புதிய ஸ்டைலான ஸ்கூட்டருக்கு ஹோண்டா காப்புரிமை... மாதிரி படத்தை பார்த்து மெர்சலான இளசுகள்!!!

ஹோண்டா நிறுவனம் அதன் எதிர்கால ஸ்கூட்டருக்கான டிசைனுக்கு காப்புரிமைப் பெற்றிருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் தகவலை தொடர்ச்சியாக காணலாம்.

புதிய ஸ்டைலான ஸ்கூட்டருக்கு ஹோண்டா காப்புரிமை... மாதிரி படத்தை பார்த்து மெர்சலான இளசுகள்!!!

ஜப்பான் நாட்டை மையமாகக் கொண்டு இயங்கும் இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ஹோண்டா, அதன் எதிர்கால தயாரிப்புகளில் அதிக கவனத்தைச் செலுத்த ஆரம்பித்துள்ளது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் ஏற்கனவே ஃபோர்ஷா எனும் அதி-திறன் மிக்க ஸ்கூட்டரை அது அறிமுகம் செய்திருக்கின்றது. இந்நிலையில், மற்றுமொரு புதிய தயாரிப்பையும் அந்நிறுவனம் அறிமுகம் செய்வதில் ஆர்வம் காட்டி வருவதாக தற்போது ஓர் தகவல் வெளியாகியுள்ளது.

புதிய ஸ்டைலான ஸ்கூட்டருக்கு ஹோண்டா காப்புரிமை... மாதிரி படத்தை பார்த்து மெர்சலான இளசுகள்!!!

அதாவது, ஹோண்டா நிறுவனம், வருங்கால தயாரிப்பு ஒன்றிற்காக காப்புரிமைப் பெற்றிருப்பதாக அந்த தகவல் கூறுகின்றன. பெயரிடப்படாத அந்த ஸ்கூட்டர் இதுவரை உலக இருசக்கர வாகனச் சந்தையிலேயே இல்லாத வகையிலான புத்தம் புதிய தோற்றத்தில் தயாராக இருப்பதாகவும் அந்த தகவல் உறுதிப்படுத்தியுள்ளது.

புதிய ஸ்டைலான ஸ்கூட்டருக்கு ஹோண்டா காப்புரிமை... மாதிரி படத்தை பார்த்து மெர்சலான இளசுகள்!!!

இதனே நம்பகப்படுத்தும் வகையில் புதிய எதிர்கால ஸ்கூட்டர்குறித்த மாதிரிப் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகியிருக்கின்றது. இந்த புதிய ஸ்கூட்டர் எதிர்கால டிசைனில் உருவாக்கப்பட இருப்பதால் அது மின்சார மாடலாக இருக்குமோ என்ற கருத்துகள் பரவலாக பேசப்பட்டு வருகின்றது.

புதிய ஸ்டைலான ஸ்கூட்டருக்கு ஹோண்டா காப்புரிமை... மாதிரி படத்தை பார்த்து மெர்சலான இளசுகள்!!!

அதேசமயம், ஒரு சாரார் அந்த ஸ்கூட்டர் நிச்சயம் எரிபொருள் எஞ்ஜினைக் கொண்டதாகவே களமிறங்கும் என கூறி அடித்து கூறி வருகின்றார். ஏனெனில் தற்போது வெளியாகியிருக்கும் மாதிரி புகைப்படத்தில் சைலென்சர் வசதி இடம் பெற்றிருக்கின்றது.

புதிய ஸ்டைலான ஸ்கூட்டருக்கு ஹோண்டா காப்புரிமை... மாதிரி படத்தை பார்த்து மெர்சலான இளசுகள்!!!

அதேசமயம், ஸ்கூட்டர்குறித்து எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலையும் ஹோண்டா நிறுவனம் தற்போது வரை வவெளியிடப்படவில்லை. குறிப்பிட்டு கூற வேண்டுமானால் புதிய தோற்றத்திற்கான காப்புரிமையை மட்டுமே அது பெற்றிருக்கின்றது.

