நேருக்கு நேராக மோதிய இரு விலையுயர்ந்த பைக்குகள்... சாகசம் செய்தபோது நிகழ்ந்த விபரீதம்.. ஷாக் வீடியோ!

இரு விலையுயர்ந்த பைக்குகள் நேருக்கு நேராக மோதும் விபத்துகுறித்த வீடியோக் காட்சிகள் இணையத்தில் வெளியாகி, வைரலாகி வருகின்றது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

நேருக்கு நேராக மோதிய இரு விலையுயர்ந்த பைக்குகள்... சாகசம் செய்தபோது நிகழ்ந்த விபரீதம்.. ஷாக் வீடியோ!

இருசக்கர வாகன ஆர்வலர்கள் மத்தியில் அதிகம் வரவேற்பைப் பெற்ற பைக்குகளாக கேடிஎம் நிறுவனத்தின் தயாரிப்புகள் இருக்கின்றன. இவை, குறைந்த விலையில் கிடைக்கும் அதி-திறன் வாய்ந்த பைக்குகள் என்பதால் இந்தியாவில் அமோகமான வரேவற்பைப் பெற்று வருகின்றன.

நேருக்கு நேராக மோதிய இரு விலையுயர்ந்த பைக்குகள்... சாகசம் செய்தபோது நிகழ்ந்த விபரீதம்.. ஷாக் வீடியோ!

ஆகையால், இந்த இடத்தை தக்க வைத்துக் கொள்வதற்காக அவ்வப்போது இந்தியர்களை கவர்கின்ற வகையில் புதிய மாடல்களை கேடிஎம் அறிமுகம் செய்து வருகின்றது.

அந்தவகையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு கேடிஎம் நிறுவனம் 390 அட்வென்சர் ரக பைக்கை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது.

நேருக்கு நேராக மோதிய இரு விலையுயர்ந்த பைக்குகள்... சாகசம் செய்தபோது நிகழ்ந்த விபரீதம்.. ஷாக் வீடியோ!

இந்த பைக்குகள் கேடிஎம் நிறுவனத்தின் பெயரை நிலை நிறுத்துகின்ற வகையில் நல்ல வரவேற்பை தற்போது பெற்று வருகின்றது. குறிப்பாக, வாகன ஆர்வலர்கள் மத்தியில் ஏகபோகமான வரவேற்பை அவை பெற்றிருக்கின்றன. இதனை உறுதி செய்கின்ற வகையில் அதன் டெலிவரி தகவல்கள் இருக்கின்றன.

நேருக்கு நேராக மோதிய இரு விலையுயர்ந்த பைக்குகள்... சாகசம் செய்தபோது நிகழ்ந்த விபரீதம்.. ஷாக் வீடியோ!

இந்நிலையில், அண்மையில் கேடிஎம் நிறுவனத்தின் இந்த அட்வென்சர் ரக பைக்கை வாங்கிய இளைஞர்கள் இருவர் ஆஃப்-ரோடு பயன்பாடுகுறித்த ஆய்வை கரடுமுரடான பாதையில் செய்துள்ளனர். அவ்வாறு, சாகசதத்தில் ஈடுபட்டபோது எதிர்பாராத விதமாக அவர்கள் விபத்தைச் சந்தித்துள்ளனர். இதுகுறித்த தகவலைதான் இந்த பதிவில் நாம் பார்க்கவிருக்கின்றோம்.

நேருக்கு நேராக மோதிய இரு விலையுயர்ந்த பைக்குகள்... சாகசம் செய்தபோது நிகழ்ந்த விபரீதம்.. ஷாக் வீடியோ!

கேடிஎம் நிறுவனம், இந்த அட்வென்சர் 390 பைக்கில் பைக்கில் 373 சிசி திறனை வெளிப்படுத்தும் சிங்கிள் சிலிண்டர், லிக்யூடு கூல்டு எஞ்ஜினை பயன்படுத்தியுள்ளது. இது, அதிகபட்சமாக 43 பிஎச்பி மற்றும் 37 என்எம் டார்க்கை வெளிப்படுத்தும் திறனைக் கொண்டிருக்கின்றது.

நேருக்கு நேராக மோதிய இரு விலையுயர்ந்த பைக்குகள்... சாகசம் செய்தபோது நிகழ்ந்த விபரீதம்.. ஷாக் வீடியோ!

இந்த அதீத திறனானது பல முன்னணி நிறுவனங்களின் ஸ்போர்ட்ஸ் பைக்குகளுக்கு டஃப் கொடுக்கின்ற வகையில் உள்ளது. ஆகையால், இதனை கையாளும்போது சற்று கவனத்துடன் இருப்பது அவசியம்.

