளவை பொறுத்தவரையில், 50கிமீ/லி ஆக உள்ளது. பெட்ரோல் டேங்கின் கொள்ளளவு 5.5 லிட்டர் ஆகும்.

அட்டகாசமான நிறங்களில் வெளிவந்தது புதிய 2020 ஹோண்டா க்ரோம் 125 மினிபைக்..

2020 க்ரோம் 125 மினி பைக்கில் மற்ற கவனிக்கத்தக்க அம்சங்களாக முழு-எல்இடி லைட்டிங், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், ஏபிஎஸ் ப்ரேக்கிங் சிஸ்டம் (கூடுதல் தேர்வு) உள்ளிட்டவை உள்ளன. இத்தகைய மினிபைக்குகள் பொதுவாக பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு மிகவும் ஏற்ற வாகனமாக பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் மினிபைக் ரகத்தில் ஹோண்டா மோட்டார்ஸ் நிறுவனம் நாவி மாடலை சந்தைப்படுத்தி வருகிறது. ஆனால் இந்திய வாடிக்கையாளர்கள் தற்சமயம் சிவிடி ஸ்கூட்டர் மாடல்களுக்கு தான் அதிக முக்கியத்துவம் அளித்து வருவதால், நாவி மினிபைக் அவ்வளவாக கவனத்தை பெறவில்லை.

Most Read Articles
English summary
2020 Honda Grom Revealed For Global Markets
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X