ஹோண்டா ஏவியேட்டர் ஸ்கூட்டருக்கு பதிலாக புதிய மாடல்!

ஹோண்டா ஏவியேட்டர் ஸ்கூட்டருக்கு பதிலாக புதிய ஆட்டோமேட்டிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

ஹோண்டா ஏவியேட்டர் ஸ்கூட்டருக்கு பதிலாக புதிய மாடல்!

இந்தியாவின் ஆட்டோமேட்டிக் ஸ்கூட்டர் சந்தையில் ஹோண்டா ஸ்கூட்டர்களுக்கு மிகப்பெரிய வரவேற்பு இருந்து வருகிறது. குறிப்பாக, அந்த நிறுவனத்தின் ஆக்டிவா இந்தியாவின் அதிகம் விற்பனையாகும் இருசக்கர வாகனங்களில் ஒன்றாக இருந்து வருகிறது.

ARE YOU ON INSTAGRAM? FOLLOW TAMIL DRIVESPARK ON INSTAGRAM - CLICK HERE!

ஹோண்டா ஏவியேட்டர் ஸ்கூட்டருக்கு பதிலாக புதிய மாடல்!

ஸ்கூட்டர் சந்தையில் தனது கரத்தை வலுப்படுத்தும் விதத்தில், ஆக்டிவா ஸ்கூட்டரைவிட சற்று கூடுதல் பிரிமீயம் அம்சங்கள் கொண்ட ஏவியேட்டர் ஸ்கூட்டரை நிலைநிறுத்தி இருந்தது.

MOST READ: அம்பானி பயன்படுத்தும் விலையுயர்ந்த 3 ரோல்ஸ் ராய்ஸ்... ஒவ்வொன்னும் எத்தனை கோடி தெரியுமா..?

ஹோண்டா ஏவியேட்டர் ஸ்கூட்டருக்கு பதிலாக புதிய மாடல்!

இந்த நிலையில், பிஎஸ்6 மாசு உமிழ்வு விதிகள் அமலுக்கு வந்துள்ளதால், ஏவியேட்டர் ஸ்கூட்டர் விற்பனையில் இருந்து அண்மையில் விலக்கிக் கொள்ளப்பட்டது.

ஹோண்டா ஏவியேட்டர் ஸ்கூட்டருக்கு பதிலாக புதிய மாடல்!

ஹோண்டா ஆக்டிவா 110, ஆக்டிவா 125 மற்றும் டியோ ஆகிய ஸ்கூட்டர்கள் பிஎஸ்6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையாக விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுவிட்டது. ஆனால், விற்பனை போதிய அளவில் இல்லாததால், ஏவியேட்டர் பிஎஸ்6 மாடலாக வருவதில் சந்தேகம் இருந்து வருகிறது.

MOST READ: ரோல்ஸ்ராய்ஸ் காரை தோற்கடிக்கும் அழகு... எலெக்ட்ரிக் அம்பாசடர் கார் பற்றிய 11 ரகசியங்கள்!

ஹோண்டா ஏவியேட்டர் ஸ்கூட்டருக்கு பதிலாக புதிய மாடல்!

இந்த நிலையில், ஏவியேட்டர் ஸ்கூட்டருக்கு பதிலாக புத்தம் புதிய மாடலை ஹோண்டா நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ளதாக ஆட்டோகார் இந்தியா தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

ஹோண்டா ஏவியேட்டர் ஸ்கூட்டருக்கு பதிலாக புதிய மாடல்!

புதிய ஆக்டிவா 6ஜி, டியோ மற்றும் ஆக்டிவா 125 ஆகிய ஸ்கூட்டர்கள் உருவாக்கப்பட்ட அதே பிளாட்ஃபார்மில்தான் புதிய ஸ்கூட்டர் மாடலும் உருவாக்கப்பட்டு வருவதாக அந்த செய்தி தெரிவிக்கிறது.

MOST READ: இந்தியாவில் இருந்து விடைபெற்று சென்ற ஹோண்டாவின் 3 பைக் மாடல்கள்...

ஹோண்டா ஏவியேட்டர் ஸ்கூட்டருக்கு பதிலாக புதிய மாடல்!

ஹோண்டா ஆக்டிவா 110 ஸ்கூட்டரில் இருக்கும் அதே பிஎஸ்6 தர எஞ்சின்தான் புதிய ஸ்கூட்டரிலும் இடம்பெறும். ஆனால், ஆக்டிவா 110 மாடலைவிட சற்றே கூடுதல் திறன் கெ்ாண்டதாக எஞ்சின் ட்யூனிங் செய்யப்பட்டு இருக்கும்.

அத்துடன், இது பிரிமீயம் மாடலாக இருக்கும் என்பதால், அலாய் வீல்கள், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், டிஸ்க் பிரேக் உள்ளிட்டவை புதிய 110 ஸ்கூட்டரில் ஹோண்டா வழங்கும்.

ஹோண்டா ஏவியேட்டர் ஸ்கூட்டருக்கு பதிலாக புதிய மாடல்!

சிறப்பம்சங்கள், கூடுதல் செயல்திறன் கொண்ட மாடலாக ஆக்டிவா 110 மாடலைவிட பிரிமீயம் வகையில் வருவதால், விலையும் கூடுதலாக நிர்ணயிக்கப்படும். மேலும், இதன் விலை 125 ஸ்கூட்டர் மாடல்களுக்கு இணையாகவோ அல்லது அதிகமாகவோ செல்லும் வாய்ப்பு இருக்கிறது.

MOST READ: கார் விற்பனை அதிகரிக்க வாய்ப்பு... உற்பத்தியை துவங்க மாருதி ஆயத்தம்!

ஹோண்டா ஏவியேட்டர் ஸ்கூட்டருக்கு பதிலாக புதிய மாடல்!

இருப்பினும், ஹோண்டாவின் தரம், ஸ்மூத்தான எஞ்சின், நீடித்த உழைப்பு, அதிக ரீசேல் மதிப்பு உள்ளிட்ட காரணங்களால் இந்த ஸ்கூட்டருக்கு இலக்கு வைக்கப்பட்ட அளவுக்கு விற்பனை இருக்கும் என்று நம்பலாம். ஆனால், ஹோண்டா தயாரிப்புகளில் ஏவியேட்டர் ஸ்கூட்டர் விற்பனையில் எதிர்பார்த்த அளவு இல்லை என்பதையும் மனதில் வைக்க வேண்டி இருக்கிறது.

Most Read Articles

English summary
According to a media report, Honda is planning to launch new 110cc scooter in India and likely to replace the Aviator scooter.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X