கடமையை செய்த காவலர்! பதிலுக்கு ரிவென்ஜ் எடுத்த லைன்மேன்! என்னனு தெரிஞ்சா வயிறு வலிக்க சிரிப்பீங்க..!

அபராதம் விதித்த காவலர் மீது மட்டுமின்றி ஒட்டுமொத்த காவல் நிலையத்தையுமே மின்வாரிய ஊழியர் ஒருவர் பழி தீர்த்துள்ளார். இதுகுறித்த கூடுதல் சுவாரஷ்ய தகவலை தொடர்ச்சியாக காணலாம்.

கடமையை செய்த காவலர்! பதிலுக்கு ரிவென்ஜ் எடுத்த லைன்மேன்! என்னனு தெரிஞ்சா வயிறு வலிக்க-வலிக்க சிரிப்பீங்க!

இந்திய பெருநகரங்களில் மட்டுமின்றி இரண்டாம் நிலை நகரங்களிலும் கோவிட்-19 வைரஸ் தனது தீவிரத்தைக் காட்டி வருகின்றது. இதுமட்டுமின்றி, சமீப காலமாக இதன் பரவல் கிராமங்களிலும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. எனவே, மக்கள் அனைவரையும் பாதுகாப்பாக இருக்குமாறு மத்திய மற்றும் மாநில அரசுகள் வலியுறுத்தி வருகின்றன. இதனடிப்படைியில், அத்தியாவசிய பணிக்காக வெளியில் செல்லும் மக்கள் அனைவரும் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

கடமையை செய்த காவலர்! பதிலுக்கு ரிவென்ஜ் எடுத்த லைன்மேன்! என்னனு தெரிஞ்சா வயிறு வலிக்க-வலிக்க சிரிப்பீங்க!

அரசு ஊழியர்கள் முதல் பொதுமக்கள் என அனைவருக்கும் இந்த உத்தரவு பொருந்தும். இதை மீறும் பட்சத்தில் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மின்சார வாரிய ஊழியர் ஒருவர் மாஸ்க் அணியாமல் பணியில் ஈடுபட்ட காரணத்திற்காக, அவருக்கு ரூ. 500 அபராதத்திற்கான செல்லாணை போலீஸார் வழங்கியிருக்கின்றனர்.

கடமையை செய்த காவலர்! பதிலுக்கு ரிவென்ஜ் எடுத்த லைன்மேன்! என்னனு தெரிஞ்சா வயிறு வலிக்க-வலிக்க சிரிப்பீங்க!

தான், தற்போது பணியில் இருப்பதாகவும், இடையூறு காரணமாக மாஸ்க்கைப் பயன்படுத்தவில்லை என அந்த மின் வாரிய ஊழியர் காரணம் கூறியிருக்கின்றார். இருப்பினும், விதிகளை நிலை நாட்டும் விதமாக போலீஸார் எந்தவொரு கரிசனமும் இன்றி அபராதத்திற்கான ரசீதை வழங்கினார்.

கடமையை செய்த காவலர்! பதிலுக்கு ரிவென்ஜ் எடுத்த லைன்மேன்! என்னனு தெரிஞ்சா வயிறு வலிக்க-வலிக்க சிரிப்பீங்க!

இதனால் ஆத்திரமடைந்த மின்வாரிய ஊழியர், தனக்கு அபராத செல்லாணை வழங்கிய ஒட்டு காவல்நிலையத்திற்கு ரூ. 3 லட்சத்திற்கான அபராதச் செல்லாணை வழங்கியிருக்கின்றார். அது எப்படி என்பது பற்றிய சுவாரஷ்ய தகவலைதான் இந்த பதிவில் நாம் பார்க்கவிருக்கின்றோம்.

கடமையை செய்த காவலர்! பதிலுக்கு ரிவென்ஜ் எடுத்த லைன்மேன்! என்னனு தெரிஞ்சா வயிறு வலிக்க-வலிக்க சிரிப்பீங்க!

சம்பவத்தன்று மின்வாரிய ஊழியர் மாஸ்க் அணியாமல் இருசக்கர வாகனத்தை இயக்கியதாகவும், மேலும், பணியிலும் ஈடுபட்டதாகவும் கூறப்படுகின்றது. அப்போது, வைரஸ் காரணமாக நிலவி வரும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை செயல்படுத்தும் விதமாக பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர், கை குட்டையைக் கழுத்தில் கட்டியவாறு டூ வீலரில் வந்த மின் வாரிய ஊழியரை மடக்கியுள்ளனர். வாகனத்தின் ஆவணத்தை சரிபார்த்த போலீஸார், ஏன் முக கவசம் அணியவில்லை என்று கேள்வியெழுப்பினர்.

கடமையை செய்த காவலர்! பதிலுக்கு ரிவென்ஜ் எடுத்த லைன்மேன்! என்னனு தெரிஞ்சா வயிறு வலிக்க-வலிக்க சிரிப்பீங்க!

அப்போது, அவர் அளித்த விளக்கம் உகந்ததாக இல்லாத காரணத்தால் அவர்மீது நடவடிக்கை எடுக்கும் விதமாக ரூ. 500க்கான அபராத செல்லாணை வழங்கினர். இதைப் பெற்றுக் கொண்ட மின்வாரிய ஊழியர், அப்போது அங்கிருந்த புறப்பட்டுச் சென்றார்.

இதுல என்ன குற்றம் இருக்கு போலீசார்கள் தங்களுடைய கடமையைதானே செய்திருக்கின்றார்கள் என்று கேட்க தோன்றலாம். இதற்கு பின்னர்தான் டுவிஸ்டே இருக்கின்றது.

