லூனா மொபட் நியாபகம் இருக்காங்க... புதிய அவதாரத்தில் வருகிறதாம்... இனிமேதான் செம்ம ஆட்டம் இருக்கு!
இளைஞர்களின் மனதைக் கொள்ளைக் கொள்ளும் வகையில் கைனடிக் இஞ்ஜினியரிங் நிறுவனம், அதன் லூனா மொபட்டை எலெக்ட்ரிக் வெர்ஷனில் மீண்டும் இந்தியாவில் களமிறக்க திட்டுமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் மின்சார வாகனங்களுக்கான தேவை நாளுக்கு அதிகரித்த வண்ணம் இருக்கின்றது. இதன் வெளிப்பாடாக உள் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில், அதன் புது முக மின் வாகனங்களை களமிறக்கி வருகின்றன.
அந்தவகையில், மிகவும் பழைமையான நிறுவனங்களில் ஒன்றான கைனடிக் நிறுவனம் இந்தியாவில் அதன் புதுமிக மின்சார இருசக்கர வாகனம் ஒன்றை களமிறக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Image Courtesy: Cherubino/Wiki Commons
இதுகுறித்து எக்ஸ்பிரஸ் டிரைவ்ஸ் வெளியிட்டுள்ள தகவலின்படி, கைனடிக் நிறுவனம், அதன் பிரபல தயாரிப்புகளில் ஒன்றான லூனா மொபட் அடிப்படையில் புதிய மின்சார இருசக்கர வாகனம் அறிமுகம் செய்ய இருப்பது தெரியவந்துள்ளது.
இந்தியாவின் கடந்த காலங்களில் மிகவும் ஃபேமஸான டூ வீலராக வலம் வந்த மொபட்டுகளில் லூனாவும் ஒன்று. இந்த மொபட்டை கைனடிக் நிறுவனம் முதல் முறையாக 1972ம் ஆண்டில்தான் அறிமுகம் செய்தது.

டிஎஃப்ஆர் எனும் பெயரில் அமெரிக்காவிலும், லூனா எனும் பெயரில் இந்தியாவிலும் களமிறக்கப்பட்டது. பியாஜியோ நிறுவனத்தின் சியாவோ (Piaggio Ciao) எனும் மாடலை தழுவி உருவாக்கப்பட்ட மொபட் லூனா ஆகும். எனவேதான் கைனடிக் நிறுவனம், பியாஜியோ நிறுவனத்திடம் இருந்து காப்புரிமை பெற்று லூனாவை களமிறக்கியது.

அப்போது, 50 சிசி திறன் கொண்ட மொபட்டாக அது களமிறக்கப்பட்டது. இந்த நிலையில்தான் இதன்மூலம் மீண்டும் இந்திய இருசக்கர வாகன சந்தையை அதகளப்படுத்த கைனடிக் இஞ்ஜினியரிங் நிறுவனம் திட்டமிட்டிருக்கின்றது.
இதற்காக அது மின்சார வாகன சந்தையை தேர்ந்தெடுத்திருக்கின்றது. ஆகவே கூடிய விரைவில் லூனா மின்சார வெர்ஷனில் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அவ்வாறு, விரைவில் எதிர்பார்க்கப்படும் லூனா எலெக்ட்ரிக் மொபட்டில் 1கிலேவாட் திறன் கொண்ட மின் மோட்டார் இடம் பெற இருப்பதாகக் கூறப்படுகின்றது. இதற்கு தேவையான மின்சார திறனை வழங்குவதற்காக லித்தியம் அயன் பேட்டரி இணைக்கப்பட இருக்கின்றது.

இந்த பேட்டரி ஒரு முழுமையான சார்ஜில் 80 கிமீ வரை ரேஞ்ஜை வழங்கும். இதேபோன்று, இதன் மின் மோட்டார் அதிகபட்சமாக மணிக்கு 25கிமீ வேகத்தில் பயணிக்கும் திறனைக் கொண்டிருக்கும் என கூறப்படுகின்றது. இத்துடன், கைனடிக் லூனா எலெக்ட்ரிக் மொபட்டில் ஏராளமான தொழில்நுட்ப அம்சங்களும் எதிர்பார்க்கப்படுகின்றன.

அதிக தொழில்நுட்ப வசதி மற்றும் ரேஞ்ஜைக் கொண்டு இந்த எலெக்ட்ரிக் மொபட் களமிறங்க இருப்பதால் இது ரூ. 50 ஆயிரம் வரை விலையைப் பெற்று களமிறங்கும் என ஆட்டோதுறை வல்லுநர்கள் யூகிக்கப்படுகின்றனர். கைனடி நிறுவனம், இந்த புது முக லூனாவை இளம் தலைமுறையினரை மனதில் கொண்டே உருவாக்கி வருகின்றது.

முக்கியமாக ஐடி ஊழியர்கள், தினசரி இருசக்கர வாகனங்களைப் பயன்படுத்துவோர் ஆகியோர்களின் தேவையை உணர்ந்து இந்த மொபட்டைத் தயாரித்து வருகின்றது.
எனவே, இளம் தலைமுறையினரைக் கவரக்கூடிய பல்வேறு விதமான நிறத் தேர்வு மற்றும் அம்சங்களைக் கொண்டு இது விரைவில் இந்திய சாலைகளை அதகளப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கைனடிக் நிறுவனம் ஏற்கனவே இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களை களமிறக்க ஆரம்பித்துவிட்டது. இதன்படி, இந்நிறுவனத்தின் அண்மை அறிமுகமாக எலெக்ட்ரிக் கொரோனா கொல்லி மூன்று சக்கர வாகனம் இருக்கின்றது.
தற்போது உலகையே வாட்டி வதைக்குக் கொண்டிருக்கும் கொரோனா வைரசை அழிக்கும் விதமாக கைனடிக் நிறுவனம் அதில் அம்சங்களைச் சேர்த்திருந்தது.

அதாவது, பொது வெளியில் கிருமி நாசினிகளைத் தெளிக்கின்ற விதமாக கருவிகளுடன் அது விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.
கொரோனாவை அழிப்பது மட்டுமின்றி சுற்றுப்புறத்தைத் தூய்மை செய்கின்ற வகையிலான கருவிகளையும் கைனடிக் நிறுவனம் நிலை நிறுத்தியிருந்தது குறிப்பிடத்தகுந்தது.


Click it and Unblock the Notifications








