கவாஸாகியின் புதிய 250சிசி பைக்... விலையை கேட்டால் மயக்கமே வந்துடும்...

கவாஸாகி நிறுவனம் ஒரு வழியாக புதிய நிஞ்சா இசட்எக்ஸ்-25ஆர் பைக்கின் விலையை அறிவித்துள்ளது. கவாஸாகியின் இந்த 250சிசி பைக்கை பற்றி விரிவாக இந்த செய்தியில் பார்ப்போம்.

கவாஸாகியின் புதிய 250சிசி பைக்... விலையை கேட்டால் மயக்கமே வந்துடும்...

புதிய இசட்எக்ஸ்-25ஆர் பைக் 15,990 நியூசிலாந்து டாலரில் நியூலாந்து சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்திய ரூபாயில் இதன் மதிப்பு 7.84 லட்சமாகும். இந்த விலையில் சில கூடுதல் தொகுப்புகளுடன் 2020 ஹோண்டா சிபிஆர் 650ஆர் பைக்கையே இந்தியாவில் வாங்க முடியும்.

கவாஸாகியின் புதிய 250சிசி பைக்... விலையை கேட்டால் மயக்கமே வந்துடும்...

கவாஸாகி நிறுவனம் 250சிசி பைக்கின் என்ஜின் அமைப்பில் இன்-லைன் 4 சிலிண்டர்களை வழங்கியுள்ளது. இது வழக்கமானதை விட 2 சிலிண்டர்கள் அதிகமாகும். இது சில பைக் ஆர்வலர்களை வருத்தமடைய செய்யலாம்.

கவாஸாகியின் புதிய 250சிசி பைக்... விலையை கேட்டால் மயக்கமே வந்துடும்...

சர்வதேச அளவில் புதிய இசட்எக்ஸ்-25ஆர் பைக்கிற்கான முன்பதிவுகளை ஏற்று வரும் கவாஸாகி நிறுவனம் இந்த பைக்கின் டெலிவிரி பணிகளை இந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் இருந்து துவங்க திட்டமிட்டுள்ளது. முன்னதாக இந்த பைக்கை கடந்த ஏப்ரல் மாதத்தில் இந்தோனிஷியாவில் அறிமுகப்படுத்த இந்நிறுவனம் திட்டமிட்டிருந்தது.

கவாஸாகியின் புதிய 250சிசி பைக்... விலையை கேட்டால் மயக்கமே வந்துடும்...

ஆனால் கொரோனாவினால் இந்த அறிமுகம் நின்று போனது. தெற்காசிய நாடுகளுக்கு கவாஸாகியின் இந்த புதிய பைக் மாடல் வருகிற ஜூலை-ஆகஸ்ட் மாதத்தில் வருகை தரவுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இவ்வாறு அறிமுகங்களை நெருங்கி வந்தாலும் இந்த பைக்கின் சிறப்பம்சங்களை தயாரிப்பு நிறுவனம் இன்னமும் மறைத்தே வைத்துள்ளது.

கவாஸாகியின் புதிய 250சிசி பைக்... விலையை கேட்டால் மயக்கமே வந்துடும்...

இருப்பினும் புதிய இசட்எக்ஸ்-25ஆர் பைக்கில் 250சிசி-ல் 4-சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டிருப்பது நமக்கு தெரியும். இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 45 பிஎச்பி பவரை வெளிப்படுத்தக்கூடியது. அதேபோல் இந்த பைக் ஹை-எண்ட் வசதிகளையும் தொழிற்நுட்பங்களையும் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கவாஸாகியின் புதிய 250சிசி பைக்... விலையை கேட்டால் மயக்கமே வந்துடும்...

இந்த வகையில் இந்த பைக்கில் வழங்கப்படலாம் என எதிர்பார்ப்பில் இருக்கும் அம்சங்களில் ஷோவா எஸ்எஃப்எஃப் பிக் பிஸ்டன் யுஎஸ்டி அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய ஃபோர்க், கிடைமட்டமான பேக்லிங் அட்ஜெஸ்டபிள் ரியர் சஸ்பென்ஷன், குயிக்‌ஷிப்டர், ஏபிஎஸ், பவர் மோட்கள், ட்ராக்‌ஷன் கண்ட்ரோல் உள்ளிட்டவை அடங்கும்.

கவாஸாகியின் புதிய 250சிசி பைக்... விலையை கேட்டால் மயக்கமே வந்துடும்...

மிகவும் நவீனமான தரத்தில் இந்த பைக்கில் பொருத்தப்படவுள்ள செமி-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல் ஆனது கியர் பொசிஷன் இண்டிகேட்டர் மற்றும் ஷிஃப்ட் இண்டிகேட்டர் உள்ளிட்ட வசதிகளை பெற்றிருக்கும். நிஞ்சா எச்2 ஹைபர் பைக்கில் இருந்து கற்று கொண்டதன் விளைவாக உயர்-இழுவிசை கொண்ட ஸ்டீல் சேசிஸால் புதிய இசட்எக்ஸ்-25ஆர் பைக்கை இந்நிறுவனம் தயாரித்துள்ளது.

கவாஸாகியின் புதிய 250சிசி பைக்... விலையை கேட்டால் மயக்கமே வந்துடும்...

இதற்கிடையில் நிஞ்சா இசட்எக்ஸ்-25ஆர் மாடலின் ரேஸ் வெர்சனையும் கவாஸாகி நிறுவனம் முன்னதாக வெளியிட்டு இருந்தது. இந்திய ஷோரூம்களுக்கு கவாஸாகி நிஞ்சா இசட்எக்ஸ்-25ஆர் பைக் அடுத்த ஆண்டு துவக்கத்தில் வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Thursday, June 11, 2020, 11:28 [IST]
English summary
Kawasaki Ninja ZX-25R price revealed. Pre-bookins open internationally, Deliveries wil begin from December
மேலும்... #கவாஸாகி #kawasaki
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+