பீஜோ இ லூடிக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்தியாவில் அறிமுகப்படுத்துகிறது மஹிந்திரா!

பீஜோ இ லூடிக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்தியாவில் அறிமுகப்படுத்துவதற்கான முயற்சிகளில் மஹிந்திரா ஈடுபட்டுள்ளது. இந்த ஸ்கூட்டரின் சிறப்பம்சங்கள் மற்றும் முக்கியத் தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

பீஜோ இ லூடிக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்தியாவில் அறிமுகப்படுத்துகிறது மஹிந்திரா!

பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பீஜோ இருசக்கர வாகன நிறுவனத்தை மஹிந்திரா கையகப்படுத்தி உள்ளது. பீஜோ இருசக்கர வாகனங்களை இந்தியாவில் அறிமுகப்படுத்துவது குறித்தும் தீவிரமாக பரிசீலனை செய்து வருகிறது. இந்த நிலையில், பீஜோ இ லூடிக்ஸ் ஸ்கூட்டரை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வருவதற்கு மஹிந்திரா திட்டமிட்டுள்ளதாக எக்கனாமிக் டைம்ஸ் தளத்தில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

பீஜோ இ லூடிக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்தியாவில் அறிமுகப்படுத்துகிறது மஹிந்திரா!

பீஜோ இ லூடிக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மஹாராஷ்டிர மாநிலம், புனே நகரில் உள்ள மஹிந்திரா ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தில் வடிவமைக்கப்பட்டது. பீதம்பூரில் உள்ள மஹிந்திரா இருசக்கர வாகன ஆலையில் உற்பத்தி செய்யப்பட்டு பிரான்ஸ் நாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

பீஜோ இ லூடிக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்தியாவில் அறிமுகப்படுத்துகிறது மஹிந்திரா!

இந்த நிலையில், இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்தியாவிலும் விற்பனைக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகளில் மஹிந்திரா நிறுவனம் ஈடுபட்டுள்ளது.

பீஜோ இ லூடிக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்தியாவில் அறிமுகப்படுத்துகிறது மஹிந்திரா!

இதுகுறித்து மஹிந்திரா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பவன் கோயங்கோ கூறுகையில்," இந்திய சந்தையில் சரியான விலையில் பீஜோ இ லூடிக்ஸ் ஸ்கூட்டரை சந்தைப்படுவதற்கு பணிகள் நடந்து வருகின்றன. இ லூடிக்ஸ் ஸ்கூட்டருக்கு மாற்றான மாடலை களமிறக்குவது குறித்தும் ஆய்வு செய்து வருகிறோம்.

பீஜோ இ லூடிக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்தியாவில் அறிமுகப்படுத்துகிறது மஹிந்திரா!

ஏனெனில், மிகச் சரியான விலையில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை கொண்டு வருவதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இ லூடிக்ஸ் ஸ்கூட்டரை பீஜோ பிராண்டிலேயே விற்பனைக்கு கொண்டு வருவதா அல்லது மஹிந்திரா பிராண்டில் ரீபேட்ஜ் செய்வதா என்பது குறித்து இன்னமும் முடிவு எடுக்கவில்லை," என்று தெரிவித்துள்ளார்.

பீஜோ இ லூடிக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்தியாவில் அறிமுகப்படுத்துகிறது மஹிந்திரா!

பீஜோ லூடிக்ஸ் 50 சிசி பெட்ரோல் மாடலின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட பீஜோ இ லூடிக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் கடந்த 2018ம் ஆண்டு பாரிஸ் மோட்டார் ஷோவில் அறிமுகம் செய்யப்பட்டது.

பீஜோ இ லூடிக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்தியாவில் அறிமுகப்படுத்துகிறது மஹிந்திரா!

இந்த ஸ்கூட்டரில் பாஷ் நிறுவனத்திடமிருந்து சப்ளை பெறப்படும் 3kW லித்தியம் அயான் பேட்டரி பயன்படுத்தப்படுகிது. இந்த ஸ்கூட்டர் வெறும் 85 கிலோ மட்டுமே எடை கொண்டது.

பீஜோ இ லூடிக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்தியாவில் அறிமுகப்படுத்துகிறது மஹிந்திரா!

இதன் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 50 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங் சிஸ்டமும் உள்ளது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மணிக்கு 45 கிமீ வேகம் வரை செல்லும் திறன் வாய்ந்தது.

More from DriveSpark

Article Published On: Saturday, February 8, 2020, 16:41 [IST]
English summary
According to report, Mahindra is planning to launch Peugeot e-Ludix electric scooter in India.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+