இனியும் ஹோண்டாவை நம்பிட்டு இருக்காதீங்க... இந்தியர்களின் நம்பிக்கைக்கு முற்று புள்ளி வைத்த ஹோண்டா...

இந்தியர்களின் எதிர்பார்ப்பு மற்றும் நம்பிக்கைக்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையில் ஹோண்டா நிறுவனத்தின் சிஇஓ தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதுகுறித்த தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

இனியும் ஹோண்டாவை நம்பிட்டு இருக்காதீங்க... இந்தியர்களின் நம்பிக்கைக்கு முற்று புள்ளி வைத்த ஹோண்டா...

இந்தியாவின் மிகவும் நம்பகத் தன்மை வாய்ந்த இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமாக ஹோண்டா உள்ளது. இந்த நிறுவனத்தின் அனைத்து தயாரிப்புகளுக்குமே நாட்டில் நல்ல வரவேற்பு நிலவி வருகின்றது. அதிலும், ஆக்டிவா ஸ்கூட்டருக்கு கிடைத்து வரும் வரவேற்பு அபரீதமான வரவேற்பாகும்.

இனியும் ஹோண்டாவை நம்பிட்டு இருக்காதீங்க... இந்தியர்களின் நம்பிக்கைக்கு முற்று புள்ளி வைத்த ஹோண்டா...

எனவேதான் இந்தியர்கள் ஒரு சிலர் தங்களின் மின்சார வாகன கனவை ஆக்டிவா ஸ்கூட்டரை மையப்படுத்தி இருக்கின்றனர். இதில் எப்போது மின்சார மாடல் விற்பனைக்குக் கொண்டுவரப்படும் என்ற ஆவலில் அவர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த எண்ணத்திற்கு ஆப்பு வைக்கும் விதமாக ஹோண்டா நிறுவனம் ஓர் அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது.

இனியும் ஹோண்டாவை நம்பிட்டு இருக்காதீங்க... இந்தியர்களின் நம்பிக்கைக்கு முற்று புள்ளி வைத்த ஹோண்டா...

இந்தியாவின் மிக முக்கியமான இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனங்களாக பார்க்கப்படும் பஜாஜ், டிவிஎஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் ஏற்கனவே மின்சார டூ வீலர்களைக் களமிறக்கிவிட்டநிலையில் ஹோண்டா நிறுவனம் தற்போதுதான் அந்த பணியின் ஆரம்ப இடத்திற்கே நகர்ந்து வருகின்றது.

இனியும் ஹோண்டாவை நம்பிட்டு இருக்காதீங்க... இந்தியர்களின் நம்பிக்கைக்கு முற்று புள்ளி வைத்த ஹோண்டா...

ஹோண்டாவின் இந்த இழுத்தடிப்பு செயல் அதன் வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிக அதிருப்தியையே ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையிலேயே கூடுதல் அதிர்ச்சியை ஏற்படுத்தும் விதமாக ஹோண்டா ஆக்டிவா மின்சார ஸ்கூட்டர் கனவை விட்டுவிடுங்கள் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

இனியும் ஹோண்டாவை நம்பிட்டு இருக்காதீங்க... இந்தியர்களின் நம்பிக்கைக்கு முற்று புள்ளி வைத்த ஹோண்டா...

அதாவது, ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரை மின்சார வாகன வெர்ஷனில் அறிமுகம் செய்யும் எண்ணம் துளியளவும் அந்நிறுவனத்திற்கு இல்லை என அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தற்போது வெளியாகியிருக்கும் இந்த ஹோண்டாவின் அதிகாரப்பூர்வ தகவலாகும். எனவே, ஹோண்டா வாகன பிரியர்கள் மத்தியில் இந்த அறிவிப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இனியும் ஹோண்டாவை நம்பிட்டு இருக்காதீங்க... இந்தியர்களின் நம்பிக்கைக்கு முற்று புள்ளி வைத்த ஹோண்டா...