குறிப்பாக, ஆஃப்-ரோடில் இந்த பைக்கை பயன்படுத்தும் கூடுதல் கவனம் இருப்பது மிக மிக அவசியமானதாக உள்ளது. இதனை விளக்கும் வகையிலேயே இந்த விபத்து சம்பவம் அரங்கேறியிருக்கின்றது.

நேருக்கு நேராக மோதிய இரு விலையுயர்ந்த பைக்குகள்... சாகசம் செய்தபோது நிகழ்ந்த விபரீதம்.. ஷாக் வீடியோ!

தற்செயலாக நடைபெற்ற விபத்து சம்பவம்குறித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது. அந்த வீடியோவில், புத்தம் புதிய கேடிஎம் 390 பைக்குகளை பரிசோதனை செய்வதற்கு இரு இளைஞர்கள் ஆயத்தமாகின்றனர். அதில், ஒரு இளைஞர் மட்டும் செயல்பாட்டில் முன்னதாகவே இறங்க, மற்றொருவர் இருந்த இடத்திலேயே நிற்கின்றார்.

நேருக்கு நேராக மோதிய இரு விலையுயர்ந்த பைக்குகள்... சாகசம் செய்தபோது நிகழ்ந்த விபரீதம்.. ஷாக் வீடியோ!

அப்போது, நின்ற இடத்திலேயே இருந்த கேடிஎம் பைக்கர்மீது முன்னதாக விரைந்து சென்ற இளைஞர் திரும்பி வருகையில் வேகமாக மோதி கீழே விழுந்தார். அவர், அதி வேகமாக வந்தபோது கட்டுப்பாடின்றி மணல் மேடு மீது ஏறியதே இந்த விபத்திற்கு முக்கிய காரணமாக இருக்கின்றது.

நேருக்கு நேராக மோதிய இரு விலையுயர்ந்த பைக்குகள்... சாகசம் செய்தபோது நிகழ்ந்த விபரீதம்.. ஷாக் வீடியோ!

இதனாலயே, ஆஃப் ரோடு சாலைகளில் ஸ்டண்ட் செய்யும் போது கூடுதல் கவனம் தேவை என கூறப்படுகின்றது. மேலும், முறையான பயிற்சியின்றி இதுபோன்ற சாகசத்தில் ஈடுபட வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்படுகின்றது.

நேருக்கு நேராக மோதிய இரு விலையுயர்ந்த பைக்குகள்... சாகசம் செய்தபோது நிகழ்ந்த விபரீதம்.. ஷாக் வீடியோ!

அதேசமயம், இவ்விரு இளைஞர்களும் சாகசத்தில் ஈடுபட தேர்வு செய்யப்பட்ட சாலையானது, கரடு முரடான பொதுபோக்குவரத்து வழி என்பது மற்ற வாகனங்களின் சென்று வருவதை வைத்து நம்மால் உணர முடிகின்றது. இதுபோன்று, பொதுசாலைகளில் சாகசத்தில் ஈடுபடுவது போக்குவரத்து வாகன சட்டத்தின்படி குற்றமாகும்.

இந்த விபத்தில் இருவரும் லேசான காயங்களுடன் தப்பினர். ஆனால், பைக்கில் கடுமையான சேதம் ஏற்பட்டிருக்கும் என தெரிகின்றது. நேருக்கு நேராக மோதியதன் விளைவாக, பைக்கின் ஹெட்லேம்ப் மற்றும் முன்பக்க வீல் ஃபோர்க் சேதமடைந்திருக்கலாம் என தெரிகின்றது. மேலும், பைக் வந்து மோதிய வேகத்தினால் இருவரும் பைக்கை விட்டு தூக்கி வீசப்படுவதை நம்மால் வீடியோவில் காண முடிகின்றது.

நேருக்கு நேராக மோதிய இரு விலையுயர்ந்த பைக்குகள்... சாகசம் செய்தபோது நிகழ்ந்த விபரீதம்.. ஷாக் வீடியோ!

இரு விலையுயர்ந்த பைக்குகள் நேருக்கு நேர் மோதிய விபத்துகுறித்த வீடியோவானது மற்றொரு ரைடரின் ஹெல்மெட்டில் பொருத்தப்பட்டிருந்த கேமிராவில் பதிவாகியிருந்தது. இந்த வீடியோவை விபத்தைச் சந்தித்த இளைஞர்களே விழிப்புணர்வு அவசியத்திற்காக இணையத்தில் பதிவிட்டுள்ளனர். இதுதான் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றது.

Source: Shantonil Nag/YouTube

More from DriveSpark

Article Published On: Thursday, March 26, 2020, 13:21 [IST]
English summary
KTM 390 Adventure Crash While Riding Off Road. Read In Tamil.
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+