உலகமே கலக்கத்தில் இருக்க புதிய பைக்கில் ரைடு வந்த பிரபல சாமியார்... யாருனு தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க!
உலக மக்கள் அனைவரும் கொரோனா பாதிப்பால் கவலைக்கொண்டிருக்கும் வேலையில் தன்னை சத்குரு என கூறிக்கொள்ளும் பிரபல சத்குரு ஜக்கி வாசுதேவ் புதிய பைக்கில் ஜாலி ரைடு செய்து வீடியோ வெளியிட்டுள்ளார். இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

தன்னைத் தானே சத்குரு என போற்றிக் கொண்டு வலம் வந்துக்கொண்டிருப்பவர் பிரபல ஜக்கி வாசுதேவ். அரசியல் பிரபலங்கள் முதல் திரை நட்சத்திரங்கள் வரை அனைவரிடத்திலும் இவருக்கு செல்வாக்கு அதிகம். குறிப்பிட்டு கூற வேண்டுமானால், சர்ச்சைக்குரிய இடத்தில் கட்டப்பட்ட ஈசா யோகா மைய திறப்பு விழாவிற்கு இந்திய பிரதமர் மோடி முதல் பல்வேறு அரிசயல் கட்சித் தலைவர்கள் கலந்துக் கொண்டனர். இதுமட்டுமின்றி, திரை நட்சத்திரங்களின் வருகைக்கும் பஞ்சமின்றி காணப்பட்டது.

ஜக்கி வாசுதேவ் ஆன்மீகவாதியாக இருந்தாலும் அவரைச் சுற்றி பல்வேறு சர்ச்சையான கருத்துகள் வலம் வந்த வண்ணம் இருக்கின்றன. ஆகையால், சர்ச்சைகளுக்கு பெயர்போனவராக இவர் திகழ்கின்றார். இதுமட்டுமின்றி சொகுசு மற்றும் ஆடம்பர வாழ்க்கைக்கும் பெயர்போன ஆன்மீகவாதியாக அவர் இருக்கின்றார். இதனை உறுதிச் செய்யும் வகையில் அவரிடத்தில் ஏராளமான கார்கள் மற்றும் பைக்குகள் இருக்கின்றன.

அவையனைத்தும் விலையுயர்ந்த ஆடம்பர ரக வாகனங்களாகும். குறிப்பாக, அவர் நதியை மீட்டெடுப்போம் என கூறி பல மாநிலங்களை சுற்றி வர பயன்படுத்தி பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் பைக் இந்தியாவில் ரூ. 20 லட்சத்திற்கும் அதிகமான விலையில் விற்கப்படுகின்றது. இதேபோன்று, முன்னதாக அவர் பயன்படுத்திய பென்ஸ் நிறுவனத்தின் காரும் பல கோடி மதிப்பிலானதாகும்.

இதுமட்டுமின்றி, பல லட்டம் மதிப்பிலான ஆடம்பர ரக பைக்குகள் அவரிடத்தில் உள்ளன. டுகாட்டி மல்டிஸ்ட்ராடா, கவாஸாகி நின்ஜா 1000, டுகாட்டி டயாவெல், ஹோண்டா ஆப்ரிக்கா ட்வின், சுஸுகி வி-ஸ்ட்ரோம், ட்ரையம்ஃப் ராக்கெட் 3 உள்ளிட்ட பைக்குகளை அவர் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், மேற்கூறிய இருசக்கர வாகன வரிசையில் புதிதாக ஜாவா நிறுவனத்தின் 42 பைக்கையும் அவர் பயன்படுத்தி வருக்கின்றார். இதனை வெளிப்படுத்தும் விதமாக அந்த பைக்கில் அவர் ஜாலி ரைடு செய்யும் வீடியோ ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார்.

உலகமே கொரோனா அச்சத்தால் நடு நடுங்கிக் கொண்டிருக்கையில், தன்னை ஆன்மீக என போற்றிக் கொள்ளும் ஜக்கி வாசுதேவ் மக்களின் இந்நிலைகுறித்து சற்றும் கவலைக் கொள்ளாமல் ஜாலியாக ரைடு செய்து வீடியோ வெளியிட்டிருப்பது தமிழக மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றது.