இதுகுறித்து இடி ஆட்டோ தளத்திற்கு ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் இந்தியாவிற்கான முதன்மை தலைவர் அட்சுஷி ஒகடா கூறியதாவது, "ஹோண்டா ஆக்டிவாவை வாங்குவோர் மின்சார வெர்ஷனில் ஏற்பார்களா என்பது உறுதியாக தெரியவில்லை. இதை நாங்கள் ரிஸ்கான ஓர் செயலாகவே கருதுகின்றோம். ஆகையால் ஹோண்டா ஆக்டிவாவில் மின்சார வெர்ஷனை அறிமுகம் செய்யும் எண்ணம் இப்போதைக்கு இல்லை" என தெரிவித்தார்.

இனியும் ஹோண்டாவை நம்பிட்டு இருக்காதீங்க... இந்தியர்களின் நம்பிக்கைக்கு முற்று புள்ளி வைத்த ஹோண்டா...

மேலும் பேசிய அவர், "விநியோகம் மற்றும் உற்பத்தி திறனுக்கு இது பெரும் சுமையை ஏற்படுத்தும். தொடர்ந்து, தற்போதைய ஆக்டிவா விற்பனையிலும் அது தொய்வை ஏற்படுத்தும்" என்றார். எனவேதான் ஹோண்டா நிறுவனம் ஆக்டிவா மாடலிலான மின்சார ஸ்கூட்டரைக் களமிறக்க தயங்குகின்றது.

இனியும் ஹோண்டாவை நம்பிட்டு இருக்காதீங்க... இந்தியர்களின் நம்பிக்கைக்கு முற்று புள்ளி வைத்த ஹோண்டா...

அதேசமயம், தற்போது நாட்டில் இயங்கிக் கொண்டிருக்கும் இரு சக்கர வாகன உற்பத்தி நிறுவனங்கள் தங்களின் பிரபலமான மாடல்களில் இந்திய மின்சார வாகனச் சந்தையை அலங்கரித்துக் கொண்டிருக்கின்றன. இதில், பஜாஜ் நிறுவனத்தின் சேத்தக் மின்சார ஸ்கூட்டரே முதல் இடத்தைப் பிடித்துள்ளது. இதைத் தொடர்ந்தே டிவிஎஸ் நிறுவனத்தின் ஐ க்யூப் மின்சார ஸ்கூட்டர் இருக்கின்றது.

இனியும் ஹோண்டாவை நம்பிட்டு இருக்காதீங்க... இந்தியர்களின் நம்பிக்கைக்கு முற்று புள்ளி வைத்த ஹோண்டா...

ஆனால், இந்த ஜம்பவான் நிறுவனங்களுக்கே முன்னோடியாக பெங்களூருவை மையமாகக் கொண்டு இயங்கும் ஏத்தர் எனர்ஜி நிறுவனம், ஒகினவா மற்றும் ஆம்பியர் உள்ளிட்ட நிறுவனங்கள் அதன் மின்சார இருசக்கர வாகனங்களை இந்தியாவில் அறிமுகம் செய்து, விற்பனையும் செய்து வருகின்றன. ஆகையால், பெரும் நிறுவனங்களின் மின்சார தயாரிப்பை எதிர்நோக்கிக் காத்துக் கொண்டிருக்கும் சிலர் இந்நிறுவனங்களின் தயாரிப்புகளுக்கு மாறி வருகின்றனர்.

இனியும் ஹோண்டாவை நம்பிட்டு இருக்காதீங்க... இந்தியர்களின் நம்பிக்கைக்கு முற்று புள்ளி வைத்த ஹோண்டா...

இம்மாதிரியான சூழ்நிலையிலேயே ஹோண்டா நிறுவனம், அதன் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. இதனால், ஹோண்டா ஆக்டிவா மின்சார ஸ்கூட்டர் கனவில் இருந்தவர்கள் கலக்கத்தில் ஆழ்ந்துள்ளனர்.

Most Read Articles
English summary
Honda Has Dropped The Idea Of Making An Activa Model Electric Scooter. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X