என்னது, ஹோண்டா ஹைனெஸ் சிபி400 பைக்கா!! இப்போ தானே சிபி350 மோட்டார்சைக்கிள் அறிமுகமாச்சி!

ஹைனெஸ் சிபி350 பைக்கை தொடர்ந்து ஹைனெஸ் சிபி400 பைக் மாடலை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டுவர ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

என்னது, ஹோண்டா ஹைனெஸ் சிபி400 பைக்கா!! இப்போ தானே சிபி350 மோட்டார்சைக்கிள் அறிமுகமாச்சி!

ஹோண்டா மோட்டார்சைக்கிள் & ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் ஹைனெஸ் சிபி350 மோட்டார்சைக்கிளை கடந்த 2020 செப்டம்பர் மாத இறுதியில் சந்தையில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இதன் விலைகள் ராயல் என்பீல்டு பைக்குகளுக்கு போட்டியளிக்கக்கூடிய வகையில் ரூ.1.85 லட்சம் மற்றும் ரூ.1.90 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

என்னது, ஹோண்டா ஹைனெஸ் சிபி400 பைக்கா!! இப்போ தானே சிபி350 மோட்டார்சைக்கிள் அறிமுகமாச்சி!

ஹோண்டாவின் இந்த புதிய தயாரிப்பு இதுவரையில் மட்டுமே 1000 யூனிட்கள் தயாரிக்கப்பட்டு தொழிற்சாலையில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளன. இத்தகைய வரவேற்பு புதிய சிபி350 பைக்கிற்கு கிடைத்து வருவதால், சிபி350 பைக்கின் அடிப்படையிலான கேஃப் ரேஸர் பைக்கை விற்பனைக்கு கொண்டுவர ஹோண்டா தயாராகி வருவதாக முன்னதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.

என்னது, ஹோண்டா ஹைனெஸ் சிபி400 பைக்கா!! இப்போ தானே சிபி350 மோட்டார்சைக்கிள் அறிமுகமாச்சி!

மேலும் ஹைனெஸ் சிபி350 பைக்கின் வெற்றியினால் பிக்விங்க் டீலர்ஷிப் பணிகளிலும் ஈடுப்பட ஹோண்டா துவங்கியுள்ளது. இந்த டீலர்ஷிப்களுக்காக அடுத்த இரண்டு வருடங்களில் ஐந்து புதிய மாடல்களை ஹோண்டா விற்பனைக்கு கொண்டுவரவுள்ளது.

என்னது, ஹோண்டா ஹைனெஸ் சிபி400 பைக்கா!! இப்போ தானே சிபி350 மோட்டார்சைக்கிள் அறிமுகமாச்சி!

இதில் முதல் மாடலே, பிஎஸ்6 தரத்திற்கு இணக்கமான சிபி300ஆர் ஆகும். இந்த டீலர்ஷிப்களில் துணை-500சிசி மோட்டார்சைக்கிள்கள் தான் அதிகளவில் விற்பனை செய்யப்படவுள்ளன. ராயல் என்பீல்டு நிறுவனத்திற்கு நேரெதிர் போட்டியாக ஹோண்டா மோட்டார்சைக்கிள்கள் நிறுவனம் இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளது.

என்னது, ஹோண்டா ஹைனெஸ் சிபி400 பைக்கா!! இப்போ தானே சிபி350 மோட்டார்சைக்கிள் அறிமுகமாச்சி!

இந்த ஐந்து மாடல்களில் ஹைனெஸ் வரிசை சிபி400 பைக் மாடலும் இடம்பெறும் என்று தற்போது செய்திகள் வெளிவந்துள்ளன. தற்போதைய சிபி350 பைக்கை காட்டிலும் அதிகளவில் விற்பனைக்கு வரவுள்ள ஹைனெஸ் சிபி400 பைக்கில் அதற்கேற்றாற்போல் பெரிய அளவில் என்ஜின் பொருத்தப்படும்.

என்னது, ஹோண்டா ஹைனெஸ் சிபி400 பைக்கா!! இப்போ தானே சிபி350 மோட்டார்சைக்கிள் அறிமுகமாச்சி!

தற்சமயம் விற்பனையில் சிபி350 பைக்கில் வழங்கப்படும் அனைத்து வசதிகளையும் இந்த 400சிசி பைக்கில் எதிர்பார்க்கலாம். ஹோண்டா ஹைனெஸ் சிபி400 பைக்கின் அறிமுகம் அடுத்த 2021ஆம் வருடத்தின் மார்ச் மாதத்தில் எதிர்பார்க்கப்படுகிறது. வேகமாக விரிவடைந்து வரும் ஹோண்டாவின் பிக்விங் டீலர்ஷிப்கள் இந்த டிசம்பர் மாதத்திற்குள்ளாக 25ஆக அதிகரிக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles

English summary
Honda H'ness CB400 under consideration for Indian market.
Story first published: Sunday, December 6, 2020, 15:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X