புதிய ஸ்டைலான ஸ்கூட்டருக்கு ஹோண்டா காப்புரிமை... மாதிரி படத்தை பார்த்து மெர்சலான இளசுகள்!!!

இந்த புதிய ஸ்கூட்டரின் உற்பத்தி பணி எப்போது தொடங்கப்படும், மேலும், எப்போது விற்பனைக்குக் களமிறக்கப்படும் என எந்த தகவலையும் அந்நிறுவனம் இதுவரை வெளியிடவில்லை. இருப்பினும், ஹோண்டா பிரியர்கள் மத்தியில் இந்த புகைப்படம் நாவை சப்புகொட்ட வைக்கின்ற வகையில் ஆர்வத்தைத் தூண்டியுள்ளது.

புதிய ஸ்டைலான ஸ்கூட்டருக்கு ஹோண்டா காப்புரிமை... மாதிரி படத்தை பார்த்து மெர்சலான இளசுகள்!!!

முன் மாதிரி மாடலாக உருவாக்கப்பட்டிருக்கும் அந்த ஸ்கூட்டர் பார்ப்பதற்கே மிகவும் ரம்மியமான தோற்றத்தைப் பெற்றிருக்கின்றது. யமஹா ஃபஸினோ ஸ்கூட்டரை மிஞ்சும் வகையில் அதிக வளைவு மற்றும் நெலிவுகளை அது பெற்றிருக்கின்றது.

புதிய ஸ்டைலான ஸ்கூட்டருக்கு ஹோண்டா காப்புரிமை... மாதிரி படத்தை பார்த்து மெர்சலான இளசுகள்!!!

இத்துடன், ஸ்கூட்டரின் இருக்கை மற்றும் ஹெல்மெட் ஸ்டோரேஜ் பெட்டி உள்ளிட்ட அனைத்தும் ஒரு துண்டாக நீட்டிய வண்ணம் காட்சியளிக்கின்றது. அதாவது, ஆர்15 பைக்குகளில் அதன் பின் வால் பகுதி தனியாக நீட்டிக் கொண்டிருப்பதைப் போல் இந்த ஸ்கூட்டரில், பின் பகுதி வீலுடன் பெரும் இடைவெளியைப் பெற்றவாறு தனியாக நீண்டுள்ளது.

புதிய ஸ்டைலான ஸ்கூட்டருக்கு ஹோண்டா காப்புரிமை... மாதிரி படத்தை பார்த்து மெர்சலான இளசுகள்!!!

ஆகையால், இது விற்பனைக்கு வரும்போது சிறந்த ஸ்போர்ட்ஸ் லுக் கொண்ட ஸ்கூட்டராக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதை உறுதிப்படுத்தும் ஸ்கூட்டரின் முன் பகுதி காட்சியளிக்கின்றது. அதாவது காற்றைக் கிழித்துச் செல்லுகின்ற வகையிலான கூர்மையான தோற்றம் அதன் முன் பக்கத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

புதிய ஸ்டைலான ஸ்கூட்டருக்கு ஹோண்டா காப்புரிமை... மாதிரி படத்தை பார்த்து மெர்சலான இளசுகள்!!!

இதுமட்டுமின்றி ஸ்கூட்டருக்கு பிரிமியம் தோற்றத்தை வழங்குகின்ற வகையில் சிறிய வின்ட்-ஷீல்ட் அம்சமும் முன்பக்கத்தில் வழங்கப்பட்டிருக்கின்றது. இத்துடன், கூடுதல் பிரீமியம் அம்சமாக டிஸ்க் பிரேக் மற்றும் அலாய் உள்ளிட்டவை இடம் பெறவிருக்கின்றன. ஆக, ஒட்டுமொத்தத்தில் இந்த முழு பிரீமியம் மற்றும் அசத்தலான (கவர்ச்சியான) ஸ்டைலில் விரைவில் களமிறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Most Read Articles

English summary
Honda Neo Retro Scooter Concept Patent Images Revealed. Read in Tamil.
Story first published: Saturday, August 1, 2020, 7:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X