இந்தியன் சேலஞ்சர் பைக்கிற்கு இந்தியாவில் முன்பதிவு ஆரம்பம்!
இந்தியன் சேலஞ்சர் பைக்கிற்கு இந்தியாவில் முன்பதிவு துவங்கப்பட்டு இருக்கிறது. இந்த பைக்கின் சிறப்பம்சங்கள், டெலிவிரி உள்ளிட்ட விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

அமெரிக்காவை சேர்ந்த இந்தியன் மோட்டார்சைக்கிள் நிறுவனம் இந்தியாவில் பல புதிய மாடல்களுடன் பிரிமீயம் பைக் மார்க்கெட்டில் வலுவான இடத்தை பெறுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. இந்த நிலையில், சேலஞ்சர் என்ற பேக்கர் வகையிலான புத்தம் புதிய பைக் மாடலை இந்திய சந்தைக்கு கொண்டு வருகிறது இந்தியன் நிறுவனம்.

புதிய இந்தியன் சேலஞ்சர் பைக்கின் டிசைன் மிகவும் தனித்துவமாக இருக்கிறது. முகப்பில் மிகப்பெரிய ஹெட்லைட் ஸ்கூப் மற்றும் விண்ட்ஸ்கிரீன் அமைப்பு பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்த பைக்கில் முழுமையான எல்இடி ஹெட்லைட்டுகள், 7.0 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் கொடுக்கப்பட்டுள்ளன. புளூடூத் மூலமாக இணைத்துக் கொள்ளும் வசதி உள்ளது.

மூன்று விதமான டிரைவிங் மோடுகள், க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம், கீ லெஸ் இக்னிஷன் சிஸ்டம், அட்ஜெஸ்ட் வசதியுடன் விண்ட்ஸ்க்ரீன் ஆகியவை உள்ளன. இந்த பைக்கில் இரண்டு சேடில் பெட்டிகள் பொருத்தப்பட்டுள்ளன.

புதிய இந்தியன் சேலஞ்சர் மோட்டார்சைக்கிளில் 1,769 சிசி லிக்யூடு கூல்டு வி-ட்வின் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 121 பிஎச்பி பவரையும் 173 என்எம் டார்க் திறனையும் வழங்கும்.

புதிய இந்தியன் சேலஞ்சர் பைக்கில் முன்புறத்தில் 43 மிமீ இன்வர்டெட் ஃபோர்க்குகள் கொண்ட சஸ்பென்ஷனும், பினஅபுறத்தில் மோனோஷாக் அப்சார்பரும் பொருத்தப்பட்டுள்ளன.

அதேோன்று, முன்புறத்தில் 19 அங்குல சக்கரமும், பின்புறத்தில் 16 அங்குல சக்கரமும் பயன்படுத்தப்பட்டுள்ளன.

இந்தியன் சேலஞ்சர் பைக்கில் முன்சக்கரத்தில் இரண்டு 320 மிமீ டிஸ்க் பிரேக்குகளும், பின்புறத்தில் 298 மிமீ டிஸ்க் பிரேக்கும் கொடுக்கப்பட்டுள்ளன.

புதிய இந்தியன் சேலஞ்சர் பைக்கிற்கு இந்தியாவில் முன்பதிவு துவங்கப்பட்டுவிட்டது. மிக விரைவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது.

ஹார்லி டேவிட்சன் சிவிஓ லிமிடேட் மோட்டார்சைக்கிளுடன் இந்த புதிய இந்தியன் சேலஞ்சர் மோட்டார்சைக்கிள் போட்டி போடும். ஹார்லி டேவிட்சன் சிவிஓ லிமிடேட் மோட்டார்சைக்கிள் ரூ.49.99 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் இந்தியாவில் விற்பனை செய்யப்படுகிறது.


Click it and Unblock the Notifications








