2020 ஹோண்டா என்எக்ஸ்125 ஸ்கூட்டர் சீனாவில் அறிமுகம்- யப்பா என்னா ஸ்டைலு!!

சீன சந்தையில் ஹோண்டா அதன் என்எக்ஸ்125 ஸ்கூட்டரின் 2020 எடிசனை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த 2020 ஹோண்டா ஸ்கூட்டரை பற்றி இந்த செய்தியில் பார்ப்போம்.

2020 ஹோண்டா என்எக்ஸ்125 ஸ்கூட்டர் சீனாவில் அறிமுகம்- யப்பா என்னா ஸ்டைலு!!

மாடர்ன் தொழிற்நுட்பங்களுடன் 2020 என்எக்ஸ்125 ஸ்கூட்டர் அதிகளவில் கூர்மையான மற்றும் ஸ்டைலிங் பேனல்களை கொண்டுள்ளது. வழங்கப்பட்டுள்ள வண்ணங்கள் பளிச்சிடக்கூடியவைகளாக உள்ளன.

2020 ஹோண்டா என்எக்ஸ்125 ஸ்கூட்டர் சீனாவில் அறிமுகம்- யப்பா என்னா ஸ்டைலு!!

ஸ்கூட்டரின் முன்பக்கத்தில் நேர்த்தியான வடிவில் இரட்டை-பேட் ஹெட்லேம்ப் வழக்கமான டர்ன் இண்டிகேட்டர்களுடன் உள்ளது. ஹேண்டில்பார் கௌல், உட்பக்க பேனல்கள் மற்றும் பின்பக்க வால்பகுதி உள்ளிட்டவை இரட்டை-நிற பெயிண்ட்டில் வழங்கப்பட்டுள்ளன.

2020 ஹோண்டா என்எக்ஸ்125 ஸ்கூட்டர் சீனாவில் அறிமுகம்- யப்பா என்னா ஸ்டைலு!!

ஒட்டுமொத்தமாக 2020 ஹோண்டா என்எக்ஸ்125 ஸ்கூட்டரை பார்த்தோமேயானால், இந்தியாவில் விற்பனையில் உள்ள க்ரேஸியா 125 ஸ்கூட்டரின் ஞாபகம் தான் வருகிறது. முழு-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், போதுமான அளவில் இருக்கைக்கு அடியில் சேமிப்பிடம், ஹேண்டில்பாருக்கு கீழே இரு சிறிய சேமிப்பிடங்கள் மற்றும் யுஎஸ்பி சார்ஜர் உள்ளிட்டவை இந்த 2020 ஸ்கூட்டரில் வழங்கப்பட்டுள்ள சிறப்பம்சங்களாகும்.

2020 ஹோண்டா என்எக்ஸ்125 ஸ்கூட்டர் சீனாவில் அறிமுகம்- யப்பா என்னா ஸ்டைலு!!

6 லிட்டர் கொள்ளளவில் பெட்ரோல் டேங்கை கொண்டுள்ள புதிய என்எக்ஸ்125 ஸ்கூட்டரில் 125சிசி, ஃப்யுல்-இன்ஜெக்டட் என்ஜின் பொருத்தப்படுகிறது. ஹோண்டா கிரேஸியாவிலும் வழங்கப்படுகின்ற இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 7,500 ஆர்பிஎம்-ல் 8.7 பிஎச்பி மற்றும் 6,000 ஆர்பிஎம்-ல் 9.7 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.

2020 ஹோண்டா என்எக்ஸ்125 ஸ்கூட்டர் சீனாவில் அறிமுகம்- யப்பா என்னா ஸ்டைலு!!

இதன் 12 மற்றும் 10 இன்ச் சக்கரங்களில் டெலிஸ்கோபிக் மற்றும் மோனோஷாக் சஸ்பென்ஷன் யூனிட்களாக உள்ளன. வெறும் 106 கிலோ மட்டுமே எடை கொண்டதாக உள்ள 2020 என்எக்ஸ்125 ஸ்கூட்டரின் விலையை சீனாவில் 9,580 யுவான் (கிட்டத்தட்ட ரூ.1.07 லட்சம்) ஆக ஹோண்டா நிறுவனம் நிர்ணயித்துள்ளது.

2020 ஹோண்டா என்எக்ஸ்125 ஸ்கூட்டர் சீனாவில் அறிமுகம்- யப்பா என்னா ஸ்டைலு!!

இந்தியாவில் என்எக்ஸ்125 ஸ்கூட்டர் அறிமுகமாகுவதற்கு வாய்ப்பே இல்லை. ஏனெனில் அந்த இடத்தில்தான் ஏற்கனவே க்ரேஸியா மற்றும் ஆக்டிவா என்ற இரு 125சிசி ஸ்கூட்டர்களை இந்நிறுவனம் விற்பனை செய்து வருகிறதே.

More from DriveSpark

Article Published On: Saturday, November 7, 2020, 8:30 [IST]
English summary
2020 Honda NX125 Scooter launched in China.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+