புதிய ஹஸ்க்வர்னா ஸ்வர்ட்பிளேன் 401 பைக் விரைவில் அறிமுகம்!

ஹஸ்க்வர்னா ஸ்வர்ட்பிளேன் 401 பைக் விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளதாக புதிய தகவல் வெளியாகி இருக்கிறது.

புதிய ஹஸ்க்வர்னா ஸ்வர்ட்பிளேன் 401 பைக் விரைவில் அறிமுகம்!

கடந்த பிப்ரவரி மாதம் ஹஸ்க்வரான பைக்குகளை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வந்தது பஜாஜ் ஆட்டோ நிறுவனம். ஹஸ்க்வர்னா பிராண்டில் முதலாவதாக ஸ்வர்ட்பிளேன் 250 மற்றும் விட்பிளேன் 250 ஆகிய இரண்டு மாடல்களும் அறிமுகம் செய்யப்பட்டன.

புதிய ஹஸ்க்வர்னா ஸ்வர்ட்பிளேன் 401 பைக் விரைவில் அறிமுகம்!

இந்த பைக்குகள் கேடிஎம் 250 ட்யூக் பைக் அடிப்படையில் உருவாக்கப்பட்ட மாடல்கள். எனவே, ஸ்டைலை தவிர்த்து, எஞ்சின் உள்ளிட்ட பல முக்கிய பாகங்களை கேடிஎம் 250 ட்யூக் பைக்கிலிருந்து பெற்றுள்ளன. மிக தனித்துவமான டிசைனில் வந்த இந்த பைக்குகள் கேடிஎம் 250 ட்யூக் பைக்கைவிட விலை குறைவாக நிலைநிறுத்தப்பட்டன.

புதிய ஹஸ்க்வர்னா ஸ்வர்ட்பிளேன் 401 பைக் விரைவில் அறிமுகம்!

இந்த நிலையில், பெரிதும் எதிர்பார்க்கப்படும் ஹஸ்க்வர்னா ஸ்வர்ட்பிளேன் 401 பைக் மிக விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருப்பதாக இந்தியன் ஆட்டோஸ் பிளாக் தளம் செய்தி வெளியிட்டு இருக்கிறது.

புதிய ஹஸ்க்வர்னா ஸ்வர்ட்பிளேன் 401 பைக் விரைவில் அறிமுகம்!

மஹாராஷ்டிர மாநிலம், புனே அருகில் சகனில் உள்ள பஜாஜ் ஆட்டோ ஆலையில் ஏற்கனவே ஹஸ்க்வர்னா ஸ்வர்ட்பிளேன் 401 பைக் உற்பத்தி துவங்கப்பட்டு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இந்தநிலையில், இந்த மாதத்திலேயே இந்த பைக் இந்தியாவிலும் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளதாக அந்த செய்தி தெரிவிக்கிறது.

புதிய ஹஸ்க்வர்னா ஸ்வர்ட்பிளேன் 401 பைக் விரைவில் அறிமுகம்!

புதிய ஹஸ்க்வர்னா ஸ்வர்ட்பிளேன் 401 பைக் மாடலும் கேடிஎம் 390 ட்யூக் பைக்கின் அடிப்படையில்தான் உருவாக்கப்பட்டுள்ளது. எனவே, எஞ்சின் உள்ளிட்ட முக்கிய பாகங்களை இந்த பைக் பங்கிக் கொண்டுள்ளது.

புதிய ஹஸ்க்வர்னா ஸ்வர்ட்பிளேன் 401 பைக் விரைவில் அறிமுகம்!

இந்த பைக்கில் கேடிஎம் 390 ட்யூக் பைக்கில் இருக்கும் 373 சிசி லிக்யூடு கூல்டு எஞ்சின்தான் பயன்படுத்தப்பட்டு இருக்கும். இந்த எஞ்சின் அதிகபட்சமாக 44 பிஎச்பி பவரையும், 37 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.

புதிய ஹஸ்க்வர்னா ஸ்வர்ட்பிளேன் 401 பைக் விரைவில் அறிமுகம்!

இந்த புதிய ஸ்வர்ட்பிளேன் 401 பைக் ஆஃப்ரோடு பயன்பாட்டிற்கு ஏற்ற டயர், இருக்கை அமைப்பு, அகலமாக ஹேண்டில்பார் ஆகியவற்றை பெற்றிருக்கிறது.

புதிய ஹஸ்க்வர்னா ஸ்வர்ட்பிளேன் 401 பைக் விரைவில் அறிமுகம்!

இந்த பைக்கின் முன்புறத்தில் 142 மிமீ டிராவல் நீளம் கொண்ட 43மிமீ WP அபெக்ஸ் அ்பசைடு டவுன் ஃபோர்க்குகள் உள்ளன. பின்புறத்தில் WP அபெக்ஸ் மோனோஷாக் அப்சார்பரும் உள்ளன. அதேபோன்று, முன்சக்கரத்தில் 4 பிஸ்டன் ரேடியல் காலிபர்களுடன் கூடிய 300 மிமீ டிஸ்க் பிரேக்கும், பின்புறத்தில் 230 மிமீ டிஸ்க் பிரேக்கும் உள்ளன. பாஷ் நிறுவனத்தின் டியூவல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டமும் இடம்பெற்றிருக்கும்.

புதிய ஹஸ்க்வர்னா ஸ்வர்ட்பிளேன் 401 பைக் விரைவில் அறிமுகம்!

இந்த புதிய ஹஸ்க்வர்னா ஸ்வர்ட்பிளேன் 401 பைக் மாடலானது கேடிஎம் பைக் ஷோரூம்கள் வாயிலாகவே விற்பனை செய்யப்படும். கேடிஎம் மற்றும் ஹஸ்க்வர்னா என இரண்டு பிராண்டு பைக்குகளையும் விற்பனை செய்யும் விதத்தில், கேடிஎம் பைக் ஷோரூம்கள் மேம்படுத்தப்படுகின்றன. அத்துடன், ஷோரூம்களின் எண்ணிக்கையையும் 350 ஆக உயர்த்த பஜாஜ் ஆட்டோ திட்டமிட்டுள்ளது.

Most Read Articles

English summary
According to report, Bajaj Auto is planning to launch Husqvarna Swartpilen 401 bike in India very soon.
Story first published: Thursday, April 2, 2020, 17:43 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X