அட்டகாசமான இரு நிறத்தேர்வுகளில் அறிமுகமாகும் பிஎஸ்6 மஹிந்திரா மோஜோ 300 ஏபிஎஸ் பைக்...

கார்னெட் கருப்பு நிற தேர்வை தொடர்ந்து ரப்பி ரெட் நிறத்தில் மோஜோ 300 பைக்கின் படத்தை மஹிந்திரா நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதனை பற்றி விரிவாக இந்த செய்தியில் பார்ப்போம்.

அட்டகாசமான இரு நிறத்தேர்வுகளில் அறிமுகமாகும் பிஎஸ்6 மஹிந்திரா மோஜோ 300 ஏபிஎஸ் பைக்...

தற்போது வெளியிடப்பட்டுள்ள பிஎஸ்6 மோஜோ 300 பைக்கின் இரண்டாவது படத்தின் மூலமாக இந்த பைக் குறைந்தது கார்னெட் ப்ளாக் மற்றும் ரப்பி ரெட் என்ற இரு நிறத்தேர்வுகளையாவது கொண்டிருக்கும் என்பது உறுதியாகிறது.

அட்டகாசமான இரு நிறத்தேர்வுகளில் அறிமுகமாகும் பிஎஸ்6 மஹிந்திரா மோஜோ 300 ஏபிஎஸ் பைக்...

கார்னெட் ப்ளாக் நிறத்தில் பைக் எவ்வாறு இருக்கும் என்பதை ஏற்கனவே பார்த்துவிட்டோம். தற்போது வெளியாகியுள்ள ரப்பி சிவப்பு நிறத்தேர்வில் பைக்கின் பெட்ரோல் டேங்க் உள்ளிட்ட சில பாகங்கள் அடர் சிவப்பு நிறத்தை கொண்டுள்ளன.

அட்டகாசமான இரு நிறத்தேர்வுகளில் அறிமுகமாகும் பிஎஸ்6 மஹிந்திரா மோஜோ 300 ஏபிஎஸ் பைக்...

ஆனால் ஃப்ரேம் மற்றும் ஸ்விங்கார்ம் உள்பட பெரும்பான்மையான பாகங்கள் கருப்பு நிறத்தில் தான் காட்சியளிக்கின்றன. இவை கார்னெட் ப்ளாக் நிறத்தேர்வில் சிவப்பு நிறத்தில் வடிவமைக்கப்பட்டு இருந்தன. பைக்கின் அலாய் சக்கரங்களின் பின்ஸ்ட்ரிப் சிவப்பு நிறத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.

அட்டகாசமான இரு நிறத்தேர்வுகளில் அறிமுகமாகும் பிஎஸ்6 மஹிந்திரா மோஜோ 300 ஏபிஎஸ் பைக்...

இவ்வாறான நிறத்தில் பின்ஸ்ட்ரிப்பை முந்தைய நிறத்தேர்விலும் பார்க்க முடிந்திருந்தது. பின்புற கௌல் சிவப்பு-கருப்பு நிறத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இரண்டு நிறத்தேர்வுகளிலும் பைக்கின் ஹெட்லைட் கௌல் கருப்பு நிறத்திலேயே தொடர்கிறது.

அட்டகாசமான இரு நிறத்தேர்வுகளில் அறிமுகமாகும் பிஎஸ்6 மஹிந்திரா மோஜோ 300 ஏபிஎஸ் பைக்...

என்ஜினிற்கு அடிப்பகுதியில் உள்ள அண்டர்பெல்லி பேனின் டிசைனில் மஹிந்திரா நிறுவனம் அப்டேட்டாக சென்றுள்ளது. அதேபோல் பெரிய ரேடியட்டர் கவசமும் பக்கவாட்டு பேனல்களின் டிசைனிற்கு ஒத்த ஷேட்களை பெற்றுள்ளது.

அட்டகாசமான இரு நிறத்தேர்வுகளில் அறிமுகமாகும் பிஎஸ்6 மஹிந்திரா மோஜோ 300 ஏபிஎஸ் பைக்...

மற்றப்படி பைக்கின் தோற்றம் மொத்தமும் 2019ல் அறிமுகமான இதன் பிஎஸ்4 வெர்சனை தான் ஒத்து காணப்படுறது. இதனால் இரட்டை-ஹெட்லேம்ப் செட்அப், பாடி பேனல்கள், பெரிய ரேடியேட்டர் கவசங்கள் மற்றும் எக்ஸாஸ்ட் உள்ளிட்டவற்றின் டிசைனில் எந்த மாற்றமும் இல்லை.

அட்டகாசமான இரு நிறத்தேர்வுகளில் அறிமுகமாகும் பிஎஸ்6 மஹிந்திரா மோஜோ 300 ஏபிஎஸ் பைக்...

பிஎஸ்6 தரத்தில் இந்த பைக்கில் பொருத்தப்படவுள்ள 294.72சிசி, சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் வெளிப்படுத்தக்கூடிய ஆற்றல் அளவுகள் எதுவும் தற்போதைக்கு வெளியாகவில்லை. இந்த என்ஜின் பிஎஸ்4 வெர்சனில் 7,500 ஆர்பிஎம்-ல் 26.29 பிஎச்பி பவரையும், 5,500 ஆர்பிஎம்-ல் 28 என்எம் டார்க் திறனையும் பைக்கிற்கு வழங்குகிறது.

அட்டகாசமான இரு நிறத்தேர்வுகளில் அறிமுகமாகும் பிஎஸ்6 மஹிந்திரா மோஜோ 300 ஏபிஎஸ் பைக்...

தயாரிப்பு நிறுவனத்தின் மொத்த சுமையையும் தனியாளாக சுமந்துவரும் மோஜோ 300 ஏபிஎஸ் பைக்கின் பிஎஸ்6 வெர்சனின் அறிமுகத்தில் மஹிந்திரா நிறுவனம் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. உண்மையில் இந்த நிற கலவையில் பைக் அட்டகாசமான தோற்றத்தில் உள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

More from DriveSpark

Article Published On: Sunday, July 19, 2020, 13:30 [IST]
English summary
After Garnet Black, BS6 Mahindra Mojo 300 ABS Ruby Red colour revealed
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+