கேடிஎம் 390 அட்வென்ஜெர் பைக்கின் டெலிவிரிகள் ஆரம்பம்..!

கடந்த ஜனவரி மாதம் முன்பதிவு துவங்கியதை அடுத்து தற்போது கேடிஎம் 390 அட்வென்ஜெர் பைக்கின் டெலிவிரிகள் துவங்கியுள்ளன. இதுகுறித்த முழுமையான விபரங்களை இந்த செய்தியில் காண்போம்.

கேடிஎம் 390 அட்வென்ஜெர் பைக்கின் டெலிவிரிகள் ஆரம்பம்..!

390 அட்வென்ஜெர் மாடல் பைக்கை முதன்முதலாக கடந்த ஆண்டு இறுதியில் இத்தாலியில் நடைபெற்ற ஐக்மா கண்காட்சியில் கேடிஎம் நிறுவனம் அறிமுகப்படுத்தியிருந்தது. அதன்பின் கடந்த மாத துவக்கத்தில் இந்த அட்வென்ஜெர் பைக் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டது.

கேடிஎம் 390 அட்வென்ஜெர் பைக்கின் டெலிவிரிகள் ஆரம்பம்..!

முன்பதிவை போல் இந்த பைக்கின் டெலிவிரியும் மிக விரைவாகவே துவங்கப்பட்டுள்ளது. ரூ.2,99,000 என்ற விலையில் எக்ஸ்ஷோரூமில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள இந்த அட்வென்ஜெர் பைக்கின் சர்வதேச மாடல் இந்த பைக்கில் இருந்து சிறிது வித்தியாசமான தோற்றத்தை பெற்றுள்ளது.

கேடிஎம் 390 அட்வென்ஜெர் பைக்கின் டெலிவிரிகள் ஆரம்பம்..!

சர்வதேச மாடலில் இருந்து முன்புற சஸ்பென்ஷனை இழந்துள்ள இந்திய 390 அட்வென்ஜெர் மாடல், அதற்கு பதிலாக க்யூக்‌ஷிஃப்டர்+ அமைப்பை நிலையாக கொண்டுள்ளது. பின்புற சஸ்பென்ஷனிற்கு ப்ரீ லோட் அட்ஜெஸ்டபிள் மோனோஷாக் வழங்கப்பட்டுள்ளது.

கேடிஎம் 390 அட்வென்ஜெர் பைக்கின் டெலிவிரிகள் ஆரம்பம்..!

ஆஃப் ரோட்டிற்கென இந்த அட்வென்ஜெர் பைக் எடை குறைவான ட்ரெல்லிஸ் ப்ரேம்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. முன்புறத்தில் 19 இன்ச்சில் அலாய் சக்கரமும், பின்புறத்தில் 17 இன்ச்சில் அலாய் சக்கரமும் கொடுக்கப்பட்டுள்ளது.

கேடிஎம் 390 அட்வென்ஜெர் பைக்கின் டெலிவிரிகள் ஆரம்பம்..!

இந்த அலாய் சக்கரங்களை சுற்றிலும் க்னோபி மெட்சளேர் டயர்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவை மட்டுமின்றி, நீண்ட அளவில் விண்ட்ஷீல்டு மற்றும் என்ஜினை பாதுகாக்கும் பேஸ் ப்ளேட்டையும் இந்த 390 அட்வென்ஜெர் பைக் பெற்றுள்ளது.

கேடிஎம் 390 அட்வென்ஜெர் பைக்கின் டெலிவிரிகள் ஆரம்பம்..!

இந்த ஆஃப்-ரோட் பைக்கின் நீளம் 2,154மிமீ ஆகவும், அகலம் 900மிமீ ஆகவும், உயரம் 1,400மிமீ ஆகவும் உள்ளது. வீல்பேஸ்ஸின் அளவு 1,430மிமீ ஆக கொடுக்கப்பட்டுள்ளது. ஆஃப்-ரோட்டிற்கு வசதியாக அதிக அளவில், அதாவது கிட்டத்தட்ட 200மிமீ-ல் க்ரவுண்ட் கிளியரென்ஸை இந்த பைக் பெற்றுள்ளது.

கேடிஎம் 390 அட்வென்ஜெர் பைக்கின் டெலிவிரிகள் ஆரம்பம்..!

மேலும் 390 அட்வென்ஜெர் மாடல் பெட்ரோல் இல்லாமல் ட்ரை ஆக இருக்கும்போது 162 கிலோ எடை கொண்டது. இந்த பைக்கிற்கு 14.5 லிட்டர் கொள்ளளவு கொண்ட எரிபொருள் டேங்க் வழங்கப்பட்டுள்ளது. இவற்றுடன் சில அப்டேட்டான தொழிற்நுட்பங்களையும் இந்த பைக் கொண்டுள்ளது.

கேடிஎம் 390 அட்வென்ஜெர் பைக்கின் டெலிவிரிகள் ஆரம்பம்..!

டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், எல்இடி ஹெட் மற்றும் டெயில் லேம்ப்கள், ப்ளூடூத் இணைப்பு மற்றும் டர்ன் பை டர்ன் நாவிகேஷன் வசதியுடன் டிஎஃப்டி திரை உள்ளிட்டவை இந்த பைக்கில் வழங்கப்பட்டுள்ள அப்டேட்டான தொழிற்நுட்பங்களாகும்.

கேடிஎம் 390 அட்வென்ஜெர் பைக்கின் டெலிவிரிகள் ஆரம்பம்..!

இந்த அட்வென்ஜெர் பைக்கில் 373.2சிசி சிங்கிள்-சிலிண்டர், லிக்யூடு-கூல்டு, 4 வால்வு என்ஜினை கேடிஎம் நிறுவனம் வழங்கியுள்ளது. இந்நிறுவனத்தில் இருந்து சமீபத்தில் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்ட ட்யூக் 390 பிஎஸ்6 மாடலிலும் பொருத்தப்பட்டிருந்த இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 9,000 ஆர்பிஎம்-ல் 43 பிஎச்பி பவரையும், 7,000 ஆர்பிஎம்-ல் 37 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.

கேடிஎம் 390 அட்வென்ஜெர் பைக்கின் டெலிவிரிகள் ஆரம்பம்..!

இந்த என்ஜினுடன் ட்ரான்ஸ்மிஷனிற்காக 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. இந்த பைக்கில் ப்ரேக்கிங் பணியை முன்புறத்தில் 320மிமீ டிஸ்க்கும், பின்புறத்தில் 230மிமீ டிஸ்க்கும் கவனிக்கின்றன. ப்ரேக்கிற்காக பைபர் நிறுவனத்தின் காலிப்பர்கள் மற்றும் போஸ்ச் 9.1 எம்பி ட்வின் சேனல் கார்னரிங் ஏபிஎஸ் அமைப்பும் நிலையாக வழங்கப்பட்டுள்ளது.

Image Courtesy: KTM Alibag/Facebook

More from DriveSpark

Article Published On: Monday, February 3, 2020, 13:43 [IST]
English summary
KTM 390 Adventure delivery starts in India – First in the world
மேலும்... #கேடிஎம் #ktm
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+