இந்த பைக்கைதான் பஜாஜ் தயாரிக்க இருக்கின்றது... எப்போது அறிமுகம்? என்னென்ன வசதிகளை பெற உள்ளது? சிறப்பு தகவல்!

பஜாஜ் நிறுவனத்தின் உற்பத்தி ஆலையில் தயாராக இருக்கும் புதிய இருசக்கர வாகனம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

இந்த பைக்கைதான் பஜாஜ் தயாரிக்க இருக்கின்றது... எப்போது அறிமுகம்? என்னென்ன வசதிகளை பெற உள்ளது? சிறப்பு தகவல்!

இந்தியாவின் பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் உற்பத்தி ஆலையிலேயே கேடிஎம் நிறுவனத்தின் இருசக்கர வாகனங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இதன்படி, ட்யூக் மற்றும் ஆர்சி வரிசையிலான மோட்டார்சைக்கிள்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றது. இந்த வரிசையில் புதிதாக புதுமுக இருசக்கர வாகனம் ஒன்றையும் சேர்க்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த பைக்கைதான் பஜாஜ் தயாரிக்க இருக்கின்றது... எப்போது அறிமுகம்? என்னென்ன வசதிகளை பெற உள்ளது? சிறப்பு தகவல்!

ஆகையால், மேற்கூறிய மாடல்களுடன் சேர்த்து பஜாஜ் இருசக்கர வாகன தயாரிப்பு ஆலையில் கேடிஎம் நிறுவனத்தின் விரைவில் அறிமுகமாக இருக்கும் அந்த மோட்டார்சைக்கிளும் உற்பத்தி செய்யப்பட இருக்கின்றது. பெயரிடப்படாத 500 சிசி திறன்கொண்ட பைக்கே தயாரிக்கப்பட இருக்கின்றது. இதற்கான பணிகளை கேடிஎம் ஏற்கனவே தொடங்கிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த பைக்கைதான் பஜாஜ் தயாரிக்க இருக்கின்றது... எப்போது அறிமுகம்? என்னென்ன வசதிகளை பெற உள்ளது? சிறப்பு தகவல்!

பஜாஜ் நிறுவனம், கேடிஎம் இருசக்கர வாகனங்களை மட்டுமின்றி பிரீமியம் ரக இருசக்கர வாகனங்களுக்கு சொந்தக்காரரான ஹஸ்க்வர்னாவின் இருசக்கர வாகனங்களையும் உற்பத்தி செய்து வருகின்றது. அந்தவகையில், கடந்த 2020 நவம்பரில் மட்டுமே 8,000 வாகனங்களை அது உற்பத்தி செய்து விற்பனைக்கு வழங்கியிருக்கின்றது.

இந்த பைக்கைதான் பஜாஜ் தயாரிக்க இருக்கின்றது... எப்போது அறிமுகம்? என்னென்ன வசதிகளை பெற உள்ளது? சிறப்பு தகவல்!

இம்மாதிரியான சூழ்நிலையிலேயே புதுமுக உற்பத்தியையும் பஜாஜ் தொடங்க இருக்கின்றது. இதுகுறித்த தகவலை அண்மையில் நடைபெற்ற ஓர் நிகழ்வில் பஜாஜ் ஆர்&டி -யின் தலைமை அதிகாரி உறுதி செய்தார். அப்போது, ஆஸ்திரியா நாட்டு நிறுவனத்தின் உதவியுடன் 490 சிசி திறன் கொண்ட ட்வின் சிலிண்டர் எஞ்ஜின் கொண்ட பைக்கை விரைவில் உற்பத்தி செய்ய இருப்பதாக கூறியிருந்தார்.

இந்த பைக்கைதான் பஜாஜ் தயாரிக்க இருக்கின்றது... எப்போது அறிமுகம்? என்னென்ன வசதிகளை பெற உள்ளது? சிறப்பு தகவல்!

இதனடிப்படையிலேயே இந்தியாவில் 500 சிசி திறன் கொண்ட பிரீமியம் ரக மோட்டார்சைக்கிள் இந்தியா வருவது உறுதியாகியுள்ளது. புதிய பைக்கின் உற்பத்தி பணி ஏற்கனவே தொடங்கிவிட்டதால் விரைவில் இந்த இருசக்கர வாகனம் விற்பனைக்கு வருவது உறுதி என்பது தெரியவந்துள்ளது.

இந்த பைக்கைதான் பஜாஜ் தயாரிக்க இருக்கின்றது... எப்போது அறிமுகம்? என்னென்ன வசதிகளை பெற உள்ளது? சிறப்பு தகவல்!

ஆனால், இது என்னமாதிரியான வசதிகள் மற்றும் சிறப்பம்சங்களுடன் தயாராகி வருகின்றது என்கிற தகவல் தெரியவரவில்லை. விரைவில் இதுகுறித்த தகவலும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும், 2022ம் ஆண்டிற்கு பின்னரே இது விற்பனைக்கு வரும் என தகவல்கள் கூறுகின்றன.

இந்த பைக்கைதான் பஜாஜ் தயாரிக்க இருக்கின்றது... எப்போது அறிமுகம்? என்னென்ன வசதிகளை பெற உள்ளது? சிறப்பு தகவல்!

ஆகையால், புதுமுக பைக்கின் விலை மற்றும் அனைத்து தகவல்களும் அடுத்து ஆண்டின் மத்தியில் அல்லது இறுதியிலேயே வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Note: Images are representative purpose only.

Source: Motoringworld

Most Read Articles
மேலும்... #கேடிஎம் #ktm
English summary
KTM Plans To Build Another New 500cc Bike At Bajaj's Plant. Read In Tamil.
Story first published: Thursday, December 24, 2020, 14:50 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X