மிக சவாலான விலையில் ஹஸ்க்வர்னா 250 பைக்குகள் இந்தியாவில் அறிமுகம்... கேடிஎம் ஷோரூம்கள் மூலம் விற்பனை

ஹஸ்க்வர்னா நிறுவனம் ஸ்வர்ட்பிளேன் 250 மற்றும் விட்பிளேன் 250 ஆகிய இரண்டு புதிய பைக் மாடல்களும் இந்தியாவில் இன்று விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்த பைக்குகளின் விலை உள்ளிட்ட பல முக்கிய விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

மிக சவாலான விலையில் ஹஸ்க்வர்னா 250 பைக்குகள் இந்தியாவில் அறிமுகம்... கேடிஎம் ஷோரூம்கள் மூலம் விற்பனை

ஸ்வீடனை சேர்ந்த ஹஸ்க்வர்னா நிறுவனம் கேடிஎம் நிறுவனத்தின் அங்கமாக செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், கேடிஎம் நிறுவனம் பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் நிலையில், ஹஸ்க்வர்னா பைக்குகளையும் இந்தியாவில் அறிமுகம் செய்ய முடிவு செய்தது.

மிக சவாலான விலையில் ஹஸ்க்வர்னா 250 பைக்குகள் இந்தியாவில் அறிமுகம்... கேடிஎம் ஷோரூம்கள் மூலம் விற்பனை

இதன்படி, கடந்த ஆண்டு இறுதியில் கோவாவில் நடந்த இந்திய பைக் வீக் திருவிழாவில் ஹஸ்க்வர்னா நிறுவனத்தின் ஸ்வர்ட்பிளேன் 250 மற்றும் விட்பிளேன் 250 ஆகிய இரண்டு மாடல்களும் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தன. அப்போதே, இந்த இரண்டு பைக்குகளும் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன.

மிக சவாலான விலையில் ஹஸ்க்வர்னா 250 பைக்குகள் இந்தியாவில் அறிமுகம்... கேடிஎம் ஷோரூம்கள் மூலம் விற்பனை

இந்த நிலையில், இரண்டு பைக்குகளையும், பஜாஜ் ஆட்டோ நிறுவனம் இந்தியாவில் இன்று விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. இந்த இரண்டு பைக்குகளும் நாடு முழுவதும் 45 நகரங்களில் உள்ள 100 கேடிஎம் பைக் ஷோரூம்கள் வாயிலாக விற்பனை செய்யப்பட இருக்கின்றன. அடுத்த சில மாதங்களில் 275 நகரங்களில் 400 கேடிஎம் ஷோரூம்கள் மூலமாக விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

மிக சவாலான விலையில் ஹஸ்க்வர்னா 250 பைக்குகள் இந்தியாவில் அறிமுகம்... கேடிஎம் ஷோரூம்கள் மூலம் விற்பனை

கேடிஎம் ட்யூக் 250 பைக்கின் அடிப்படையில்தான் இந்த புதிய ஹஸ்க்வர்னா ஸ்வர்ட்பிளேன் 250 மற்றும் விட்பிளேன் 250 பைக்குகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதனால், கேடிஎம் ட்யூக் 250 பைக்கின் பல முக்கிய பாகங்கள் மற்றும் எஞ்சினை இந்த இரண்டு புதிய பைக் மாடல்களும் பங்கிட்டுக் கொண்டுள்ளன.

மிக சவாலான விலையில் ஹஸ்க்வர்னா 250 பைக்குகள் இந்தியாவில் அறிமுகம்... கேடிஎம் ஷோரூம்கள் மூலம் விற்பனை

அதேநேரத்தில், இந்த இரண்டு பைக்குகளும் கேடிஎம் பைக்குகளை போன்றே தனித்துவமான டிசைன் அம்சங்களுடன் அட்டகாசமாக இருக்கின்றன. இதில், ஹஸ்க்வர்னா ஸ்வர்ட்பிளேன் 250 பைக் மாடலானது ஸ்க்ராம்ப்ளர் வகையிலும், விட்பிளேன் மாடலானது கஃபே ரேஸர் வகையிலும் வடிவமைக்கப்பட்டு இருக்கின்றன.

மிக சவாலான விலையில் ஹஸ்க்வர்னா 250 பைக்குகள் இந்தியாவில் அறிமுகம்... கேடிஎம் ஷோரூம்கள் மூலம் விற்பனை

ஹஸ்க்வர்னா ஸ்வர்ட்பிளேன் 250 பைக்கில் ஆஃப்ரோடு மற்றும் சாதாரண சாலை பயன்பாட்டிற்கு ஏற்ற டியூவல் பர்போஸ் டயர்கள் பொருத்தப்பட்டுள்ளன. மறுபுறத்தில் விட்பிளேன் 250 பைக்கில் க்ளிப் ஆன் ஹேண்டில்பார், முன்புறம் நோக்கி சாய்ந்து ஓட்டும் வகையிலான இருக்கை அமைப்புடன் கஃபே ரேஸர் மாடலாக தனித்துவம் பெறுகிறது.

