கவாஸாகி இசட்900 பிஎஸ்-4 லிமிடேட் எடிசன் மாடல் விற்பனைக்கு அறிமுகம்!
கவாஸாகி இசட்900 பைக்கின் பிஎஸ்-4 லிமிடேட் எடிசன் மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

வாகனங்களுக்கான புதிய பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகள் விரைவில் அமலுக்கு வர இருக்கும் நிலையில், அனைத்து நிறுவனங்களும் பிஎஸ்-6 மாடல்களை அறிமுகப்படுத்துவதற்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றன. இந்த நிலையில், கவாஸாகி நிறுவனம் இசட்900 பிஎஸ்-4 பைக்கின் லிமிடேட் எடிசன் மாடலை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது.

வரும் மார்ச் 31ந் தேதி வரை பிஎஸ்-4 எஞ்சின் மாடல்களை விற்பனை செய்வதற்கு கால அவகாசம் இருக்கும் நிலையில், இந்த பைக் வரும் மார்ச் 20ந் தேதி வரை விற்பனையில் இருக்கும் என்று கவாஸாகி நிறுவனம் தெரிவித்துள்ளது.

புதிய கவாஸாகி இசட்900 பிஎஸ்-4 பைக்கின் லிமிடேட் எடிசன் மாடலில் எல்இடி ஹெட்லைட் மற்றும் எச்-2 ஹைப்பர் பைக் போன்ற ஹெட்லைட்டிற்கு பின்புறம் கூடுதல் ஸ்கூப்புகளுடன் மிரட்டலாக காட்சியளிக்கிறது.

அதேபோன்று, பெட்ரோல் டேங்க்கிலும், டெயில் லைட் பகுதியிலும் கூடுதல் ஸ்கூப் அமைப்பு மூலமாக கூடுதல் வசீகரத்தை பெற்றிருக்கிறது. மேலும், இந்த பைக்கின் ட்ரெல்லிஸ் ஃப்ரேம் அமைப்பு வெளியில் தெரியும்படி சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இநத் பைக்கில் Z வடிவிலான டெயில் லைட் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

இந்த பைக்கில் 3 லெவல் டிராக்ஷன் கன்ட்ரோல் சிஸ்டம், இரண்டு பவர் மோடுகள் உள்ளன. மேலும், சாலை மற்றும் காலநிலைக்கு தக்கவாறு எஞ்சின் இயக்கத்தை மாற்றிக் கொள்வதற்காக ஸ்போர்ட், ரோடு, ரெயின் மற்றும் ரைடர் என நான்குவிதமான ரைடிங் மோடுகள் உள்ளன.

இந்த பைக்கில் 4.3 அங்குல டிஎஃப்டி திரையுடன் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் உள்ளது. இந்த சாதனத்தை மொபைல்போனில் இணைத்துக் கொள்வதற்கான புளூடூத் இணைப்பு வசதியும் கூடுதலாக சேர்க்கப்பட்டு இருக்கிறது.

புதிய கவாஸாகி இசட்900 லிமிடேட் எடிசன் மாடலுக்கு ரூ.7.99 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த பைக்கின் சாதாரண பிஎஸ்-4 மாடலைவிட ரூ.30,000 கூடுதல் விலையில் இந்த லிமிடேட் எடிசன் பிஎஸ்-4 மாடல் வந்துள்ளது.

பிஎஸ்-6 எஞ்சின் பொருத்தப்பட்ட கவாஸாகி இசட்900 பைக் வரும் ஏப்ரல் மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும். பிஎஸ்-4 மாடலைவிட ரூ.50,000 முதல் ரூ.1 லட்சம் வரை கூடுதல் விலையில் பிஎஸ்-6 மாடல் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








