கொரோனா எஃபெக்ட்: கேடிஎம் - ஹஸ்க்வர்னா பைக்குகளின் காத்திருப்பு காலம் நீள்கிறது

கொரோனா பிரச்னையால் கேடிஎம் மற்றும் ஹஸ்க்வர்னா பைக்குகளின் காத்திருப்பு காலம் இந்தியாவில் நீண்டுள்ளது. இதனால், புக்கிங் செய்து காத்திருப்பவர்களும், புதிதாக புக்கிங் செய்ய இருப்பவர்கள் மத்தியிலும் சிறிய ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது.

கேடிஎம் - ஹஸ்க்வர்னா பைக்குகளின் காத்திருப்பு காலம் நீள்கிறது

கொரோனாவால் கடந்த இரு மாதங்களாக வாகன உற்பத்தி முற்றிலும் முடங்கியது. தற்போது கொரோனா பாதிப்பு இல்லாத பகுதிகளில் வர்த்தக செயல்பாடுகள் மீண்டும் துவங்கப்பட்டுள்ளன. இதனால், வாகன ஆலைகளும், டீலர்களும் திறக்கப்பட்டு முன்னெச்சரிக்கையுடன் வர்த்தக செயல்பாடுகள் நடக்கின்றன.

கேடிஎம் - ஹஸ்க்வர்னா பைக்குகளின் காத்திருப்பு காலம் நீள்கிறது

இந்த சூழலில், கொரோனா ஏற்படுத்திய தாக்கத்தால், கேடிஎம் மற்றும் ஹஸ்க்வர்னா பைக்குகளின் காத்திருப்பு காலம் வெகுவாக அதிகரித்துவிட்டது. அதாவது, புதிதாக புக்கிங் செய்பவர்கள் மூன்று மாதங்கள் வரை காத்திருக்கும் நிலை உள்ளதாக ஆட்டோகார் இந்தியா தள செய்தி தெரிவிக்கிறது.

MOST READ: பருவமழை காலம் வருதுங்க... உங்க வண்டி பத்திரம்!

கேடிஎம் - ஹஸ்க்வர்னா பைக்குகளின் காத்திருப்பு காலம் நீள்கிறது

அதேநேரத்தில், மாடலை பொறுத்து இந்த காத்திருப்பு காலம் வேறுபடுகிறது. கேடிஎம் நிறுவனத்தின் ஆர்125 மற்றும் 125 ட்யூக் மாடல்களின் காத்திருப்பு காலம் குறைவாக இருக்கிறது. கேடிஎம் நிறுவனத்தின் 200சிசி மாடல்களின் காத்திருப்பு காலம் 45 நாட்கள் வரையிலும், 390 மாடல்களின் காத்திருப்பு காலம் இரண்டு முதல் மூன்று மாதங்கள் வரை நீண்டுள்ளது.

கேடிஎம் - ஹஸ்க்வர்னா பைக்குகளின் காத்திருப்பு காலம் நீள்கிறது

இதேபோன்றே, கேடிஎம் நிறுவனத்தின் ஷோரூம்களில் விற்பனை செய்யப்படும் ஹஸ்க்வர்னா 250 மாடல்களின் பைக்குகளின் காத்திருப்பு காலமும் அதிகரித்துள்ளது. அதாவது, முன்பதிவு காலத்தை பொறுத்து 45 நாட்கள் முதல் 3 மாதங்கள் நீடிப்பதாக தகவல்கள் கூறுகின்றன..

MOST READ: உங்க பைக்கிற்கு எவ்வளவு இன்ஸ்யூரன்ஸ் பிரிமீயம்னு தெரியணுமா?... இங்கே க்ளிக் பண்ணுங்க

கேடிஎம் - ஹஸ்க்வர்னா பைக்குகளின் காத்திருப்பு காலம் நீள்கிறது

மேலும், கொரோனா ஊரடங்கு முடிவுக்கு வந்தால், தனிநபர் பயன்பாட்டு வாகனங்களின் விற்பனை அதிகரிக்கும் என்ற கருத்து நிலவுகிறது. இதனால், புதிதாக முன்பதிவு செய்தால், கேடிஎம் மற்றும் ஹஸ்க்வர்னா பைக்குகளை டெலிவிரி பெறுவதற்கு ஓரிரு மாதங்கள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

கேடிஎம் - ஹஸ்க்வர்னா பைக்குகளின் காத்திருப்பு காலம் நீள்கிறது

எனினும், கேடிஎம் மற்றும் ஹஸ்க்வர்னா பைக்குகள் உற்பத்தி படிப்படியாக அதிகரிக்கப்பட்டு நிலைமை சீரடைந்தால், விரைவாக டெலிவிரி பெற முடியும். ஆனால், அது கொரோனா ஊரடங்கு முடிவுக்கு வந்தால் மட்டுமே உறுதியாக எதையும் சொல்ல முடியும் என்கிற நிலை உள்ளது.

MOST READ: பட்டுனு பைக் இன்ஸ்யூரன்ஸ் புதுப்பிக்கணுமா?... சட்டுனு இங்கே க்ளிக் பண்ணுங்க!

கேடிஎம் - ஹஸ்க்வர்னா பைக்குகளின் காத்திருப்பு காலம் நீள்கிறது

கேடிஎம் நிறுவனத்தின் உதிரிபாகங்கள் பெறுவதில் உள்ள சிக்கல்கள் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. எனவே, மிக விரைவில் உதிரிபாகங்கள் உற்பத்தி சீரடைவதுடன், சில பாகங்கள் இறக்குமதி செய்யும் நிலையிலும் பிரச்னைகள் தீரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Friday, May 22, 2020, 19:30 [IST]
English summary
KTM & Husqvarna motorcycles waiting period is up to three months. Both brands have partially resumed production after relaxations on the nation-wide lockdown was announced recently.
மேலும்... #கேடிஎம் #ktm #husqvarna
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+