மிக சவாலான விலையில் ஹஸ்க்வர்னா 250 பைக்குகள் இந்தியாவில் அறிமுகம்... கேடிஎம் ஷோரூம்கள் மூலம் விற்பனை

புதிய ஹஸ்க்வர்னா 250 பைக் மாடல்களில் கேடிஎம் ட்யூக் 250 பைக்கில் இருக்கும் அதே 248.8 சிசி சிங்கிள் சிலிண்டர் எஞ்சின்தான் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் 29.5 பிஎச்பி பவரையும், 24 என்எம் டார்க் திறனையும் வழங்கும்.

மிக சவாலான விலையில் ஹஸ்க்வர்னா 250 பைக்குகள் இந்தியாவில் அறிமுகம்... கேடிஎம் ஷோரூம்கள் மூலம் விற்பனை

கேடிஎம் பைக்குகளில் கொடுக்கப்படும் ட்ரெல்லிஸ் ஃப்ரேம் அமைப்புடன் இந்த பைக்குள் கவர்கின்றன. இவை தோற்றத்திற்கு வலு சேர்ப்பதுடன் சிறந்த கையாளுமையை வழங்கும். முன்புறத்தில் 43 மிமீ WP Apex அப்சைடு டவுன் ஃபோர்க்குகளுடன் சஸ்பென்ஷன் அமைப்பும், பின்புறத்தில் WP Apex மோனோ ஷாக் அப்சார்பரும் பொருத்தப்பட்டுள்ளன.

மிக சவாலான விலையில் ஹஸ்க்வர்னா 250 பைக்குகள் இந்தியாவில் அறிமுகம்... கேடிஎம் ஷோரூம்கள் மூலம் விற்பனை

இந்த பைக்கில் 17 அங்குல சக்கரங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. முன்சக்கரத்தில் 320 மிமீ டிஸ்க் பிரேக்கும், பின்புறத்தில் 230 மிமீ டிஸ்க் பிரேக்கும் உள்ளன. பாஷ் நிறுவனத்தின் டியூவல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் தொழில்நுட்பமும் இந்த பைக்கின் பாதுகாப்பிற்கு உறுதுணையாக இருக்கிறது.

மிக சவாலான விலையில் ஹஸ்க்வர்னா 250 பைக்குகள் இந்தியாவில் அறிமுகம்... கேடிஎம் ஷோரூம்கள் மூலம் விற்பனை

இந்த பைக்கில் 9.5 லிட்டர் கொள்ளளவு திறன் கொண்ட பெட்ரோல் டேங்க் பொருத்தப்பட்டு இருக்கிறது. தரையிலிருந்து 835 மிமீ உயரத்தில் இருக்கை அமைப்பு கொடுக்கப்பட்டு இருக்கிறது. 145 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் பெற்றிருக்கிறது.

மிக சவாலான விலையில் ஹஸ்க்வர்னா 250 பைக்குகள் இந்தியாவில் அறிமுகம்... கேடிஎம் ஷோரூம்கள் மூலம் விற்பனை

புதிய ஹஸ்க்வர்னா ஸ்வர்ட்பிளேன் 250 மற்றும் விட்பிளேன் 250 ஆகிய இரண்டு பைக் மாடல்களுக்கும் ரூ.1.80 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலை நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. இந்த பைக்குகள் ரூ.2.30 லட்சம் முதல் ரூ.2.50 லட்சம் வரையிலான விலையில் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது மிக சவாலான விலையில் வந்துள்ளன. இது அறிமுக விலைச் சலுகையாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. எனவே, அடுத்த சில மாதங்களில் விலை அதிகரிக்கப்படும் வாய்ப்பும் இருக்கிறது.

மிக சவாலான விலையில் ஹஸ்க்வர்னா 250 பைக்குகள் இந்தியாவில் அறிமுகம்... கேடிஎம் ஷோரூம்கள் மூலம் விற்பனை

வரும் மார்ச் துவக்கம் முதல் ஷோரூம்களில் கிடைக்கும். புதிய ஹஸ்க்வர்னா 250 பைக்குகள் பிரிமீயம் மாடல்களாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இவை நேரடியாக கேடிஎம் 250 பைக் மாடலுக்கே கடும் போட்டியை தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Tuesday, February 25, 2020, 13:52 [IST]
English summary
Bajaj Auto has announced prices of the much-awaited Husqvarna twins in India– Svartpilen 250 and Vitpilen 250.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+