ரூ.4,999 மாதத் தவணையில் புதிய ஹோண்டா சிபி350 பைக்கை வாங்கலாம்!

ஹோண்டா ஹைனெஸ் சிபி350 மோட்டார்சைக்கிளுக்கு குறைவான மாதத் தவணை கொண்ட சிறப்பு கடன் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. மேலும், சிறப்பு வட்டி விகிதம் மூலமாக பெரும் சேமிப்பை இந்த மோட்டார்சைக்கிள் பெறுவதற்கான வாய்ப்பும் உள்ளது. இதன் விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

 ரூ.4,999 மாதத் தவணையில் ஹோண்டா சிபி350 பைக்கை வாங்கலாம்!

க்ரூஸர் மோட்டார்சைக்கிள் மார்க்கெட்டில் ராயல் என்ஃபீல்டு க்ளாசிக் 350 மோட்டார்சைக்கிள் அதிசிறந்த தேர்வாக இருந்து வருகிறது. இந்த பைக் மார்க்கெட்டை குறிவைத்து புதிய மாடல்கள் தொடர்ந்து அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. இந்த வரிசையில், அண்மை வரவாக ஹோண்டா ஹைனெஸ் சிபி350 மோட்டார்சைக்கிள் விற்பனைக்கு களமிறக்கப்பட்டது.

 ரூ.4,999 மாதத் தவணையில் ஹோண்டா சிபி350 பைக்கை வாங்கலாம்!

முழுக்க முழுக்க ராயல் என்ஃபீல்டு க்ளாசிக் 350 மோட்டார்சைக்கிளுக்கு நிகரான அம்சங்களுடன் அதிக தொழில்நுட்ப வசதிகளுடன் இந்த மோட்டார்சைக்கிள் கொண்டு வரப்பட்டுள்ளது.

 ரூ.4,999 மாதத் தவணையில் ஹோண்டா சிபி350 பைக்கை வாங்கலாம்!

எனினும், ராயல் என்ஃபீல்டு க்ளாசிக் 350 மோட்டார்சைக்கிள் மார்க்கெட்டை அசைத்து பார்ப்பது அவ்வளவு எளிதான காரியமல்ல என்பதை ஹோண்டா புரிந்து கொண்டுள்ளது. புதிய ஹைனெஸ் சிபி350 மோட்டார்சைக்கிளுக்கு கவர்ச்சிகரமான கடன் திட்டத்தை ஹோண்டா அறிமுகம் செய்துள்ளது.

 ரூ.4,999 மாதத் தவணையில் ஹோண்டா சிபி350 பைக்கை வாங்கலாம்!

இதன்படி, புதிய ஹோண்டா ஹைனெஸ் சிபி350 மோட்டார்சைக்கிளுக்கு 5.6 சதவீத வட்டி விகிதத்தில் வாங்கும் வாய்ப்பு வழங்கப்படுகிறது. வழக்கமான கடன் திட்டங்களை விட இந்த சிறப்பு கடன் திட்டத்தின் மூலமாக ரூ.43,000 வரை சேமிக்கும் வாய்ப்பு உள்ளது.

 ரூ.4,999 மாதத் தவணையில் ஹோண்டா சிபி350 பைக்கை வாங்கலாம்!

அடுத்து வாடிக்கையாளர்கள் ரூ.4,999 மாதத் தவணை திட்டத்தின் மூலமாக இந்த மோட்டார்சைக்கிளை வாங்கும் வாய்ப்பும் இருக்கிறது. ஆன்ரோடு விலையில் 100 சதவீதம் கடன் பெறும் வாய்ப்பும் உள்ளது. ஐசிஐசிஐ வங்கி துணையுடன் இந்த கடன் திட்டத்தை ஹோண்டா வழங்குகிறது.

 ரூ.4,999 மாதத் தவணையில் ஹோண்டா சிபி350 பைக்கை வாங்கலாம்!

புதிய ஹைனெஸ் சிபி350 மோட்டார்சைக்கிள் 'பிங்விங்' என்ற ஹோண்டாவின் பிரிமீயம் ஷோரூம்கள் வாயிலாக விற்பனை செய்யப்படுகிறது. இந்த மோட்டார்சைக்கிள் பாரம்பரிய க்ரூஸர் மோட்டார்சைக்கிள்களுக்கு உரிய டிசைன் தாத்பரியங்களுடன் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.

 ரூ.4,999 மாதத் தவணையில் ஹோண்டா சிபி350 பைக்கை வாங்கலாம்!

இந்த புதிய மோட்டார்சைக்கிள் தினசரி பயன்பாடு மற்றும் நீண்ட தூர பயன்பாடு என இரண்டிற்கும் ஏற்றதாக ஹோண்டா தெரிவிக்கிறது. இந்த மோட்டார்சைக்கிளில் 350சிசி ஏர்கூல்டு எஞ்சின் உள்ளது. ஃப்யூவல் இன்ஜெக்ஷன் சிஸ்டம் கொண்ட இந்த எஞ்சின் அதிகபட்சமாக 21 பிஎச்பி பவரையும், 30 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.

 ரூ.4,999 மாதத் தவணையில் ஹோண்டா சிபி350 பைக்கை வாங்கலாம்!

இந்த மோட்டார்சைக்கிளில் விசேஷ பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன. பின்புற சக்கரம் தரைப் பிடிப்பை இழப்பதை தவிர்க்கும் செலக்ட்டபிள் டார்க் கன்ட்ரோல் சிஸ்டம் உள்ளது. முன்சக்கரத்தில் 310 மிமீ டிஸ்க் பிரேக்கும், பின்சக்கரத்தில் 240 மிமீ டிஸ்க் பிரேக்கும் உள்ளன. ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டமும் கொடுக்கப்பட்டுள்ளது.

 ரூ.4,999 மாதத் தவணையில் ஹோண்டா சிபி350 பைக்கை வாங்கலாம்!

புதிய ஹோண்டா ஹைனெஸ் சிபி350 மோட்டார்சைக்கிள் ரூ.1.85 லட்சம் ஆரம்ப விலையில் கிடைக்கிறது. ராயல் என்ஃபீல்டு க்ளாசிக் 350 மட்டுமின்றி, ஜாவா 300 மற்றும் பெனெல்லி இம்பீரியல் 400 ஆகிய மோட்டார்சைக்கிள்களுக்கும் நேரடி போட்டியாக இருக்கிறது.

Most Read Articles

English summary
Honda has introduced a special EMI scheme for H'ness 350 motorcycle to lure customers.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X