பிஎஸ்6 மோட்டார்சைக்கிள்களுக்கு 6 வருட உத்தரவாதம்... ஹோண்டாவின் மெர்சலான அறிவிப்பு...

ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனம் அதன் இருசக்கர வாகனங்களுக்கான உத்தரவாத காலத்தை நீட்டித்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

பிஎஸ்6 மோட்டார்சைக்கிள்களுக்கு 6 வருட உத்தரவாதம்... ஹோண்டாவின் மெர்சலான அறிவிப்பு...

ஹோண்டா நிறுவனம் அதன் தயாரிப்பு மோட்டார்சைக்கிள்களுக்கு உத்தரவாத காலமாக தற்சமயம் 2 வருடங்களும், பிஎஸ்6 வாகனங்களுக்கு மட்டும் 3 வருடங்களும் நிலையாக வழங்கப்பட்டு வருகின்றன.

பிஎஸ்6 மோட்டார்சைக்கிள்களுக்கு 6 வருட உத்தரவாதம்... ஹோண்டாவின் மெர்சலான அறிவிப்பு...

இந்த நிலையில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள உத்தரவாத கால நீட்டிப்பின்படி வாடிக்கையாளர்கள் தயாரிப்புகளை வாங்கிய தேதியில் இருந்து 1.5 வருடங்களுக்குள்ளாக, இன்னும் தெளிவாக சொல்ல வேண்டுமென்றால் 550 நாட்களுக்கு உள்ளாக மற்றுமொரு 3 வருட உத்தரவாத திட்டத்தை தேர்வு செய்து கொள்ளலாம்.

பிஎஸ்6 மோட்டார்சைக்கிள்களுக்கு 6 வருட உத்தரவாதம்... ஹோண்டாவின் மெர்சலான அறிவிப்பு...

இது, வாகனம் ஒரு வருட பழையது ஆகி இருந்தாலும் பரவாயில்லை என அதற்கும் உத்தரவாதத்தை வழங்கும் ஹோண்டா நிறுவனத்தின் பரந்த மனதை காட்டுகிறது. இதனால் 2 வருட காலத்தை மட்டுமே உத்தரவாத காலமாக கொண்டிருந்த இந்நிறுவனத்தின் மோட்டார்சைக்கிள்களுக்கு உத்தரவாதத்தை 5 வருடம் வரை அதிகரிக்க முடியும்.

பிஎஸ்6 மோட்டார்சைக்கிள்களுக்கு 6 வருட உத்தரவாதம்... ஹோண்டாவின் மெர்சலான அறிவிப்பு...

அதேபோல் பிஎஸ்6 வாகனங்களுக்கான உத்தரவாதம் 6 ஆண்டுகள் வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் நீட்டிக்கப்பட்ட உத்தரவாத காலத்திற்கும் வழக்கமான உத்தரவாத நிலைமைகள் தான் தொடரும் எனவும் இந்நிறுவனம் கூறியுள்ளது.

பிஎஸ்6 மோட்டார்சைக்கிள்களுக்கு 6 வருட உத்தரவாதம்... ஹோண்டாவின் மெர்சலான அறிவிப்பு...

மேலும் இந்தியா முழுவதும் செல்லுப்படியாகும் இந்த நீட்டிக்கப்பட்ட உத்தரவாதம் அதிகம் சேதாரம் ஆன அதிக விலை கொண்ட பாகங்களுக்கும் பொருந்தும். வாகனத்திற்கான உரிமையாளர் இந்த காலக்கட்டத்தில் மாறினாலும் அவரும் விரைவான மற்றும் தரமான சர்வீஸ் வசதிகளை குறைவான செலவில் பெறலாம்.

பிஎஸ்6 மோட்டார்சைக்கிள்களுக்கு 6 வருட உத்தரவாதம்... ஹோண்டாவின் மெர்சலான அறிவிப்பு...

இதற்கிடையில் ஹோண்டா நிறுவனம் ரூ.73,336 என்ற விலையில் கிரேஸியா ஸ்கூட்டர் மாடலை கடந்த வாரத்தில் இந்தியாவில் அறிமுகப்படுத்தி இருந்தது. ஸ்டாண்டர்ட் மற்றும் டீலக்ஸ் என்ற இரு விதமான வேரியண்ட்களில் சந்தைப்படுத்தப்பட்டுள்ள இந்த 125சிசி ஸ்கூட்டரை பற்றி விரிவாக அறிய இங்கே க்ளிக் செய்யவும்.

பிஎஸ்6 மோட்டார்சைக்கிள்களுக்கு 6 வருட உத்தரவாதம்... ஹோண்டாவின் மெர்சலான அறிவிப்பு...

கூடுதல் தேர்வாகவே வழங்கப்படும் இந்த உத்தரவாத கால நீட்டிப்பை வாடிக்கையாளர்கள் தேர்வு செய்தால் நிச்சயம் பெரிய அளவில் பயனை அடைய முடியும். ஏனெனில் சேதாரம் ஆன பாகங்களை குறைவான செலவில் பழுது பார்த்து கொண்டு பின்பு அந்த வாகனத்தை அதிக விலையில் வேறொருவருக்கு விற்பனை செய்யலாம் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே.

More from DriveSpark

Article Published On: Friday, June 26, 2020, 20:30 [IST]
English summary
honda-two-wheelers-get-optional-warranty-extension-details
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+