திணறிய கேடிஎம்... அசால்ட் செய்த ஹீரோ... எப்பவுமே நம்ம ஹீரோ தாங்க பெஸ்ட்... இதோ வீடியோ!

அதி திறன் கொண்ட கேடிஎம் அட்வென்சர் 390 பைக் திணறிய சாலையை ஹீரோ நிறுவனத்தின் மலிவு விலை பைக் அசால்டாக கடந்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை தொடர்ச்சியாக காணலாம்.

திணறிய கேடிஎம்... அசால்ட் செய்த ஹீரோ... எப்பவுமே நம்ம ஹீரோ தாங்க பெஸ்ட்... இதோ வீடியோ!

இந்திய இளைஞர்கள் மத்தியில் அட்வென்சர் ரக வாகனங்களின் மீதான மோகம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை உணர்ந்த ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம், இரு வித பயன்பாடுடைய இரட்டையர்களை விற்பனைக்கு அறிமுகம் செய்தது. அதுதான் எக்ஸ்பல்ஸ் 200. ஆனால் இந்த மடால்களுக்கு ஏனோ இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைக்கவில்லை.

திணறிய கேடிஎம்... அசால்ட் செய்த ஹீரோ... எப்பவுமே நம்ம ஹீரோ தாங்க பெஸ்ட்... இதோ வீடியோ!

இது சிறிய எஞ்ஜினைக் கொண்டிருப்பதே இதற்கு காரணம் என கூறப்படுகின்றது. இந்த பைக் சிறிய எஞ்ஜினைக் கொண்டிருந்தாலும், அதன் திறன் வெளிப்பாடு பிற அட்வென்சர் பைக்குகளுக்கு சளைத்தது அல்ல என ஹீரோ மோட்டோகார்ப் கூறுகின்றது. இதனை நிரூபிக்கின்ற வகையில் ஓர் சம்பவம் தற்போது இந்தியாவிலேயே அரங்கேறியிருக்கின்றது.

திணறிய கேடிஎம்... அசால்ட் செய்த ஹீரோ... எப்பவுமே நம்ம ஹீரோ தாங்க பெஸ்ட்... இதோ வீடியோ!

ஆம், எந்த காரணத்திற்காக ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 பைக்கைவிட்டு வெளிநாட்டு தயாரிப்பிற்கு இளைஞர்கள் மாறினார்களே, அதே பயன்பாட்டில் வெளிநாட்டு பைக் ஒன்று திணறுகின்ற வேலையில் ஹீரோ எக்ஸ்பல்ஸ் அசால்டாக கடந்துச் சென்றிருக்கின்றது. அந்த வெளிநாட்டு பைக் கேடிஎம் நிறுவனத்தின் அட்வென்சர் 390 மாடலாகும். இதுகுறித்த வீடியோவை கேட் ரமணா (Kat Ramana) எனும் யுடியூப் வெளியிட்டுள்ளது.

திணறிய கேடிஎம்... அசால்ட் செய்த ஹீரோ... எப்பவுமே நம்ம ஹீரோ தாங்க பெஸ்ட்... இதோ வீடியோ!

எக்ஸ்பல்ஸ் 200 பைக்கில் 199.6 சிசி திறனை வெளிப்படுத்தும் எஞ்ஜினேப் பொருத்தப்பட்டுள்ளது. ஏர் கூல் திறன் கொண்ட இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 18.1 பிஎச்பி பவர் மற்றும் 17.1 என்எம் டார்க்கை வெளியேற்றும்.

அதேசமயம், கேடிஎம் 390 அட்வென்சர் பைக்கில் பார்த்தோமேயானால் 373.3 சிசி திறனை வெளிப்படுத்தும் எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது, உச்சபட்டசமாக 43 பிஎச்பி பவரையும், 37 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும்.

திணறிய கேடிஎம்... அசால்ட் செய்த ஹீரோ... எப்பவுமே நம்ம ஹீரோ தாங்க பெஸ்ட்... இதோ வீடியோ!

இப்போது உங்களுக்கு உச்சபட்ச சந்தேகம் எழும்பியிருக்கும் என நாங்கள் நம்புகின்றோம். கேடிஎம் 390 பைக்கின் திறனில் பாதிக்கு பாதியைகூட வெளிப்படுத்த முடியாத எஞ்ஜினைக் கொண்டிருக்கும் ஹீரோ எக்ஸ்பல்ஸ், எப்படி அந்த பாதையை அசால்டாக கடந்தது? இதற்கான பதிலைதான் பின் வருமாறு பார்க்கவிருக்கின்றோம்.

திணறிய கேடிஎம்... அசால்ட் செய்த ஹீரோ... எப்பவுமே நம்ம ஹீரோ தாங்க பெஸ்ட்... இதோ வீடியோ!

