புதிய கவாஸாகி வெர்சிஸ் 1000 பிஎஸ்6 மாடல் விற்பனைக்கு அறிமுகம்!

சிறிய விலை உயர்வுடன் கவாஸாகி வெர்சிஸ் 1000 பைக்கின் பிஎஸ்6 மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. கூடுதல் தகவல்களை தொடர்ந்து பார்க்கலாம்.

புதிய கவாஸாகி வெர்சிஸ் 1000 பிஎஸ்6 மாடல் விற்பனைக்கு அறிமுகம்!

இந்தியாவின் பிரிமீயம் வகை அட்வென்ச்சர் டூரர் பைக் மார்க்கெட்டில் கவாஸாகி வெர்சிஸ் 1000 பைக் மிக முக்கிய தேர்வாக இருந்து வருகிறது. இந்த நிலையில், புதிய பிஎஸ்6 மாசு உமிழ்வு விதிகளுக்கு ஏற்ற எஞ்சினுடன் இந்த பைக் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

புதிய கவாஸாகி வெர்சிஸ் 1000 பிஎஸ்6 மாடல் விற்பனைக்கு அறிமுகம்!

இந்த பைக்கில் பிஎஸ்6 தரத்திற்கு இணையான 1,043சிசி லிக்யூடு கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. 4 சிலிண்டர்கள் கொண்ட இந்த எஞ்சின் அதிகபட்சமாக 118 பிஎச்பி பவரையும், 102 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த பைக்கில் ஸ்லிப்பர் க்ளட்ச் வசதியுடன் கூடிய 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

புதிய கவாஸாகி வெர்சிஸ் 1000 பிஎஸ்6 மாடல் விற்பனைக்கு அறிமுகம்!

எஞ்சினை தவிர்த்து பெரிய மாற்றங்கள் எதுவும் இல்லை. இந்த பைக்கின் டிசைன் மற்றும் வண்ணத் தேர்வுகளில் மாற்றங்கள் இல்லை. ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த பியர்ல் ஸ்டார்டஸ்ட் ஒயிட்- மெட்டாலிக் ஸ்பார்க் பிளாக் மற்றும் கேண்டி லைம் க்ரீன் - மெட்டாலிக் ஸ்பார்க் பிளாக் ஆகிய வண்ணத் தேர்வுகளில் கிடைக்கும்.

புதிய கவாஸாகி வெர்சிஸ் 1000 பிஎஸ்6 மாடல் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய கவாஸாகி வெர்சிஸ் 1000 பைக்கில் கவாஸாகியின் பிரத்யேகமான கார்னரிங் மேனேஜ்மென்ட் புரோகிராம் வழங்கப்படுகிறது. இந்த தொழில்நுட்பம் மூலமாக பைக் வளைவுகளில் திரும்பும்போது நிலை தடுமாறாமலும், கீழே விழுவதை தவிர்க்கும் வகையிலும் செயல்படும். இதுதவிர்த்து, கவாஸாகி டிராக்ஷன் கன்ட்ரோல், இன்டெலிஜென்ட் ஆன்ட்டி லாக் பிரேக்குகள், எலெக்ட்ரானிக் க்ரூஸ் கன்ட்ரோல் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

புதிய கவாஸாகி வெர்சிஸ் 1000 பிஎஸ்6 மாடல் விற்பனைக்கு அறிமுகம்!

கவாஸாகி வெர்சிஸ் 1000 பைக் 2,270 மிமீ நீளமும், 895 மிமீ அகலமும், 1,400 மிமீ உயரமும் கொண்டது. இதன் வீல் பேஸ் 1,520 மிமீ ஆக உள்ளது. இந்த பைக் 225 கிலோ எடை கொண்டதுடன், 21 லிட்டர் கொள்திறன் உடைய பெட்ரோல் டேங்க் பொருத்தப்பட்டுள்ளது. தரையிலிருந்து இருக்கை உயரம் 840 மிமீ ஆக உள்ளது.

புதிய கவாஸாகி வெர்சிஸ் 1000 பிஎஸ்6 மாடல் விற்பனைக்கு அறிமுகம்!

இந்த பைக்கில் இரட்டை எல்இடி ஹெட்லைட்டுகள் இடம்பெற்றுள்ளன. இது முகப்புக்கு அதிக வசீகரத்தை கொடுக்கிரது. இந்த பைக்கில் நீண்ட தூரம் பயணிப்பதற்கு ஏதுவாக ஓட்டுபவர் மற்றும் பின்னால் அமர்ந்து செல்பவருக்கு வசதியான இருக்கைகள் கொடுக்கப்பட்டு இருப்பதும் முக்கிய அம்சமாக இருக்கும்.

புதிய கவாஸாகி வெர்சிஸ் 1000 பிஎஸ்6 மாடல் விற்பனைக்கு அறிமுகம்!

விண்ட் ஸ்க்ரீன் அமைப்பு உள்ளது. அடுத்து செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் அமைப்பு இடம்பெற்றிருக்கிறது. இதில், அனலாக் டாக்கோமீட்டர் பொருத்தப்பட்டுள்ளது. இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் அருகிலேயே சார்ஜர் கொடுக்கப்பட்டு இருப்பதும் குறிப்பிடத்தக்க விஷயம்.

புதிய கவாஸாகி வெர்சிஸ் 1000 பிஎஸ்6 மாடல் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய கவாஸாகி வெர்சிஸ் 1000 பைக்கில் 150 மிமீ டிராவல் கொண்ட 43 மிமீ அப்சைடு டவுன் ஃபோர்க்குகளுடன் முன்புற சஸ்பென்ஷனும், பின்புறத்தில் முழுமையாக அட்ஜெஸ்ட் செய்யும் வசதி கொண்ட மோனோ ஷாக் அப்சார்பரும் பொருத்தப்பட்டுள்ளது. இந்த பைக்கின் முன்புறத்தில் 310 மிமீ விட்டமுடைய இரண்டு டிஸ்க்குகள் கொண்ட பிரேக் சிஸ்டமும், பின்புறத்தில் 250 மிமீ டிஸ்க் கொண்ட பிரேக் சிஸ்டமும் உள்ளன.

புதிய கவாஸாகி வெர்சிஸ் 1000 பிஎஸ்6 மாடல் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய கவாஸாகி வெர்சிஸ் 1000 பைக்கிற்கு ரூ.10.99 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பிஎஸ்4 மாடலைவிட ரூ.10,000 கூடுதல் விலையில் பிஎஸ்6 மாடல் வந்துள்ளது. வரும் வாரங்களில் பிஎஸ்6 எஞ்சின் கொண்ட புதிய மாடல்களை கவாஸாகி அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Tuesday, May 19, 2020, 11:28 [IST]
English summary
Kawasaki India Motorcycle has silently launched the Versys 1000 BS6 in the India market. The touring motorcycle now retails at a price of Rs 10.99 lakh, ex-showroom (India). The 2020 Versys has received a hike of Rs 10,000 over its BS4 counterpart.
மேலும்... #கவாஸாகி #kawasaki
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+