தமிழகத்தில் எங்கெங்கு கேடிஎம் ஷோரூம்கள் திறக்கப்பட்டுள்ளன... விபரம் உள்ளே!
கொரோனா பாதிப்பு குறைவான பகுதிகளில் உள்ள கேடிஎம் - ஹஸ்க்வர்னா பைக் ஷோரூம்கள் திறக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் மீண்டும் திறக்கப்பட்டுள்ள ஷோரூம்கள் விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

கொரோனா ஊரடங்கால் கடந்த மார்ச் மாதம் 24ந் தேதி முதல் நாட்டின் அனைத்து வர்த்தக ஸ்தாபனங்களும் மூடப்பட்டுள்ளன. அரசின் அறிவிப்பின்படி, வாகன உற்பத்தி ஆலைகளும், டீலர்களும் மூடப்பட்டுள்ளன. இந்த நிலையில், ஊரடங்கு விதிகள் தளர்த்தப்பட்டுள்ள நிலையில், ஆட்டோமொபைல் நிறுவனங்கள் மீண்டும் வர்த்தக நடவடிக்கைகளை துவங்கி வருகின்றன.

இந்த வரிசையில், கொரோனா பாதிப்பு குறைவான ஆரஞ்ச் மற்றும் பச்சை மண்டல பகுதிகளில் செயல்பட்டு வரும் கேடிஎம் பைக் ஷோரூம்கள் திறக்கப்பட்டுள்ளன.

அரசு வழிகாட்டுதல்களின்படி, சமூக இடைவெளியுடன் பணியாளர்கள் குறைந்த அளவில் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்றும், ஷோரூமிற்கு வரும் பணியாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டு அனுமதிக்கப்படுவர் என்றும் கேடிஎம் தெரிவித்துள்ளது.

சில கேடிஎம் டீலர்களில் விற்பனை மற்றும் சர்வீஸ் பணிகள் துவங்கப்பட்டுள்ளது. ஆனால், சில கேடிஎம் டீலர்களில் விற்பனை அல்லது சர்வீஸ் என ஏதாவது ஒரு வர்த்தக செயல்பாடுகள் மட்டுமே நடப்பதாக கேடிஎம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், கோவை, கடலூர், திண்டுக்கல், ஓசூர், கிருஷ்ணகிரி, பொள்ளாச்சி, புதுக்கோட்டை, தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, திருவள்ளூர் ஆகிய நகரங்களில் உள்ள கேடிஎம் ஷோரூம்கள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.

ஈரோடு பெருந்துறை ரோட்டில் உள்ள டீலரில் சர்வீஸ் மையம் மட்டும் செயல்படும். மேட்டுப்பாளையம், தென்காசி, திருசெந்தூர், திருவள்ளூர் மற்றஉம் காரைக்குடியில் விற்பனையும் மட்டுமே நடக்க உள்ளது.

வரும் நாட்களில் நிலைமை சீரடையும்போது வர்த்தகப் பணிகளை முழு வீச்சில் துவங்குவதற்கு திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும், வரும் திங்கட்கிழமை முதல் ஊரடங்கு விதிகள் மேலும் தளர்த்தப்படும்போது விற்பனை மற்றும் சர்வீஸ் பணிகள் படிப்படியாக சீரடையும் என்று எதிர்பார்ப்பதாக கேடிஎம் தெரிவித்துள்ளது.

வாடிக்கையாளர்கள் முன்பதிவு செய்வதற்கு ஏதுவாகவும், கொரோனாவுக்கு முன்பாக முன்பதிவு செய்தவர்களுக்கு டெலிவிரி கொடுப்பதற்கான நடவடிக்கைகள் துவங்கப்பட உள்ளன.

இது நிச்சயம் கேடிஎம் பைக்கை வாங்க காத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான விஷயமாகவே இருக்கும். கேடிஎம் ஷோரூம்களிலேயே ஹஸ்க்வர்னா பைக்குகளும் விற்பனை செய்யப்படுகின்றன. எனவே, ஹஸ்க்வர்னா பைக்குகளை வாங்க திட்டமிட்டிருப்போருக்கும் இது மகிழ்ச்சியை தரும் என்று கூறலாம்.


Click it and Unblock the Notifications