கடமையை செய்த காவலர்! பதிலுக்கு ரிவென்ஜ் எடுத்த லைன்மேன்! என்னனு தெரிஞ்சா வயிறு வலிக்க-வலிக்க சிரிப்பீங்க!

ஆம், மறு நாள் காவல் நிலையத்திற்கு சக ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுடன் வந்த மின்வாரிய ஊழியர், காவல்நிலையில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, ஒரு சில மின்சாதனங்களைத் தவிர பெரும்பாலான மின் சாதனப் பொருட்கள் கணக்கு காட்ட முடியாத வகையில் மின் இணைப்பைப் பெற்றிருந்தது தெரியவந்தது.

கடமையை செய்த காவலர்! பதிலுக்கு ரிவென்ஜ் எடுத்த லைன்மேன்! என்னனு தெரிஞ்சா வயிறு வலிக்க-வலிக்க சிரிப்பீங்க!

ஏசி, ஹீட்டர் மற்றும் அதிக மின்சாரத்தை உபயோகிக்கும் பெரும்பாலான சாதனங்கள் இவ்வாறே முறைகேடான இணைப்பைப் பெற்றிருந்தன.

இது சட்ட விரோத செயலாகும். இதனால் மின்வாரிய துறைக்கு கடந்த காலங்களில் பெரும் இழப்பு ஏற்பட்டிருக்கலாம் என கணக்கிடப்பட்டது.

இதைத் தொடர்ந்து, மின் வாரிய அதிகாரிகள், அந்த காவல்நிலையத்திற்கு ரூ. 3 லட்சத்திற்கான அபராதத்தை விதித்தனர். மேலும், காவல்நிலையத்திற்கான மின் இணைப்பையும் அவர்கள் துண்டித்ததாக கூறப்படுகின்றது. சட்டத்தை பாதுகாக்க வேண்டிய காவல்நிலையத்திலேயே இந்த முரண்பாடான செயல் அரங்கேறியிருப்பது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடமையை செய்த காவலர்! பதிலுக்கு ரிவென்ஜ் எடுத்த லைன்மேன்! என்னனு தெரிஞ்சா வயிறு வலிக்க-வலிக்க சிரிப்பீங்க!

அதேசமயம், மின் வாரிய ஊழியர்கள் இதனை பழி வாங்கும் விதமாக மேற்கொண்டிருப்பதாக காவல்நிலைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், உரிய அனுமதி பெற்றே இந்த முறைகேடு கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக கூறி, காவலர்களின் புகாருக்கு மின் வாரியம் மறுப்பு தெரிவித்துள்ளது.

கடமையை செய்த காவலர்! பதிலுக்கு ரிவென்ஜ் எடுத்த லைன்மேன்! என்னனு தெரிஞ்சா வயிறு வலிக்க-வலிக்க சிரிப்பீங்க!

இந்த விநோத சம்பவம் பஞ்சாப் மாநிலம், அம்ரித்சர் பகுதியில் அரங்கேறியிருப்பதாக தகவல் தெரிவிக்கின்றன. இதுகுறித்த வீடியோ மற்றும் தகவல்தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

வைரஸ் பரவல் உச்சத்தில் இருக்கின்ற காரணத்தினால் இரு சக்கர வாகனத்தில் செல்லும்போது தலைக் கவசம் அணிவது எப்படி கட்டாயம் என்று விதிகள் கூறுகின்றதோ, அதேபோன்று தற்போது மாஸ்க் அணிவதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

கடமையை செய்த காவலர்! பதிலுக்கு ரிவென்ஜ் எடுத்த லைன்மேன்! என்னனு தெரிஞ்சா வயிறு வலிக்க-வலிக்க சிரிப்பீங்க!

தலைக் கவசம் விபத்தில் இருந்து பாதுகாக்கும், முகக் கவசம் உயிரை பறிக்கும் கொரோனாவிடம் இருந்து பாதுகாக்கும். எனவேதான், அனைத்து மாநில அரசுகளும் தற்போது மாஸ்க்கிற்கு அதிக முக்கியத்துவத்தை அளித்து வருகின்றது. மேலும், கடந்த காலங்களில் வாகன விதிமீறல்களைக் கண்டித்து வந்த போலீஸார், தற்போது மாஸ்க் இல்லாமல் வெளியே வருபவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

கடமையை செய்த காவலர்! பதிலுக்கு ரிவென்ஜ் எடுத்த லைன்மேன்! என்னனு தெரிஞ்சா வயிறு வலிக்க-வலிக்க சிரிப்பீங்க!

இந்த நிலையில்தான் பஞ்சாப் மாநிலத்தில் இந்த கசப்பான சம்பவங்கள் அரங்கேறியிருக்கின்றது. இரு அரசுத்துறையிலும் அரங்கேறியிருக்கும் இந்த விநோத சம்பவம் மக்கள் மத்தியில் நகைப்பலையை ஏற்படுத்தினாலும், இது அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையிலேயே உள்ளது.

கடமையை செய்த காவலர்! பதிலுக்கு ரிவென்ஜ் எடுத்த லைன்மேன்! என்னனு தெரிஞ்சா வயிறு வலிக்க-வலிக்க சிரிப்பீங்க!

தற்போது காவல்நிலையத்திற்கு வழங்கப்பட்டிருக்கும் அபராதம் செலுத்தப்பட்டுவிட்டதா, இல்லையா என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை. மேலும், மின்சாரத்துறையும் இதுகுறித்த எந்தவொரு தகவலையும் அதிகாரப்பூர்வ இதுவரை வெளியிடப்படவில்லை.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Lineman Who Gets Fine For Riding Without Mask Takes Revenge To Cops. Read In Tamil.
Story first published: Tuesday, July 21, 2020, 15:29 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X