ஸ்டைலிஷான கருப்பு-சிவப்பு நிற கலவையில் பிஎஸ்6 மஹிந்திரா மோஜோ 300 ஏபிஎஸ் பைக்... விரைவில் அறிமுகம்...

விரைவில் அறிமுகப்படுத்தவுள்ள பிஎஸ்6 மோஜோ 300 ஏபிஎஸ் பைக்கின் முதல் டீசர் படத்தை சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டதை தொடர்ந்து தற்போது இந்த பிஎஸ்6 பைக்கின் மற்றொரு படத்தை கார்னட் கருப்பு நிறத்தேர்வில் மஹிந்திரா நிறுவனம் தனது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளது.

ஸ்டைலிஷான கருப்பு-சிவப்பு நிற கலவையில் பிஎஸ்6 மஹிந்திரா மோஜோ 300 ஏபிஎஸ் பைக்... விரைவில் அறிமுகம்...

கார்னட் கருப்பு நிறத்தில் மஹிந்திரா மோஜோ 300 பைக் கூடுதல் ஸ்போர்ட்டியான தோற்றத்தில் காட்சியளிக்கிறது. பைக்கின் ஹெட்லைட் கௌல், எரிபொருள் டேங்க் மற்றும் என்ஜின் கௌல் உள்ளிட்டவை அடர் கருப்பு நிறத்தில் பெயிண்ட் அமைப்பை பெற்றுள்ளன.

ஸ்டைலிஷான கருப்பு-சிவப்பு நிற கலவையில் பிஎஸ்6 மஹிந்திரா மோஜோ 300 ஏபிஎஸ் பைக்... விரைவில் அறிமுகம்...

கருப்பு நிறத்துடன் வாடிக்கையாளர்களை கவர்ந்திழுப்பதற்காக சில பாகங்களை சிவப்பு நிறத்திலும் மஹிந்திரா கொண்டுவந்துள்ளது. உதாரணத்திற்கு அலாய் சக்கரங்களின் பின்ஸ்ட்ரிப்கள், பைக்கின் ஃப்ரேம், ஸ்விங்கார்ம் போன்றவை கவர்ச்சிக்கரமான சிவப்பு நிறத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளன.

ஸ்டைலிஷான கருப்பு-சிவப்பு நிற கலவையில் பிஎஸ்6 மஹிந்திரா மோஜோ 300 ஏபிஎஸ் பைக்... விரைவில் அறிமுகம்...

மற்றப்படி வழங்கப்பட்டுள்ள அம்சங்களின்படி பார்த்தோமேயானால், இந்த பிஎஸ்6 மோஜோ 300 ஏபிஎஸ் பைக் கடந்த ஆண்டு அறிமுகமான அதன் பிஎஸ்4 வெர்சனை தான் பெரும்பான்மையாக ஒத்துள்ளது.

ஸ்டைலிஷான கருப்பு-சிவப்பு நிற கலவையில் பிஎஸ்6 மஹிந்திரா மோஜோ 300 ஏபிஎஸ் பைக்... விரைவில் அறிமுகம்...

இதன் காரணமாக இரட்டை ஹெட்லேம்ப் அமைப்பை கொண்டுள்ள இந்த பிஎஸ்6 பைக்கில் பெரிய அளவில் ரேடியேட்டர் கவசங்கள் மற்றும் பக்கவாட்டில் பொருத்தப்படும் எக்ஸாஸ்ட் உள்ளிட்டவை தொடர்ந்துள்ளன.

ஸ்டைலிஷான கருப்பு-சிவப்பு நிற கலவையில் பிஎஸ்6 மஹிந்திரா மோஜோ 300 ஏபிஎஸ் பைக்... விரைவில் அறிமுகம்...

சஸ்பென்ஷனிற்கு பிஎஸ்6 மஹிந்திரா மோஜோ 300 ஏபிஎஸ் பைக்கின் முன்புறத்தில் வழக்கமான டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகளும், பின்புறத்தில் மோனோஷாக்கும் பொருத்தப்பட்டுள்ளன. பைக்கில் ப்ரேக்கிங் பணியை டிஸ்க் ப்ரேக்குகள் கவனிக்கவுள்ளன. இதனுடன் ட்யூல்-சேனல் ஏபிஎஸும் உள்ளது.

ஸ்டைலிஷான கருப்பு-சிவப்பு நிற கலவையில் பிஎஸ்6 மஹிந்திரா மோஜோ 300 ஏபிஎஸ் பைக்... விரைவில் அறிமுகம்...

மஹிந்திராவின் இந்த புதிய பிஎஸ்6 பைக்கில் 294.72சிசி சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் புதிய மாசு உமிழ்வு விதிக்கு இணக்கமாக அப்டேட் செய்யப்பட்டு பொருத்தப்பட்டுள்ளது. இந்த என்ஜின் பிஎஸ்6 தரத்தில் வெளிப்படுத்தக்கூடிய ஆற்றல் அளவுகள் இன்னமும் ரகசியகமாகவே பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

ஸ்டைலிஷான கருப்பு-சிவப்பு நிற கலவையில் பிஎஸ்6 மஹிந்திரா மோஜோ 300 ஏபிஎஸ் பைக்... விரைவில் அறிமுகம்...

பிஎஸ்4 தரத்தில் இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 7500 ஆர்பிஎம்-ல் 26.29 பிஎச்பி பவரையும், 5,500 ஆர்பிஎம்-ல் 28 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்துகிறது. தற்போது வெளியிடப்பட்டுள்ள படத்தில் காட்டப்பட்டுள்ள பைக்கின் கருப்பு-சிவப்பு நிற கலவை இளம் வாடிக்கையாளர்களை கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Friday, July 17, 2020, 17:30 [IST]
English summary
BS6 Mahindra Mojo 300 ABS Garnet Black colour revealed, launch soon
மேலும்... #மஹிந்திரா #mahindra
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+