யமஹா பைக்கில் ஓவரா சீன் போட்ட சிறுமி! வீடு தேடி வந்த அதிகாரிகள்! அடுத்து நடந்ததுதான் செம்ம ட்விஸ்டே!

யமஹா நிறுவனத்தின் 2 ஸ்ட்ரோக் பைக்குகளில் ஒன்றான ஆர்எக்ஸ்-இசட் மாடலில் சிறுமி ஒருவர் ஜாலி ரைடு செய்வது போன்ற காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. இதுகுறித்த கூடுதல் தகவலை கீழே காணலாம்.

யமஹா பைக்கில் ஓவரா சீன் போட்ட சிறுமி... வீடு தேடி வந்த அதிகாரிகள்... அடுத்து என்ன நடந்தது தெரியுமா?

இந்தியாவில் காட்டுத் தீயைப் போல் கட்டுக்கடங்காமல் பரவிக் கொண்டிருக்கின்றது கொரோனா வைரஸ். இதைக்கூட மருந்து மற்றும் மாத்திரைகள் உள்ளிட்டவற்றால் கட்டுப்படுத்துவிடலாம், ஆனால் பெரும் தலைவலியை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் போக்குவரத்து விதிமீறல்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை என வருந்துகின்றனர் அத்துறைச்சார்ந்த அரசு ஊழியர்கள்.

யமஹா பைக்கில் ஓவரா சீன் போட்ட சிறுமி... வீடு தேடி வந்த அதிகாரிகள்... அடுத்து என்ன நடந்தது தெரியுமா?

கொரோனா வைரசைக் காட்டிலும் மிகக் கொடியதே போக்குவரத்து விதிமீறல்கள். இவற்றால் எண்ணற்ற அப்பாவி உயிர்கள் தினந்தோறும் உலகை விட்டு பிரிந்து வருகின்றன. ஒருவர் செய்யும் விதிமீறல், அவரை மட்டுமின்றி அவ்வழியில் வரும் பிறரையும் மிகக் கடுமையாகப் பாதிக்கின்றது. எனவேதான் போக்குவரத்து விதிமீறல்களுக்கு எதிராக மிகக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

யமஹா பைக்கில் ஓவரா சீன் போட்ட சிறுமி... வீடு தேடி வந்த அதிகாரிகள்... அடுத்து என்ன நடந்தது தெரியுமா?

இருப்பினும் விதிமீறல்கள் குறைந்தபாடில்லை. அதிலும், கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் பொது முடக்கத்தில் இருந்த நேரத்தில், பலர் விதிமீறல்களை பிழைப்பாகவே செய்து வருக்கின்றனர். நாடு முழுவதும் வாகன போக்குவரத்து குறைந்திருந்ததை, தங்களுக்காகவே இந்த நிலையை ஏற்படுத்திக் கொடுத்திருப்பதாக எண்ணிய சிலர், வாகன சாகசம் மற்றும் ஜாலி ரைடு உள்ளிட்டவற்றில் ஈடுபட்டனர்.

யமஹா பைக்கில் ஓவரா சீன் போட்ட சிறுமி... வீடு தேடி வந்த அதிகாரிகள்... அடுத்து என்ன நடந்தது தெரியுமா?

அவ்வாறு விதிமீறலில் ஈடுபட்ட 14 வயது சிறுமிக்கே போலீஸார் உச்சபட்ச அபராதத்தினை வழங்கியிருக்கின்றனர். கடவுளின் தேசம் என்றழைக்கப்படும் கேரளாவில்தான் இந்த சம்பவம் அரங்கேறியிருக்கின்றது. பொதுவாக இளைஞர்கள் மத்தியில் தற்போதும் யமஹா நிறுவனத்தின் 2-ஸ்ட்ரோக் மோட்டார்சைக்கிளான ஆர்எக்ஸ்-இசட் மீது ஈர்ப்பு நிலவி வருகின்றது.

யமஹா பைக்கில் ஓவரா சீன் போட்ட சிறுமி... வீடு தேடி வந்த அதிகாரிகள்... அடுத்து என்ன நடந்தது தெரியுமா?

அந்தவகையில், இந்த பைக்கின்மீது அதிக ஈர்ப்புடைய சிறுமியே அதனை அதிக வேகத்தில் பொது சாலையில் இயக்கியிருக்கின்றார். அப்போது, அச்சிறுமி ஹெல்மெட் அணியவில்லை என கூறப்படுகின்றது. எனவேதான், அப்பகுதி வாசிகள் சிலர், சிறுமியின் விதிமீறல்குறித்து அம்மாநில போக்குவரத்துத்துறையின் அதிகாரப்பூர்வ முகப்புத்தக பக்கத்தில் புகார் கொடுத்திருக்கின்றனர்.

