மூன்று கவர்ச்சிகரமான நிறங்களில் வருகை தரவுள்ள 2021 கவாஸாகி இசட்900...
கவாஸாகி நிறுவனம் 2021 இசட்900 பைக்கை பற்றிய விபரங்களை வெளியிட்டுள்ளது. அவற்றை இந்த செய்தியில் பார்ப்போம்.

புதிய இசட்900 முக்கியமாக 2020ஆம் ஆண்டிற்காக மட்டுமே அப்டேட் செய்யப்பட்டுள்ளது. இதனால் புதிய மூன்று பெயிண்ட் அமைப்புகளை தவிர்த்து பெரிதாக வேறெந்த அப்கிரேடையும் இந்த பைக் பெறவில்லை.

குறுக்கு நெடுக்கான ப்ரேம்களுக்கு சிவப்பு மற்றும் பச்சை தேர்வு கொடுக்கப்பட்டுள்ளது. அவை கருப்பு பெயிண்ட் அமைப்புகள் மற்றும் பைக்கின் நிறத்திற்கு பொருந்திய ரிம் டேப்கள் மற்றும் கிராபிக்ஸ் ஆகியவற்றுடன் இணைக்கப்பட்டுள்ளன.

கவாஸாகி 2021 இசட்900-ஐ முத்தின் பனிப்புயல் வெள்ளையுடன் ஸ்பார்க் ப்ளாக் பெயிண்ட் அமைப்பிலும் கிடைக்கும். இந்த பெயிண்ட் அமைப்பில் குறுக்கு நெடுக்கான ட்ரெல்லிஸ் ஃப்ரேம் மற்றும் சக்கரங்கள் பச்சை நிறத்தில் வழங்கப்படும்.

இந்த புதிய பெயிண்ட் அமைப்பை தவிர்த்து 2021 இசட்900, 2020 இசட்900-ஐ தான் ஒத்து காணப்படுகிறது. இம்மாதத்தில் அறிமுகமான 2020 இசட்900-ன் விலை இந்திய எக்ஸ்ஷோரூமில் ரூ.7.99 லட்சமாக உள்ளது.

பைக்கின் முன்பக்கத்தை முழுவதும் ஆக்கிரமித்து எல்இடி ஹெட்லேம்ப், ப்ளூடூத் வசதி கொண்ட டிஎஃப்டி இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், ட்ராக்ஷன் கண்ட்ரோல், இரு பவர் மோட்கள் மற்றும் நான்கு ரைடிங் மோட்கள் இந்த கவாஸாகி பைக்கில் உள்ள சிறப்பம்சங்களாகும்.

இசட்900 பைக்கில் 948சிசி, இன்லைன்-4 சிலிண்டர் என்ஜின் பொருத்தப்படுகிறது. இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 123 பிஎச்பி மற்றும் 98.6 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது.

2021 இசட்900 சர்வதேச சந்தைகளை விரைவில் சென்றடையவுள்ளது. அதனை தொடர்ந்து அடுத்த ஆண்டு துவக்கத்தில் இசட்900 பைக்கிற்கான புதிய நிறங்களை இந்திய சந்தையில் கவாஸாகி நிறுவனம் கொண்டுவரவுள்ளது.


Click it and Unblock the Notifications








