சற்று கூடுதல் விலையுடன் கவாஸாகி இசட்650 பிஎஸ்6 பைக் இந்தியாவில் அறிமுகம்...
கவாஸாகி இந்தியா நிறுவனம் சற்று கூடுதலான எக்ஸ்ஷோரூம் விலையுடன் பிஎஸ்6 தரத்திற்கு இணக்கமாக மேம்படுத்தப்பட்ட புதிய இசட்650 பைக்கை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. விலை அதிகரிப்பிற்கு ஏற்ப இந்த பைக்கில் கொண்டுவரப்பட்டுள்ள அப்டேட்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

கடந்த ஏப்ரல் மாதம் முதல் இந்தியாவில் புதிய மாசு உமிழ்வு விதி நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டு விட்டதால் இந்த 650சிசி பைக்கை கவாஸாகி நிறுவனம் கடந்த மார்ச் மாத இறுதியிலேயே சந்தைக்கு கொண்டு வந்து இருந்தது. ஆனால் தற்போது தான் ஊரடங்கில் சற்று தளர்வு கொண்டுவரப்பட்டிருப்பதால் வாடிக்கையாளர்களிடம் இப்போது தான் இந்த பைக் கவனத்தை பெற்று வருகிறது.

கடந்த பிப்ரவரி மாதம் டெல்லியில் நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த புதிய கவாஸாகி இசட்650 பைக் மெட்டாலிக் ஸ்பார்க் ப்ளாக் என்ற ஒற்றை நிறத்தில் மட்டுமே சந்தைப்படுத்தப்பட்டுள்ளது. இதன் முந்தைய தலைமுறை ரூ.5.69 லட்சத்தில் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் பிஎஸ்6-க்கு அப்டேட் செய்யப்பட்ட இந்த புதிய பைக் ரூ.6.25 லட்சத்தில் இருந்து ரூ.6.50 லட்சம் வரையில் எக்ஸ்ஷோரூம் விலையை பெற்றுள்ளது.
MOST READ: மழைகாலங்களில் நீரினால் வாகனங்கள் பாதிப்படையாமல் தடுப்பது எப்படி..? எளிய முறைகள் இதோ...

கவாஸாகி நிறுவனத்தின் இசட் ‘சுகோமி' ஸ்டைலில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த பிஎஸ்6 பைக்கில் எல்இடி ஹெட்லைட்ஸ், 4.3 இன்ச்சில் டிஎஃப்டி கலர் இன்ஸ்ட்ரூமெண்டேஷன், ஸ்மார்ட்போனை இணைக்க ரைடியோலாஜி ஆப்6 வசதி, டன்லப் ஸ்போர்ட்ஸ்மேக்ஸ் ரோட்ஸ்போர்ட் டயர்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.

இவற்றில் குறிப்பாக எல்இடி ஹெட்லைட்டும் டிஎஃப்டி இன்ஸ்ட்ரூமெண்ட் திரையும் பைக்கிற்கு இளமையான தோற்றத்தை வழங்குகின்றன. இவற்றுடன் எடை குறைவான சேசிஸ் பாகங்கள் மற்றும் சவுகரியமான பயணத்திற்கு பிளவுப்படாத இணைப்பு இருக்கை அமைப்பு போன்றவற்றையும் இந்த பிஎஸ்6 பைக் பெற்றுள்ளது.
MOST READ: உங்க பைக்கிற்கு எவ்வளவு இன்ஸ்யூரன்ஸ் பிரிமீயம்னு தெரியணுமா?... இங்கே க்ளிக் பண்ணுங்க

சஸ்பென்ஷன் மற்றும் ப்ரேக்கிங் பணிகளுக்கு முன்புறத்தில் 41மிமீ டெலிஸ்கோபிக் ஃபோர்க்ஸ் மற்றும் ட்யூல்-பிஸ்டன் காலிபர்களை கொண்ட சிறிது சுழலக்கூடிய 300மிமீ பெடல் டிஸ்க்கை கொண்டுள்ள இந்த பைக் பின்புறத்தில் கிடைமட்டமான பேக்-லிங் மோனோஷாக் மற்றும் சிங்கிள்-பிஸ்டன் பெடல் டிஸ்க்கையும் கொண்டுள்ளது.

புதிய இசட்650 பைக்கில் பிஎஸ்6 தரத்திற்கு இணக்கமான 649சிசி லிக்யூடு-கூல்டு இணையான இரட்டை என்ஜினை கவாஸாகி நிறுவனம் பொருத்தியுள்ளது. இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 8,000 ஆர்பிஎம்-ல் 68 பிஎச்பி பவரையும், 6,700 ஆர்பிஎம்-ல் 64 என்எம் டார்க் திறனையும் பைக்கிற்கு வழங்கும்.

இதன் முந்தைய தலைமுறை பைக்கில் பிஎஸ்4 தரத்தில் வழங்கப்பட்டிருந்த இந்த என்ஜின் இதே ஆற்றல் அளவை தான் வெளிப்படுத்தியது என்றாலும், இதன் டார்க் திறன் பிஎஸ்6 அப்டேட்டால் 1.7 என்எம் அளவிற்கு அதிகரித்துள்ளது. அதேபோல் இந்த பைக் இதன் பிஎஸ்4 வெர்சனை காட்டிலும் எடையை 3 கிலோ குறைவாக கொண்டுள்ளது.

இந்த பிஎஸ்6 பைக்கின் மொத்த கெர்ப் எடை 187 கிலோ ஆகும். இதன் பெட்ரோல் டேங்க் 15 லிட்டர் கொள்ளளவை கொண்டது. மற்றப்படி தரையில் இருந்து பைக்கின் இருக்கையின் உயரம் 790மிமீ மற்றும் க்ரவுண்ட் க்ளியரென்ஸ் 130மிமீ உள்ளிட்டவற்றில் எந்த மாற்றமும் கொண்டுவரப்படவில்லை.
MOST READ: பட்டுனு பைக் இன்ஸ்யூரன்ஸ் புதுப்பிக்கணுமா?... சட்டுனு இங்கே க்ளிக் பண்ணுங்க!

கவாஸாகி நிறுவனத்தால் புதியதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய இசட்650 பிஎஸ்6 பைக்கிற்கு விற்பனையில் போட்டியினை கொடுக்க சிஎஃப் மோட்டோ 650 என்கே, பெனெல்லி டிஎன்டி 600ஐ மற்றும் லியோன்சினோ 500 போன்ற மாடல்கள் தயாராக உள்ளன.


Click it and Unblock the Notifications








