ரூ.2.99 லட்ச விலையுடன் புதிய கேடிஎம் அட்வென்ஜெர் 390 இந்தியாவில் அறிமுகம்... முன்பதிவுகளும் துவங்கின

ஆஸ்த்ரியா நாட்டை தலைமை இடமாக கொண்டு செயல்படும் கேடிஎம் நிறுவனத்தில் இருந்து புதிய 390 அட்வென்ஜெர் பைக் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய பைக்கின் விலை எக்ஸ்ஷோரூமில் ரூ.2.99 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ரூ.2.99 லட்ச விலையுடன் புதிய கேடிஎம் அட்வென்ஜெர் 390 இந்தியாவில் அறிமுகம்... முன்பதிவுகளும் துவங்கின...

நாடு முழுவதும் உள்ள டீலர்ஷிப்கள் கேடிஎம் அட்வென்ஜெர் 390 பைக்கிற்கான முன்பதிவுகளை ரூ.10,000ல் இருந்து ஏற்க துவங்கியுள்ளனர். இதனால் இந்த அட்வென்ஜெர் பைக்கின் டெலிவிரிகள் அடுத்த மாதத்தில் இருந்து ஆரம்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரூ.2.99 லட்ச விலையுடன் புதிய கேடிஎம் அட்வென்ஜெர் 390 இந்தியாவில் அறிமுகம்... முன்பதிவுகளும் துவங்கின...

கேடிஎம் நிறுவனம் 390 அட்வென்ஜெர் பைக்கை அறிமுகப்படுத்துவதின் மூலம் இந்தியாவிலும் அட்வென்ஜெர் பைக் பிரிவில் இந்நிறுவனம் நுழைந்துள்ளது. கேடிஎம் 390 அட்வென்ஜெர் குறிப்பிட்ட அட்வென்ஜெர் வகை பயணத்திற்கென ஸ்பெஷலாக தயாரிக்கப்பட்ட பைக்காகும்.

ரூ.2.99 லட்ச விலையுடன் புதிய கேடிஎம் அட்வென்ஜெர் 390 இந்தியாவில் அறிமுகம்... முன்பதிவுகளும் துவங்கின...

இந்த பைக்கில் மிகவும் எடை குறைந்த ட்ரெல்லிஸ் சேசிஸ், தொலைத்தூர பயணத்திற்கு ஏற்ப முன்புறத்தில் 170மிமீ சஸ்பென்ஷன், பின்புறத்தில் 177மிமீ மோனோ-ஷாக் உள்ளிட்டவை பொருத்தப்பட்டுள்ளன. மேலும் க்ரவுண்ட் க்ளியரென்ஸும் ஆப்-ரோட்டிற்கு வசதியாக மிக அதிகமாக 200மிமீ-ல் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ரூ.2.99 லட்ச விலையுடன் புதிய கேடிஎம் அட்வென்ஜெர் 390 இந்தியாவில் அறிமுகம்... முன்பதிவுகளும் துவங்கின...

இவை மட்டுமில்லாமல், லாங் வீல்பேஸ், நீளமான விண்ட்ஷீல்டு, என்ஜினை பாதுகாக்கும் விதமாக அதற்கு அடியில் தட்டு ஒன்று, மெட்சளேர் ட்யூல்-பர்பஸ் டயர்கள் போன்ற அம்சங்களும் வழங்கப்பட்டுள்ளன. குறுகிய ஆங்கிள் சென்ஸிடிவ்-ஐ போன்று மின்னணு சாதனங்களை கட்டுப்படுத்துவதற்கு இந்த புதிய பைக்கில் எலக்ட்ரானிக் கண்ட்ரோல் யூனிட் பொருத்தப்பட்டுள்ளது.

ரூ.2.99 லட்ச விலையுடன் புதிய கேடிஎம் அட்வென்ஜெர் 390 இந்தியாவில் அறிமுகம்... முன்பதிவுகளும் துவங்கின...

இந்த பைக்கில் கொடுக்கப்பட்டுள்ள மோட்டார்சைக்கிள் ட்ராக்‌ஷன் கண்ட்ரோல், ஆப்-ரோட்டிலும் சிறந்த ட்ராக்‌ஷன் கண்ட்ரோலை வழங்கும். மலைப்பகுதிகளில், செங்குத்தான சாலைகளில் மற்றும் ஆப்-ரோட்களில் சிறந்த ஹேண்டிலிங்கை வழங்குவதற்காக கார்னரிங் ஏபிஎஸ் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளதால், பாதுகாப்பான மற்றும் வேகமான பயணத்தை இந்த புதிய கேடிஎம் பைக்கின் மூலம் பெற முடியும்.