இந்த சம்பவம்குறித்து வெளியாகியிருக்கும் வீடியோவில் கேடிஎம் 390 அட்வென்சர் பைக் மட்டுமின்றி பிஎம்டபிள்யூ ஜி310ஆர் பைக்குகளும் பயணித்திருப்பதை நம்மால் காண முடிகின்றது. இந்த பைக்குகளும் கேடிஎம் 390 அட்வென்சர் பைக்கைப் போன்றே சில சவாலான சாலைகளில் திணறுவதை வீடியோ உறுதிப்படுத்துகின்றது. அம்மாதிரியான சூழ்நிலையில் பிஎம்டபிள்யூ பைக்குகள் முன்னேற முடியாமல் தரையில் சாய்ந்ததைக்கூட நம்மால் பார்க்க முடிகின்றது.

திணறிய கேடிஎம்... அசால்ட் செய்த ஹீரோ... எப்பவுமே நம்ம ஹீரோ தாங்க பெஸ்ட்... இதோ வீடியோ!

ஆனால், கேடிஎம் 390 பைக் சற்று அதிகமாக திணறுவது வீடியோவின் வாயிலாக தெரிகின்றது. ஆனால், இதில் பல இடங்களை ஹீரோ எக்ஸ்பல்ஸ் அசால்டாக கடந்து சென்றது நமக்கு மட்டுமின்றி அந்த அட்வென்சர் பயண குழுவிற்கும் வியப்பை ஏற்படுத்தியிருக்கின்றது.

இதை வைத்து கேடிஎம் 390 பைக் மோசமான பைக் என்று நினைத்து விட வேண்டும்.

திணறிய கேடிஎம்... அசால்ட் செய்த ஹீரோ... எப்பவுமே நம்ம ஹீரோ தாங்க பெஸ்ட்... இதோ வீடியோ!

கேடிஎம் 390 அட்வென்சர் பைக்கின் திறன் அசாத்தியமானது. பைக்குகள் பயணித்த பாதை சற்று கூடுதல் சாவாலான அமைப்பைக் கொண்டிருக்கின்றது. இம்மாதிரியான பாதையில் பயணிக்கும்போது வாகனங்களைக் கைதேர்ந்த நபர் இயக்குவது சிறந்தது. சற்று தடுமாறினாலும் இப்படிதான் எந்த மாதிரியான பைக்காக இருந்தாலும் திணற வேண்டும்.

திணறிய கேடிஎம்... அசால்ட் செய்த ஹீரோ... எப்பவுமே நம்ம ஹீரோ தாங்க பெஸ்ட்... இதோ வீடியோ!

மேலும், இதுபோன்ற கரடு முரடான பாதையில் பயணிக்கும்போது எடையை சற்று கவனிக்க வேண்டும். மிக அதிக எடை இருந்தாலும் சிரமம், குறைவான எடையிருந்தாலும் சிரமம். இம்மாதிரியான காரணத்தினால்கூட கேடிஎம் 390 பைக் மலைப் பாதையைக் கடக்க திணறியிருக்கலாம் என யூகிக்கப்படுகின்றது.

திணறிய கேடிஎம்... அசால்ட் செய்த ஹீரோ... எப்பவுமே நம்ம ஹீரோ தாங்க பெஸ்ட்... இதோ வீடியோ!

அதேசமயம், மற்ற பைக்குகளைக் காட்டிலும் கேடிஎம் 390 பைக்கின் உயரம் சற்று அதிகம். அதன் ரைடர்கள் சில இடங்களில் காலை ஊன்றுவதற்கு சிரமப்படுவதை நாம் காணலாம். எனவேதான் பல இடங்களில் அவர் திணறியிருக்கின்றார். மேலும், பைக்கை முன்னேற்ற முடியாமல் தவித்தும் இருக்கின்றார்.

திணறிய கேடிஎம்... அசால்ட் செய்த ஹீரோ... எப்பவுமே நம்ம ஹீரோ தாங்க பெஸ்ட்... இதோ வீடியோ!

மேலும், கேடிஎம் 390 பைக்கின் டயர்கள் சீரான சாலையில் செல்லுவதற்கு ஏதுவானதாக காணப்படுகின்றது. இது கரடு முரடான காட்டுப்பாதையில் பயணிப்பதற்கு ஏற்றது அல்ல. இதுவே ஹீரோ எக்ஸ்பல்ஸ் பைக்கின் டயர்களைப் பார்த்தோமேயானால், அவை எம்மாதிரியான சாலையையும் சமாளிக்கின்ற தரத்தில் இருக்கின்றது. இதனால்தான் இந்த பைக்கை மற்ற பைக்குகளைக் காட்டிலும் சிறப்பாக செயல்பட்டுள்ளது.

ஹீரோ எக்ஸ்பல்ஸ் நடுத்தர எடையைக் கொண்டிருப்பதும் இந்த சவாலான சாலையை சுலபமாக கடக்க காரணமாக இருக்கின்றது. ஆகையால்தான், ஹீரோ எக்ஸ்பல்ஸ் எதற்கும் சளைத்தது அல்ல என்பதை வெளிப்படுத்தும் வகையில் செயல்பட்டுள்ளது. நம்முடைய மனதில் நற் மதிப்பைப் பெற்றிருக்கின்றது.

இந்த பைக் இந்தியாவில் ரூ. 96 ஆயிரம் முதல் ரூ. 1.02 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது எக்ஸ்-ஷோரூம் விலையாகும்.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
KTM-Adventure-390-Stuck-In-Rough-Road-Video-Details. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X