பல சமூக பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொள்வதாக வெளியுலகில் காண்பித்துக் கொள்ளும் ஜக்கி வாசுதேவ், இம்மாதிரியான சூழ்நிலையில் மக்களுக்கு ஆறுதல் அளிக்க வேண்டும் என்பதே பலரின் எதிர்பார்ப்பாக இருக்கின்றது. ஆனால், இதற்கு மாறாக அவரின் செயல்பாடு இருப்பது சற்றே வேதனையளிக்கும் ஒன்றாக இருக்கின்றது.

ஆன்மீக வாதி ஜக்கி வாசுதேவ்-க்கு தமிழகம் மட்டுமின்றி பல மாநிலங்களில் செல்வாக்கு படைத்தவராக இருக்கின்றார். அதுமட்டுமின்றி உலகளவில் சில வெளிநாடுகளில் இருந்தும் இவரின் ஆசிரமத்தை காண பக்தர்கள் வந்து செல்கின்றனர். ஆகையால், இவரின் ஒவ்வொரு செயல்பாடும் மக்களை எளிதில் சென்றடையும் ஒன்றாக இருக்கின்றது. இந்த நிலையில், ஜாலி ரைடு வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கின்றது.

இருப்பினும், அவரின் ஆதரவாளர்கள் சிலர் மக்களை கவலையில் இருந்து இந்த வீடியோ திசை திருப்பலாம் என கூறுகின்றனர்.
தற்போது, ஜக்கி வாசுதேவ் பயன்படுத்திய ஜாவா 42 பைக் 4 ஸ்டிரோக் பைக்காகும். இதேபோன்று, அவர் ஜாவா நிறுவனத்தின் பழைய மாடல் ஒன்றையும் அவர் பயன்படுத்தி வருகின்றார். அது, 2 ஸ்டிரோக் பைக். இதனை ஜக்கி லேசாக மாடிஃபை செய்து பயன்படுத்தி வருகின்றார்.

ஜாவா நிறுவனம் கடந்த 35 வருடங்களுக்கு பின்பு கடந்த ஆண்டுதான் அதன் புதிய ரக பைக்குகளை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இதில், முதலில் இரு மாடல்களில் மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டன. அவை ஜாவா கிளாசிக் மற்றும் ஜாவா 42 ஆகும். இதைத்தொடர்ந்து, ஜாவா பெராக் மாடலும் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.
இந்த அனைத்து மாடல்களும் கிளாசி தோற்றத்தில் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் பைக்குகளுக்கு போட்டியளிக்கின்ற வகையில் இருந்த காரணத்தால் நல்ல வரவேற்பை எட்டியது.

அதிலும், ஜாவா கிளாசிக் மற்றும் 42 பைக்குகளுக்கான வரவேற்பு வேற லெவலில் இருந்தது. இந்த பைக்குகள் பார்ப்பதற்கு கிளாசியாக இருந்தாலும் தற்காலத்து ஏற்ப பல்வேறு தொழில்நுட்ப அம்சங்கள் இடம்பெற்றிருக்கின்றன. குறிப்பாக, ஏபிஎஸ் மற்றும் டிஸ்க் பிரேக் அதன் ரசிகர்கள் அமோகமான வரவேற்பைப் பெறுவதற்கு ஏதுவாக இருந்தது.

இதுமட்டுமின்றி, இந்த பைக்குகளின் விலையும் சற்றே குறைவானதாக காட்சியளிக்கின்றது. இதில், ஜாவா கிளாசிக்கிற்கு ரூ. 1.6 லட்சமும், ஜாவா 42 மாடலுக்கு ரூ. 1.73 லட்சமும் நிர்ணயிக்கப்பட்டது. இவ்விரு பைக்குகளும் தற்போது பிஎஸ்-6 எஞ்ஜினைப் பெற்றிருக்கின்றன.

அதேசமயம், இரு பைக்குகளிலும் ஒரே திறனை வெளிப்படுத்தும் 293சிசி சிங்கிள் சிலிண்டர், லிக்யூடு கூல்ட எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 27 பிஎச்பி மற்றும் 28 என்எம் டார்க்கை வெளிப்படுத்தும்.


Click it and Unblock the Notifications