ரூ.2.99 லட்ச விலையுடன் புதிய கேடிஎம் அட்வென்ஜெர் 390 இந்தியாவில் அறிமுகம்... முன்பதிவுகளும் துவங்கின...

இந்த தொழிற்நுட்பங்கள் மட்டுமில்லாமல், வேகமான மற்றும் ஆக்ரோஷமான ரைடிங்கை வழங்க போத்-வே க்யூக்‌ஷிஃப்ட்டர், மியூசிக் மற்றும் ஸ்மார்ட்போன் அழைப்புகளை பெற கேடிஎம் மை ரைட், டர்ன்-பை-டர்ன் நாவிகேஷன் மற்றும் முழுவதும் நிறங்களில் டிஎஃப்டி திரை உள்ளிட்டவை இந்த புதிய அட்வென்ஜெர் பைக்கில் வழங்கப்பட்டுள்ளன.

ரூ.2.99 லட்ச விலையுடன் புதிய கேடிஎம் அட்வென்ஜெர் 390 இந்தியாவில் அறிமுகம்... முன்பதிவுகளும் துவங்கின...

இந்த பைக்கில் பிஎஸ்6 தரத்திற்கு இணக்கமான 373.2 சிசி, டிஒஎச்சி சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 43 பிஎச்பி பவரையும், 37 என்எம் டார்க் திறனையும் பைக்கிற்கும் வழங்கவல்லது.

ட்ரான்ஸ்மிஷன் அமைப்பாக இந்த என்ஜினுடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. இஎஃப்ஐ மற்றும் ரைட்-பை-வயர் போன்ற எலக்ட்ரானிக் சாதனங்களையும் இந்த புதிய பைக்கில் கேடிஎம் நிறுவனம் ஏற்படுத்தி கொடுத்துள்ளது.

ரூ.2.99 லட்ச விலையுடன் புதிய கேடிஎம் அட்வென்ஜெர் 390 இந்தியாவில் அறிமுகம்... முன்பதிவுகளும் துவங்கின...

இந்திய எக்ஸ்ஷோரூமில் ரூ.2.99 லட்சத்தில் இருந்து விற்பனையாகவுள்ள இந்த அட்வென்ஜெர் பைக், இதன் பிரிவில் உள்ள மற்ற மாடல் பைக்குகளான பிஎம்டபிள்யூ ஜி310 ஜிஎஸ் பைக்கை விட ரூ.50,000-யும், கவாஸாகி வெர்சஸ் எக்ஸ்-300 மாடலை விட ரூ1.70 லட்சமும் விலை குறைவாகும். ஆனால் ட்யூக் 390 பைக்கை விட ரூ.30,000 அதிகமாகும்.

ரூ.2.99 லட்ச விலையுடன் புதிய கேடிஎம் அட்வென்ஜெர் 390 இந்தியாவில் அறிமுகம்... முன்பதிவுகளும் துவங்கின...

இந்த புதிய பிஎஸ்6 அட்வென்ஜெர் பைக்கில் நாம் கவனிக்க வேண்டிய மிக முக்கிய விஷயம் அதன் விலை தான். ஏனெனில் நிர்ணயிக்கப்பட்டுள்ள இந்த விலைக்கு ஏற்ற விதத்தில் தான் இந்த பைக்கில் தொழிற்நுட்பங்கள் பொருத்தப்பட்டுள்ளன. சொல்லபோனால் தொழிற்நுட்பங்களின் தரம் விலைக்கு ஒருபடி மேலே தான் உள்ளது. ட்யூக் 390 மாடலுக்கு அறிமுகத்தின்போது கிடைத்த வரவேற்பு இந்த 390 அட்வென்ஜெர் பைக்கிற்கும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles

மேலும்... #கேடிஎம் #ktm
English summary
KTM Adventure 390 Launched At Rs 2.99 Lakh: Bookings Officially Open At Rs 10,000
Story first published: Tuesday, January 21, 2020, 14:35 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X