2021 கவாஸாகி நிஞ்சா 1000எஸ்எக்ஸ் பிஎஸ்6 பைக் இந்தியாவில் அறிமுகம்... ஆரம்ப விலை ரூ.10.79 லட்சம்...

கவாஸாகி நிறுவனம் மை2021 நிஞ்சா 1000எஸ்எக்ஸ் பைக் மாடலை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. நிஞ்சா 1000எஸ்எக்ஸ் மாடலின் நான்காம் தலைமுறை பைக்காக வெளிவந்துள்ள இந்த 1000சிசி பைக்கை பற்றிய கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் இனி பார்ப்போம்.

2021 கவாஸாகி நிஞ்சா 1000எஸ்எக்ஸ் பிஎஸ்6 பைக் இந்தியாவில் அறிமுகம்... ஆரம்ப விலை ரூ.10.79 லட்சம்...

பிஎஸ்6 தரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய கவாஸாகி நிஞ்சா 1000எஸ்எக்ஸ் பைக்கின் விலை எக்ஸ்ஷோரூமில் ரூ.10.79 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த பைக் தான் கவாஸாகி நிறுவனம் இந்தியாவிலேயே தயாரித்து சந்தைப்படுத்தியுள்ள அதன் முதல் மாடலாகும்.

2021 கவாஸாகி நிஞ்சா 1000எஸ்எக்ஸ் பிஎஸ்6 பைக் இந்தியாவில் அறிமுகம்... ஆரம்ப விலை ரூ.10.79 லட்சம்...

மை2021 அப்டேட்டினால் இந்த பைக், கூர்மையான டிசைன், கூடுதலான வசதிகள் உள்பட சில மாற்றங்களை ஏற்றுள்ளது. இந்த வகையில் எக்ஸாஸ்ட் சிஸ்டம் ட்வின்-எக்ஸாஸ்ட்டில் இருந்து சிங்கிள் எக்ஸாஸ்ட்-ஆக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

MOST READ: பருவமழை தொடங்க போகுது... மழை நீரில் இருந்து வாகனங்களை பாதுகாக்க எளிமையான வழி என்னென்ன..?

2021 கவாஸாகி நிஞ்சா 1000எஸ்எக்ஸ் பிஎஸ்6 பைக் இந்தியாவில் அறிமுகம்... ஆரம்ப விலை ரூ.10.79 லட்சம்...

இதனுடன் அப்டேட்டான பக்கவாட்டு பேனல்கள் மற்றும் சற்று திருத்தியமைக்கப்பட்ட பெல்லி பான் உள்ளிட்ட மாற்றங்களும் இந்த புதிய பைக்கில் கொண்டுவரப்பட்டுள்ளது. இவை மட்டுமின்றி பைக்கின் காற்று இயக்கவியலிலும் கவாஸாகி நிறுவனம் அப்டேட் பணிகளை மேற்கொண்டுள்ளது.

2021 கவாஸாகி நிஞ்சா 1000எஸ்எக்ஸ் பிஎஸ்6 பைக் இந்தியாவில் அறிமுகம்... ஆரம்ப விலை ரூ.10.79 லட்சம்...

ஸ்மார்ட்போனை ரிடியோலாஜி ஆப் மூலமாக இணைக்கக்கூடிய 4.3 இன்ச் டிஎஃப்டி இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டரை கொண்டுள்ள புதிய நிஞ்சா 1000எஸ்எக்ஸ் பைக் எல்இடி தரத்தில் முன் மற்றும் பின்புறத்தில் விளங்குகளை கொண்டுள்ளது.

MOST READ: உங்க பைக்கிற்கு எவ்வளவு இன்ஸ்யூரன்ஸ் பிரிமீயம்னு தெரியணுமா?... இங்கே க்ளிக் பண்ணுங்க

2021 கவாஸாகி நிஞ்சா 1000எஸ்எக்ஸ் பிஎஸ்6 பைக் இந்தியாவில் அறிமுகம்... ஆரம்ப விலை ரூ.10.79 லட்சம்...

