ஊரடங்கு நேரத்திலும் பிஎஸ்6 கவாஸாகி நிஞ்சா 650 பைக் இந்தியாவில் அறிமுகம்..!

சில தினங்களுக்கு முன்பு டீலர்கள் முன்பதிவுகளை ஏற்க துவங்கியதை அடுத்து தற்போது கவாஸாகி நிறுவனத்தில் இருந்து 2020 நிஞ்சா 650 பைக் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. எக்ஸ்ஷோரூமில் ரூ.6.24 லட்சத்தை விலையாக பெற்றுள்ள இந்த 650சிசி பைக்கை பற்றி விரிவாக இந்த செய்தியில் பார்ப்போம்.

ஊரடங்கு நேரத்திலும் பிஎஸ்6 கவாஸாகி நிஞ்சா 650 பைக் இந்தியாவில் அறிமுகம்..!

இந்த விலை நிஞ்சா 650 மாடலின் முந்தைய தலைமுறை பைக்கை விட ரூ.35,000 அதிகம் என்றாலும், கவாஸாகி நிறுவனம் இந்த பைக் குறித்து வெளியிட்டு இருந்த விலையை காட்டிலும் சற்று குறைவு. விலை அதிகரிக்கப்படாலும் இதன் என்ஜின் அமைப்பில் எந்த மாற்றமும் கொண்டுவரப்படவில்லை.

ஊரடங்கு நேரத்திலும் பிஎஸ்6 கவாஸாகி நிஞ்சா 650 பைக் இந்தியாவில் அறிமுகம்..!

இதனால் வழக்கமான 649சிசி இணையான-இரட்டை என்ஜினை தான் பிஎஸ்6 தரத்தில் இந்த 2020 பைக் கொண்டுள்ளது. அதேபோல் இந்த என்ஜின் வெளிப்படுத்தக்கூடிய ஆற்றல் அளவுகளிலும் எந்த மாற்றமும் இல்லாமல் 68 பிஎச்பி ஆக தான் உள்ளது.

ஊரடங்கு நேரத்திலும் பிஎஸ்6 கவாஸாகி நிஞ்சா 650 பைக் இந்தியாவில் அறிமுகம்..!

இருப்பினும் என்ஜினின் டார்க் திறன் 65.7 என்எம்-ல் இருந்து 64 என்எம்-ஆக குறைக்கப்பட்டுள்ளது. பைக்கில் அப்டேட்டாக திருத்தியமைக்கப்பட்ட எக்ஸாஸ்ட் மற்றும் ஏர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. பைக்கின் கெர்ப் எடையில் எந்த மாற்றமும் இல்லை, 196 கிலோ தான்.

ஊரடங்கு நேரத்திலும் பிஎஸ்6 கவாஸாகி நிஞ்சா 650 பைக் இந்தியாவில் அறிமுகம்..!

டிசைன் அமைப்பை பார்க்கும்போதும் தான் 2020 வெர்சனுக்காக நிஞ்சா 650 மாடல் சில அப்டேட்களை பெற்றுள்ளது தெரிகிறது. ஏனெனில் இந்த புதிய பைக் மாடலின் முன்புறம், இந்நிறுவனத்தின் சமீபத்திய அறிமுகங்களான நிஞ்சா 400, இசட்எக்ஸ்-6ஆர் மற்றும் வெர்ஸஸ் 1000 பைக்குகளுடன் ஒத்து காணப்படுகிறது.

ஊரடங்கு நேரத்திலும் பிஎஸ்6 கவாஸாகி நிஞ்சா 650 பைக் இந்தியாவில் அறிமுகம்..!

இந்த வகையில் நீண்ட மூக்கு வடிவிலான தோற்றத்தை பெற்றுள்ள பைக்கின் முன்புறம் எல்இடி ஹெட்லைட் உடன் உள்ளது. பக்கவாட்டு பகுதியும் சிறிது ஒழுங்கப்படுத்தப்பட்டுள்ளதால் புதிய நிஞ்சா 650 மாடல் முந்தைய வெர்சனை காட்டிலும் கவனிக்கத்தக்க வகையில் கூர்மையான தோற்றத்திற்கு மாறியுள்ளது.

ஊரடங்கு நேரத்திலும் பிஎஸ்6 கவாஸாகி நிஞ்சா 650 பைக் இந்தியாவில் அறிமுகம்..!

விண்ட்ஷீல்டும் புதியதாக பொருத்தப்பட்டுள்ளது. டிசைன் மாற்றங்கள் பைக்கின் பின்புறத்திலும் தொடர்ந்துள்ளன. அதாவது அகலாமான மற்றும் தடிமனான இருக்கையை இந்த 2020 பைக் பெற்றுள்ளது. சக்கரங்களில் டன்லப் ஸ்போர்ட்மேக்ஸ் ரோட்ஸ்போர்ட் 2 டயர்கள் பொருத்தப்பட்டுள்ளன.

ஊரடங்கு நேரத்திலும் பிஎஸ்6 கவாஸாகி நிஞ்சா 650 பைக் இந்தியாவில் அறிமுகம்..!

இவற்றுடன் 2020 நிஞ்சா 650 மாடல் ப்ளூடூத், ஜிபிஎஸ் லாக்ஸ் மற்றும் ஸ்மோர்ட்போன் உடன் இணைக்கக்கூடிய முழு-டிஎஃப்டி இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டரையும் கொண்டுள்ளது. நிஞ்சா 650 மாடலுடன் விரைவில் இந்திய சந்தைக்கு வரவுள்ள பிஎஸ்6 இசட்650 மற்றும் இசட்900 மாடல்களின் விலைகளையும் கவாஸாகி நிறுவனம் முன்னதாக வெளியிட்டு இருந்தது.

ஊரடங்கு நேரத்திலும் பிஎஸ்6 கவாஸாகி நிஞ்சா 650 பைக் இந்தியாவில் அறிமுகம்..!

ஆனால் அப்போது கூறப்பட்ட விலையை விட நிஞ்சா 650 தற்போது குறைவான விலையை பெற்றுள்ளதால், பிஎஸ்6 இசட்650 மற்றும் இசட்900 மாடல்களின் எக்ஸ்ஷோரூம் விலைகளையும் அறிவிக்கப்பட்டதை விட குறைவாக எதிர்பார்க்கலாம்.

More from DriveSpark

Article Published On: Tuesday, May 12, 2020, 8:30 [IST]
English summary
2020 Kawasaki Ninja 650 BS6 Launched In India
மேலும்... #கவாஸாகி #kawasaki
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+