பைக்குக்கு ஐபோன்11 இலவசமாம்! இந்தியாவிலா இப்படி ஒரு அறிவிப்பு? மக்களை கவர பிரபல பைக் நிறுவனம் அதிரடி

பைக் விற்பனையை அதிகரிக்க பிரபல இருசக்கர வாகனம் ஒன்று இலவசங்களை வாரி வழங்க இருப்பதாக அறிவித்துள்ளது. இதுகுறித் தகவலை தொடர்ச்சியாக காணலாம்.

பைக்குக்கு ஐபோன்11 இலவசமாம்... இந்தியாவிலா இப்படி ஒரு அறிவிப்பு? மக்களை கவர பிரபல பைக் நிறுவனம் அதிரடி!

ஒட்டுமொத்த உலகையும் ஒற்றை வைரஸ் கொரோனா அனைத்து நிலைகளிலும் வாட்டி வதைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த வைரஸ் மக்களின் ஆரோக்கியத்தை மட்டுமின்றி நாட்டின் பொருளாதாரத்தையும் சீர்குலைத்துள்ளது. எனவே, இதனால் ஏற்பட்ட மற்றும் ஏற்பட்டு வரும் இழப்புகள் ஏராளம். எனவே, இதில் இருந்து மீள்வதற்கான முயற்சிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.

பைக்குக்கு ஐபோன்11 இலவசமாம்... இந்தியாவிலா இப்படி ஒரு அறிவிப்பு? மக்களை கவர பிரபல பைக் நிறுவனம் அதிரடி!

அந்தவகையில், வைரஸ் பரவலால் பெரும் பின்னடைவைச் சந்தித்திருக்கும் துறையாக இருக்கும் வாகனத்துறை, விற்பனை வீழ்ச்சியில் இருந்து மீள்வதற்காக பல்வேறு யுக்திகளைக் கையாளத் தொடங்கியிருக்கின்றது. அந்தவகையில், கேடிஎம் மற்றும் ஹஸ்க்வர்னா ஆகிய இரு நிறுவனங்கள் பழையநிலை விற்பனை எண்ணிக்கையைப் பிடிக்க வேண்டும் என்பதில் தீர்க்கமாக உள்ளன.

பைக்குக்கு ஐபோன்11 இலவசமாம்... இந்தியாவிலா இப்படி ஒரு அறிவிப்பு? மக்களை கவர பிரபல பைக் நிறுவனம் அதிரடி!

இதனடிப்படையில் குறிப்பிட்ட சலுகைகளை அந்நிறுவனங்கள் தற்போது அறிவித்துள்ளன. அதாவது, வாடிக்கையாளர்களைக் கவரும் விதமாக கூடுதல் வாரண்டி, இலவச ரோட்சைட் அசிஸ்டன்ஸ் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு சலுகைகளை வழங்க அது திட்டமிட்டுள்ளது. இதுகுறித்த தகவலை ஆட்டோகார் இந்தியா ஆங்கிலா செய்தி தளம் வெளியிட்டுள்ளது.

பைக்குக்கு ஐபோன்11 இலவசமாம்... இந்தியாவிலா இப்படி ஒரு அறிவிப்பு? மக்களை கவர பிரபல பைக் நிறுவனம் அதிரடி!

குறிப்பிட்ட இந்த சலுகைகளை கடந்த 28ம் தேதியே கேடிஎம் மற்றும் ஹஸ்க்வர்னா நிறுவனங்கள் அறிவித்துவிட்டன. சத்தமே இல்லாமல் இந்த சலுகைகள் வழங்கப்பட்டு வருவதால் இரண்டாம் நாளான இன்றே வெளியுலகிற்கு தெரிய வந்துள்ளது. அதேசமயம், சிறப்பு சலுகை திட்டம் வருகின்ற செப்டம்பர் மாதம் 20ம் தேதி வரை செயல்பாட்டில் இருக்கும் என கூறப்பட்டுள்ளது.

பைக்குக்கு ஐபோன்11 இலவசமாம்... இந்தியாவிலா இப்படி ஒரு அறிவிப்பு? மக்களை கவர பிரபல பைக் நிறுவனம் அதிரடி!