இதன் முந்தைய தலைமுறை பைக்கில் 3 நிலைகளாக மட்டுமே அட்ஜெஸ்ட் செய்யும் வகையில் இருந்த விண்ட்ஸ்க்ரீன் இந்த புதிய தலைமுறை பைக்கில் நான்கு விதமாக அட்ஜெஸ்ட் செய்யும் விதத்தில் வழங்கப்பட்டுள்ளது. இவற்றுடன் பைக்கில் அமர்பவர்களுக்கு சவுகரியமாக இருக்க வேண்டும் என்பதற்காக இருக்கைகள் முன்பை விட சற்று தடிமனாகவும் கூடுதல் குஷினுடனும் வடிவமைக்கப்பட்டுள்ளன.

2021 கவாஸாகி நிஞ்சா 1000எஸ்எக்ஸ் பிஎஸ்6 பைக் இந்தியாவில் அறிமுகம்... ஆரம்ப விலை ரூ.10.79 லட்சம்...

அதேநேரம் அகலமாகவும் உள்ள இதன் இருக்கைகளில் பின்புறத்தில் அமர்பவருக்கான பில்லன் கூடுதல் நீளமாக வழங்கப்பட்டுள்ளது. என்ஜின் அமைப்பை பொறுத்தவரையில் புதிய கவாஸாகி நிஞ்சா 1000எஸ்எக்ஸ் பைக் பிஎஸ்6 தரத்தில் 1,043சிசி லிக்யூடு-கூல்டு இன்-லைன் 4-சிலிண்டர் என்ஜினை பெற்றுள்ளது.

2021 கவாஸாகி நிஞ்சா 1000எஸ்எக்ஸ் பிஎஸ்6 பைக் இந்தியாவில் அறிமுகம்... ஆரம்ப விலை ரூ.10.79 லட்சம்...

அதிகப்பட்சமாக 10,000 ஆர்பிஎம்-ல் 140 பிஎச்பி பவரையும், 8,000 ஆர்பிஎம்-ல் 111 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் இந்த என்ஜின் உடன் ட்ரான்ஸ்மிஷனிற்கு 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. மேற்கூறப்பட்டுள்ள மாற்றங்களை தவிர்த்து புதிய 1000எஸ்எக்ஸ் பைக் புதிய எலக்ட்ரானிக்ஸையும் கொண்டுள்ளது.

2021 கவாஸாகி நிஞ்சா 1000எஸ்எக்ஸ் பிஎஸ்6 பைக் இந்தியாவில் அறிமுகம்... ஆரம்ப விலை ரூ.10.79 லட்சம்...

இந்த எலக்ட்ரானிக்ஸ் தொகுப்பில், எலக்ட்ரானிக் த்ரோட்டல் வால்வுகள், எலக்ட்ரானிக் க்ரூஸ் கண்ட்ரோல், விரைவான-ஷிஃப்டர், கார்னரிங் மேனேஜ்மெண்ட் செயல்பாடு, தரமான ஆண்டி-லாக் ப்ரேக் சிஸ்டம், அதிக எண்ணிக்கையில் ரைடிங் மோட்கள் மற்றும் 3-நிலை ட்ராக்‌ஷன் கண்ட்ரோல் சிஸ்டம் உள்ளிட்டவை அடங்குகின்றன.

MOST READ: பட்டுனு பைக் இன்ஸ்யூரன்ஸ் புதுப்பிக்கணுமா?... சட்டுனு இங்கே க்ளிக் பண்ணுங்க!

2021 கவாஸாகி நிஞ்சா 1000எஸ்எக்ஸ் பிஎஸ்6 பைக் இந்தியாவில் அறிமுகம்... ஆரம்ப விலை ரூ.10.79 லட்சம்...

மெட்டாலிக் க்ராஃபைட் க்ரே/மெட்டாலிக் டியாப்லோ ப்ளாக் மற்றும் மரகதத்தால் மெருகூட்டப்பட்ட பச்சை/மெட்டாலிக் கார்பன் க்ரே/மெட்டாலிக் க்ராஃபைட் க்ரே என்ற இரு நிறத்தேர்வுகளில் இந்தியாவில் சந்தைப்படுத்தப்பட்டுள்ள இந்த 2021 கவாஸாகி நிஞ்சா 1000எஸ்எக்ஸ் பைக் மாடல் தான் அதன் பிரிவில் மற்ற பைக்குகளை காட்டிலும் முதலாவதாக பிஎஸ்6 அப்டேட்டை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

More from DriveSpark

Article Published On: Saturday, May 30, 2020, 15:30 [IST]
English summary
2021 kawasaki ninja 1000SX India Launch
மேலும்... #கவாஸாகி #kawasaki
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+