2019ல் பிஎம்டபிள்யூ மோட்டோராட் நிறுவனத்தின் விற்பனை 10% அதிகரிப்பு...

ஜெர்மன் மோட்டார்சைக்கிள் நிறுவனமான பிஎம்டபிள்யூ மோட்டோராட், ப்ரீமியம் மோட்டார்சைக்கிள்களின் விற்பனையில் 10 சதவீத வளர்ச்சியை கண்டுள்ளதாக அறிவித்துள்ளது. இந்நிறுவனம் கடந்த ஆண்டில் 2,403 மோட்டார்சைக்கிள்களை டெலிவிரி செய்துள்ளது.

2019ல் பிஎம்டபிள்யூ மோட்டோராட் நிறுவனத்தின் விற்பனை 10% அதிகரிப்பு...

இந்த எண்ணிக்கை அதற்கு முந்தைய வருடத்தை விட 10 சதவீதம் கூடுதலாகும். விற்பனையில் இத்தகைய முன்னேற்றம் கண்டிருப்பது குறித்து பிஎம்டபிள்யூ க்ரூப் இந்தியா நிறுவனத்தின் தலைவரும் முதன்மை நிர்வாக அதிகாரி ருத்ரதேஜ் சிங் கூறுகையில், டைனாமிக்கான தயாரிப்புகள் மூலமாகவும் சிறந்த ரைடிங் பயணத்தின் மூலமாகவும் பிஎம்டபிள்யூ மோட்டோராட் நிறுவனம் கடந்த ஆண்டில் ப்ரீமியம் மோட்டார்சைக்கிளின் பிரிவை மாற்றியமைத்து இருந்தது.

2019ல் பிஎம்டபிள்யூ மோட்டோராட் நிறுவனத்தின் விற்பனை 10% அதிகரிப்பு...

இதனால் எங்களுக்கு 2019ஆம் ஆண்டு மிக சிறந்த வருடமாக அமைந்தது என கூறினார். அதாவது தனது ஷோரூம்களில் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் தேவையான எதாவது ஒரு வாகனம் உள்ளதால்தான் கூடுதல் விற்பனை எண்ணிக்கை இரட்டை இலக்க எண்ணிற்கு சென்றிருப்பதாக இந்நிறுவனம் கருதுகிறது.

2019ல் பிஎம்டபிள்யூ மோட்டோராட் நிறுவனத்தின் விற்பனை 10% அதிகரிப்பு...

ருத்ரதேஜ் சிங் மேலும் கருத்து தெரிவிக்கையில், மோட்டோராட் உலகில் நுழைய விரும்பும் வாடிக்கையாளர்களை திருப்திப்படுத்த மிக சிறந்த வல்லுனர்களிடம் இருந்து தேவையான தகவல்களை பெற்று வருகிறோம். ரைடிங் ஆர்வலர்களுடன் புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்துவதை தொடரவுள்ளோம்.

2019ல் பிஎம்டபிள்யூ மோட்டோராட் நிறுவனத்தின் விற்பனை 10% அதிகரிப்பு...

மேலும் மோட்டோராட் சமூகமும் நெருக்கமாக பின்னப்பட்டிருப்பது எங்களது 'மேக் லைஃப் எ ரைட்' என்கிற தத்துவத்தை இந்தியா முழுவதும் பரப்ப உதவும் என்றார். பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் இந்த 10 சதவீத வளர்ச்சிக்கு இந்நிறுவனத்தின் ஜி 310ஆர் மற்றும் ஜி 310ஜிஎஸ் என்ற 310 ட்வின்ஸ் பைக்குகள் தான் மிக முக்கிய காரணமாக உள்ளன.

2019ல் பிஎம்டபிள்யூ மோட்டோராட் நிறுவனத்தின் விற்பனை 10% அதிகரிப்பு...

இன்னும் தெளிவாக சொல்லப்போனால், பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் ப்ரீமியம் மோட்டார்சைக்கிள்களின் மொத்த விற்பனையில் இவை இரண்டு மட்டுமே 85 சதவீதத்தை பூர்த்தி செய்துள்ளன. இந்த இரு மாடல்கள் மட்டுமில்லாமல், ஆர்1250 ஜிஎஸ், ஆர்1250 ஜிஎஸ்ஏ, எஃப்750 ஜிஎஸ் மற்றும் எஃப்850 ஜிஎஸ் போன்ற பைக்குகளும் இந்திய சந்தையில் வாடிக்கையாளர்களுக்கு தேவைப்படும் மாடல்களாக உள்ளதாகவும் இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

2019ல் பிஎம்டபிள்யூ மோட்டோராட் நிறுவனத்தின் விற்பனை 10% அதிகரிப்பு...

பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் மிக சிறந்த விற்பனை பைக்குகளாக உள்ள ஜி 310ஆர் மற்றும் ஜி 310ஜிஎஸ் மாடல்களில் ஒரே 313சிசி என்ஜின் தான் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 6-ஸ்பீடு ட்ரான்ஸ்மிஷன் அமைப்புடன் அதிகப்பட்சமாக 33.6 பிஎச்பி பவரையும், 28 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்துகிறது.

2019ல் பிஎம்டபிள்யூ மோட்டோராட் நிறுவனத்தின் விற்பனை 10% அதிகரிப்பு...

இவை இரண்டின் விலை இந்திய எக்ஸ்ஷோரூமில் முறையே ரூ.2.99 லட்சம் மற்றும் ரூ.3.49 லட்சமாக உள்ளது. இந்நிறுவனத்தின் ஆரம்ப நிலை விலையாக ஜி 310ஆர் மாடலின் இந்த ரூ.2.99 லட்ச விலை தான் உள்ளது. அதிகப்பட்சமாக ரூ.29.30 லட்சம் வரையிலும் பிஎம்டபிள்யூ மோட்டார்சைக்கிள்கள் சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

2019ல் பிஎம்டபிள்யூ மோட்டோராட் நிறுவனத்தின் விற்பனை 10% அதிகரிப்பு...

இந்நிறுவனம் கடந்த 2019ஆம் ஆண்டில் புதிய எஸ்1000ஆர்ஆர், ஆர்1250ஆர், 1250ஆர்டி மற்றும் எஃப்850 ஜிஎஸ் மாடலின் அட்வென்ஜெர் வெர்சன் உள்ளிட்ட பைக்குகளை இந்தியாவில் இறக்குமதி செய்திருந்தது.

2019ல் பிஎம்டபிள்யூ மோட்டோராட் நிறுவனத்தின் விற்பனை 10% அதிகரிப்பு...

உலக சந்தையில் விலையுயர்ந்த பைக்குகளை அறிமுகப்படுத்தும் நிறுவனங்களில் பிஎம்டபிள்யூவும் ஒன்றாக உள்ளது. 2018ஆம் ஆண்டின் பிறபகுதியில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த 310 ட்வின்ஸ் பைக்குகள் பிஎம்டபிள்யூ மோட்டோராட் நிறுவனத்திற்கு மிக பெரிய அளவில் விற்பனை எண்ணிக்கையை பெற்று கொடுத்துள்ளது என்பதற்கு மாற்று கருத்து இல்லை. இந்த விற்பனை முன்னேற்றத்தால் இந்நிறுவனத்தில் இருந்து இந்த ஆண்டில் மலிவான விலையில் சில மோட்டார்சைக்கிள்கள் அறிமுகமாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
English summary
BMW Motorrad Motorcycle Sales Registers 10 Percent Growth In 2019: Details
Story first published: Friday, January 10, 2020, 11:52 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X