விற்பனையை ஊக்குவிக்க வேண்டும் என்பதற்காக கொண்டு வரப்பட்டிருக்கும் இத்திட்டம் புதிய பைக்குகளை முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே வழங்கப்பட இருக்கின்றது. முந்தைய நிலவரப்படி, கேடிஎம் மற்றும் ஹஸ்க்வர்னா ஆகிய இரு நிறுவனங்களும் இரண்டாண்டுகள் மட்டுமே வாரண்டியை வழங்கி வந்தன.

பைக்குக்கு ஐபோன்11 இலவசமாம்... இந்தியாவிலா இப்படி ஒரு அறிவிப்பு? மக்களை கவர பிரபல பைக் நிறுவனம் அதிரடி!

இந்நிலையில், தற்போது கூடுதலாக மூன்று வருடங்கள் வரை வாரண்டியை உயர்த்தி வழங்க இரு நிறுவனங்களும் திட்டமிட்டுள்ளன. ஆகையால், புதிய கேடிஎம் மற்றும் ஹஸ்க்வர்னா பைக்குகளை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ஐந்து வருடங்கள் வரை வாரண்டி கிடைக்க இருக்கின்றது.

பைக்குக்கு ஐபோன்11 இலவசமாம்... இந்தியாவிலா இப்படி ஒரு அறிவிப்பு? மக்களை கவர பிரபல பைக் நிறுவனம் அதிரடி!

இதுமட்டுமின்றி, ரோட்சைட் அசிஸ்டன்ஸ் என்ற சிறப்பு சேவையையும் ஒரு வருடம் வரை வழங்கப்பட இருப்பதாக அந்நிறுவனங்கள் அறிவித்துள்ளன. அதாவது, இருசக்கர வாகனத்தை வாங்கிய நாள் முதலில் இருந்து 364 நாட்கள் கணக்கிடப்பட்டு அதுவரை அந்த சேவையை எந்தவொரு கட்டணமும் இல்லாக வழங்க இருக்கிறது.

பைக்குக்கு ஐபோன்11 இலவசமாம்... இந்தியாவிலா இப்படி ஒரு அறிவிப்பு? மக்களை கவர பிரபல பைக் நிறுவனம் அதிரடி!

இந்த சிறப்பு சலுகை மட்டுமின்றி வாரம் ஒருவருக்கு ஐபோன் 11 மாடலை வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதனை புதிதாக பைக்கை முன் பதிவு செய்யும் வாடிக்கையாளரின் பெயர் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு பரிசாக வழங்கப்பட இருக்கின்றது. இந்த சிறப்பு திட்டம் புதிதாக கேடிஎம் பைக்கை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே பொருந்தும்.

பைக்குக்கு ஐபோன்11 இலவசமாம்... இந்தியாவிலா இப்படி ஒரு அறிவிப்பு? மக்களை கவர பிரபல பைக் நிறுவனம் அதிரடி!

இந்த அதிரடி சிறப்பு சலுகைகள் இருசக்கர வாகன விற்பனையை ஊக்குவிக்கும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது எந்தவொரு நிறுவனமும் இதுமாதிரியான சலுகைகளை அறிவிக்காத நிலையில் கேடிஎம் மற்றும் ஹஸ்க்வர்னா ஆகிய இரு நிறுவனங்களும் அறிவித்திருப்பது வாடிக்கையாளர்களைக் கூடுதலாக கவரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும், இந்த அறிவிப்பு இந்திய இருசக்கர வாகனச் சந்தையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பைக்குக்கு ஐபோன்11 இலவசமாம்... இந்தியாவிலா இப்படி ஒரு அறிவிப்பு? மக்களை கவர பிரபல பைக் நிறுவனம் அதிரடி!

அதேசமயம், கொரோனா வைரஸ் காலத்தால் ஏற்பட்ட இழப்புகளை மீட்டெடுக்கும் விதமாக நாட்டில் இயங்கிக் கொண்டிருக்கும் அனைத்து வாகன நிறுவனங்களும் சிறப்பு சலுகைகளை அறிவித்து வருவது குறிப்பிடத்தகுந்தது. ஆனால், கேடிஎம் மற்றும் ஹஸ்க்வர்னா நிறுவனங்கள் வெளியிட்டிருக்கும் இந்த அறிவிப்பு தனித்துவமானதாக உள்ளது. ஆகையால், வாடிக்கையாளர்களைக் கூடுதலாகவே கவர்ந்திழுக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Most Read Articles
English summary
KTM & Husqvarna Announces Free Extended Warranty. Read In Tamil.
Story first published: Thursday, July 30, 2020, 19:19 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X