யமஹா பைக்கில் ஓவரா சீன் போட்ட சிறுமி... வீடு தேடி வந்த அதிகாரிகள்... அடுத்து என்ன நடந்தது தெரியுமா?

இதுகுறித்து உடனடி நடவடிக்கை எடுக்கும் விதமாக போக்குவரத்துத்துறை அதிகாரிகள் சிறுமியின் வீடு தேடிச் சென்று அபராதத்திற்கான செல்லாணை வழங்கியிருக்கின்றனர். இதன்படி, உச்சபட்ச அபராதமாக சிறுமிக்கு ரூ. 20,500க்கான அபராத செல்லாண் வழங்கியதாகக் கூறப்படுகின்றது.

யமஹா பைக்கில் ஓவரா சீன் போட்ட சிறுமி... வீடு தேடி வந்த அதிகாரிகள்... அடுத்து என்ன நடந்தது தெரியுமா?

அதாவது, உரிய உரிமம் இல்லாதற்காக ரூ. 10 ஆயிரமும், மோட்டார்சைக்கிளை மாற்றியமைத்திருந்ததற்காக ரூ. 10 ஆயிரமும், ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தை இயக்கியற்கு ரூபாய் 500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

யமஹா பைக்கில் ஓவரா சீன் போட்ட சிறுமி... வீடு தேடி வந்த அதிகாரிகள்... அடுத்து என்ன நடந்தது தெரியுமா?

இருப்பினும், மோட்டார்சைக்கிள் மீதிருந்த அதீத ஆர்வத்தினால், மாஸ்க் மட்டுமே அணிந்தவாறு யமஹா ஆர்எக்ஸ்-இசட் பைக்கை அதி வேகத்தில் இயக்கியுள்ளார். இதனைக் கண்டிக்கும் விதமாக, கேரள மோட்டார் வாகனத்துறை அதிகாரிகள், அச்சிறுமிக்கு உச்சபட்ச அபராதத்தை வழங்கியது மட்டுமின்றி இனி இதுபோன்ற விதிமீறல்களில் ஈடுபடக்கூடாது என கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

யமஹா பைக்கில் ஓவரா சீன் போட்ட சிறுமி... வீடு தேடி வந்த அதிகாரிகள்... அடுத்து என்ன நடந்தது தெரியுமா?

சம்பவம்குறித்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகியதும் அதிகாரிகளின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு ஓர் காரணமாக அமைந்துள்ளது. அண்மைக் காலங்களாக பெண்கள் மட்டுமின்றி சிறுவர்கள் சிலரும் இருசக்கர வாகனங்களை இயக்கி வருகின்றார். இது பார்ப்பதற்கு மிகவும் சாதராணமான ஒன்றாக தெரிந்தாலும், மிகவும் ஆபத்தானதாகும். இதுமட்டுமின்றி அவர்கள் ஹெல்மெட்டையும் பயன்படுத்துவதில்லை.

யமஹா பைக்கில் ஓவரா சீன் போட்ட சிறுமி... வீடு தேடி வந்த அதிகாரிகள்... அடுத்து என்ன நடந்தது தெரியுமா?

இந்த செயல் அவர்களுக்கு பேராபத்தை ஏற்படுத்தலாம். எனவேதான் விதிமீறி வாகனங்களை இயக்கும் சிறுவர்களை மட்டுமின்றி அவர்களின் பெற்றோர்களுக்கும் உரிய தண்டனை வழங்கப்படுகின்றது. அதாவது, சிறுவர்களை வாகனங்களை இயக்க அனுமதித்தால், குறிப்பிட்ட வாகனத்தின் உரிமையாளர் மற்றும் சிறுவர்களின் பெற்றோர்கள் உள்ளிட்டோருக்கு உச்சபட்ச அபராதம் மற்றும் சிறைத் தண்டனை வரை வழங்கப்படுகின்றது.

யமஹா பைக்கில் ஓவரா சீன் போட்ட சிறுமி... வீடு தேடி வந்த அதிகாரிகள்... அடுத்து என்ன நடந்தது தெரியுமா?

இந்திய சாலையில் போக்குவரத்து விதிமீறல் என்பது மிகவும் சர்வ சாதாரணமான ஓர் விஷயமாக மாறி வருகின்றது. இதனால் அரங்கேறும் விபத்துகளின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் உயர்ந்து வருகின்றது. எனவேதான் இதனைக் கட்டுப்படுத்தும் விதமாக போக்குவரத்துத்துறை போலீஸார் இரும்புக் கரம் கொண்டு விதிமீறல்வாதிகளை ஒடுக்கி வருகின்றனர். இதனடிப்படையிலேயே 14 வயது சிறுமிக்கு உச்சபட்ச அபராதம் வழங்கப்பட்டிருக்கின்றது.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Kerala Girl Viral Yamaha RXZ Video MVD Caught Rider For Riding Bike Without Helmet. Read in Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X