புதிய ஸ்கூட்டரை வெளியீடு செய்த ஹோண்டா... இதுல ஓர் சிறப்பு வசதி புதுசா வழங்கப்பட்டிருக்கு... அது என்ன தெரியுமா?

ஹோண்டா நிறுவனம் 2021ம் ஆண்டிற்கான புதிய ஸ்கூட்டர் ஒன்றை வெளியீடு செய்துள்ளது. இதில், புதிதாக அந்நிறுவனம் அறிமுகம் செய்திருக்கும் வசதி அனைவர் மத்தியிலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதிய ஸ்கூட்டரை வெளியீடு செய்த ஹோண்டா... இதுல ஓர் சிறப்பு வசதி புதுசா வழங்கப்பட்டிருக்கு... அது என்ன தெரியுமா?

பிரபல இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ஹோண்டா, அதன் விஷன் 110 எனும் ஸ்கூட்டரை புதுப்பித்தலுக்கு உட்படுத்தியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த புதுப்பித்தலின் அடிப்படையில் கூடுதலாக சில சிறப்பு வசதிகள் இந்த ஸ்கூட்டரில் சேர்க்கப்பட்டிருக்கின்றன.

புதிய ஸ்கூட்டரை வெளியீடு செய்த ஹோண்டா... இதுல ஓர் சிறப்பு வசதி புதுசா வழங்கப்பட்டிருக்கு... அது என்ன தெரியுமா?

குறிப்பாக, மெக்கானிக்கல் மற்றும் தொழில்நுட்ப அம்சங்கள் அப்கிரேட் செய்யப்பட்டிருக்கின்றன. இத்துடன், புதிய தோற்றத்தை வழங்கும் வகையில் புதிய ஃபிரேம்கள் சேர்க்கப்பட்டிருக்கின்றன. இதனால், விஷன் 110 ஸ்கூட்டர் லேசான கிளாசிக் ஸ்டைலையும், அதேசமயம், நவீன யுக ஸ்கூட்டரைப் போன்ற தோற்றத்தையும் பெற்றிருக்கின்றது.

புதிய ஸ்கூட்டரை வெளியீடு செய்த ஹோண்டா... இதுல ஓர் சிறப்பு வசதி புதுசா வழங்கப்பட்டிருக்கு... அது என்ன தெரியுமா?

இதைத்தொடர்ந்து, புதிதாக ஸ்மார்ட் கீ வசதியும் இந்த ஸ்கூட்டரில் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட் சாவியைக் கொண்டு ஸ்கூட்டரை ஆன் மற்றும் ஆஃப் போன்றவற்றை சுலபமாக செய்யலாம். இதுமட்டுமின்றி, புதிய எல்சிடி இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் வசதியும் ஸ்கூட்டரில் சேர்க்கப்பட்டிருக்கின்றது.

புதிய ஸ்கூட்டரை வெளியீடு செய்த ஹோண்டா... இதுல ஓர் சிறப்பு வசதி புதுசா வழங்கப்பட்டிருக்கு... அது என்ன தெரியுமா?

இதுபோன்ற புதிய சேர்ப்புகளால் விஷன் 110 புத்துணர்ச்சியான ஸ்டைல் மற்றும் தோற்றத்தைப் பெற்றிருக்கின்றது. இந்த ஸ்கூட்டர் ஹோண்டாவின் அதிகம் விற்பனையாகும் வாகனம் என்பதால் பெரியளவில் மாற்றத்தை மேற்கொள்ளவில்லை.

புதிய ஸ்கூட்டரை வெளியீடு செய்த ஹோண்டா... இதுல ஓர் சிறப்பு வசதி புதுசா வழங்கப்பட்டிருக்கு... அது என்ன தெரியுமா?

தனது வாடிக்கையாளர்களுக்கு இந்த ஸ்கூட்டரில் கூடுதல் கவர்ச்சியான வசதியை வழங்கும் நோக்கிலேயே மேற்கூறிய புதுப்பித்தல்களை அது வழங்கியிருக்கின்றது.

புதிய ஸ்கூட்டரை வெளியீடு செய்த ஹோண்டா... இதுல ஓர் சிறப்பு வசதி புதுசா வழங்கப்பட்டிருக்கு... அது என்ன தெரியுமா?

இந்த ஸ்கூட்டரில் யூரோ 5 உமிழ்வு தரத்திற்கு ஏற்ற எஞ்ஜினே பயன்படுத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 110 சிசி திறனை வெளிப்படுத்தக்கூடிய சிங்கிள் சிலிண்டர் ஏர்-கூல்டு எஞ்ஜின் ஆகும். இது, 7500 ஆர்பிஎம்மில் 8.6 பிஎச்பி பவரை வெளியேற்றும் திறனைக் கொண்டதும்கூட.

புதிய ஸ்கூட்டரை வெளியீடு செய்த ஹோண்டா... இதுல ஓர் சிறப்பு வசதி புதுசா வழங்கப்பட்டிருக்கு... அது என்ன தெரியுமா?

புதிய அப்கிரேஷனால் முந்தைய மாடல் விஷன் 110-ஐக் காட்டிலும் 2021 விஷன் 110 மாடல் ஐந்து மடங்கு குறைவான எரிபொருள் பயன்பாட்டையே செய்கின்றது. ஆகையால், இது எரிபொருள் சிக்கனத்தை வழங்கி, கணிசமான தொகையை சேமிக்க உதவும்.

புதிய ஸ்கூட்டரை வெளியீடு செய்த ஹோண்டா... இதுல ஓர் சிறப்பு வசதி புதுசா வழங்கப்பட்டிருக்கு... அது என்ன தெரியுமா?

இது ஓர் ஐரோப்பிய சந்தைக்கான ஸ்கூட்டராகும். ஆகையால், விரைவில் அந்த நாடுகளில் அது விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதன் விலை பற்றிய தகவல் இதுவரை வெளியிடப்படவில்லை. அதேசமயம், ஐரோப்பாவில் விற்பனைக்குக் கிடைக்கும் விலைக் குறைந்த ஸ்கூட்டர்களில் இதுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தகுந்தது.

புதிய ஸ்கூட்டரை வெளியீடு செய்த ஹோண்டா... இதுல ஓர் சிறப்பு வசதி புதுசா வழங்கப்பட்டிருக்கு... அது என்ன தெரியுமா?

இது, வெளிநாட்டு சந்தைக்கான ஸ்கூட்டர் என்பதால் இந்திய அறிமுகம் என்பது கேள்விக் குறியே. இந்த ஸ்கூட்டரை ஈடு செய்கின்ற வகையில் ஹோண்டா நிறுவனம், ஆக்டிவா 6ஜி, டியோ உள்ளிட்ட ஸ்கூட்டர்களை இது விற்பனைக்கு வழங்கி வருகின்றது. இந்த ஸ்கூட்டர்களில் தற்போது வழங்கப்பட்டிருக்கும் ஸ்மார்ட் கீ வசதி எதிர்காலத்தில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Most Read Articles

English summary
Honda Unveiled 2021 Vision 110 Scooter. Read In Tamil.
Story first published: Tuesday, December 15, 2020, 12:32 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X