செப்.30ல் ராயல் என்ஃபீல்டு 350சிசி போட்டியாளரை களமிறக்குகிறது ஹோண்டா!
இந்தியாவில் வர்த்தக வளம் அதிகம் உள்ள மோட்டார்சைக்கிள் சந்தையில் புதிய மாடல்களை களமிறக்கும் முனைப்பில் ஹோண்டா இறங்கி இருக்கிறது. அண்மையில் 200சிசி மாடல்களுக்கு போட்டியாக தனது ஹார்னெட் 2.0 பைக்கை அறிமுகப்படுத்தியது. இதைத்தொடர்ந்து, அடுத்து ஒரு புதிய பைக் மாடலை ஹோண்டா அறிமுகப்படுத்த இருக்கிறது. வரும் 30ந் தேதி நடக்க இருக்கும் நிகழ்ச்சியில் புதிய மாடல் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

இந்தியாவில் சாதாரண பட்ஜெட் பைக் மாடல்களிலிருந்து சூப்பர் பைக் மாடல்கள் வரை விற்பனை செய்து வருகிறது ஹோண்டா நிறுவனம். வடிவமைப்பும், செயல்திறனும், மென்மையான உணர்வை தரும் அதன் எஞ்சின்களும் இந்தியர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றுள்ளன.

இந்த நிலையில், இந்தியாவில் வர்த்தக வளம் அதிகம் உள்ள மோட்டார்சைக்கிள் சந்தையில் புதிய மாடல்களை களமிறக்கும் முனைப்பில் ஹோண்டா இறங்கி இருக்கிறது. அதன்படி, அண்மையில் 200சிசி மாடல்களுக்கு போட்டியாக தனது ஹார்னெட் 2.0 பைக்கை அறிமுகப்படுத்தியது.

இதைத்தொடர்ந்து, அடுத்து ஒரு புதிய பைக் மாடலை ஹோண்டா அறிமுகப்படுத்த இருக்கிறது. வரும் 30ந் தேதி நடக்க இருக்கும் நிகழ்ச்சியில் ஹோண்டா நிறுவனத்தின் புதிய பைக் மாடல் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தெரிய வந்துள்ளது.

வரும் 30ந் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ள பைக் மாடலானது முற்றிலும் புதிய மாடலாக இருக்கும் என்பதே ஆணித்தரமான கணிப்பாக உள்ளது. இதன்படி, ராயல் என்ஃபீல்டு 350சிசி மாடல்களுக்கு போட்டியான ரகத்தில் தனது ரெபல் 300 மாடலை ஹோண்டா அறிமுகம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இல்லையெனில், அண்மையில் வெளிநாடுகளில் அப்டேட் செய்யப்பட்டு அறிமுகம் செய்யப்பட்ட சிபி500எக்ஸ், சிபிஆர்500ஆர் மற்றும் சிபி500எஃப் பைக் மாடல்களை களமிறக்கும் வாய்ப்பு இருப்பதாகவும் தெரிகிறது.

அதாவது, 300 சிசி முதல் 500 சிசி வரையிலான ரகத்தில் தனது புதிய பைக் மாடலை அறிமுகப்படுத்துவதற்கு ஹோண்டா திட்டமிட்டுள்ளதாகவே கருதப்படுகிறது. இதனால், வரும் 30ந் தேதி நடக்க இருக்கும் நிகழ்ச்சி இந்திய இருசக்கர வாகன பிரியர்கள் மத்தியில் அதிக ஆவலைத் தூண்டி இருக்கிறது.

ஹோண்டா நிறுவனத்தின் பிக் விங் டீலர்கள் வாயிலாக இந்த புதிய பைக் மாடல் விற்பனைக்கு கொண்டு செல்லப்படும். இந்தியாவில் தனது 300சிசி திறனுக்கும் மேலான பைக் மாடல்களை இந்த பிரத்யேக ஷோரூம்கள் வாயிலாக ஹோண்டா விற்பனை செய்து வருகிறது.


Click it and Unblock the Notifications








