ராயல் எண்ட்பீல்டு கிளாசிக் 350-க்கு போட்டியாக மேஷ் டெஸெர்ட் ஃபோர்ஸ் 400 லிமிடெட் எடிசன்...

மேஷ் மோட்டார்ஸ் நிறுவனத்தின் டெஸெர்ட் ஃபோர்ஸ் 400 லிமிடெட் எடிசன் பைக் பிரான்ஸ் நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அங்கு ராயல் எண்ட்பீல்டு கிளாசிக் 350 பைக்குடன் விற்பனையில் போட்டியிடவுள்ள இந்த 400சிசி பைக்கை பற்றி இந்த செய்தியில் பார்ப்போம்.

ராயல் எண்ட்பீல்டு கிளாசிக் 350-க்கு போட்டியாக மேஷ் டெஸெர்ட் ஃபோர்ஸ் 400 லிமிடெட் எடிசன்...

மேஷ் டெஸெர்ட் ஃபோர்ஸ் 400 பைக்கை தயாரித்துள்ள மேஷ் மோட்டார்ஸ் நிறுவனம் பிரான்ஸ் நாட்டை தலைமையிடமாக கொண்ட நிறுவனமாகும். கடந்த 2014ல் இருந்து தயாரிப்புகளை பிரான்ஸ் உள்பட அனைத்து ஐரோப்பிய நாடுகளிலும் சந்தைப்படுத்தி வருகின்ற இந்த நிறுவனம் தற்போது புதியதாக களமிறக்கியுள்ள மேஷ் டெஸெர்ட் ஃபோர்ஸ் 400 பைக் மாடலை ஐரோப்பா முழுவதிலும் வெறும் 103 யூனிட்கள் மட்டுமே விற்பனை செய்யவுள்ளது.

ராயல் எண்ட்பீல்டு கிளாசிக் 350-க்கு போட்டியாக மேஷ் டெஸெர்ட் ஃபோர்ஸ் 400 லிமிடெட் எடிசன்...

மேஷ் மோட்டார்ஸ் நிறுவனம் ரெட்ரோ மோட்டார்சைக்கிள்களின் தயாரிப்பில் பிரபலமானது என்பதால் இந்த புதிய பைக் மாடலும் அதே டிசைனில் தான் தொடர்ந்துள்ளது. புதிய மேஷ் டெஸெர்ட் ஃபோர்ஸ் 400 பைக்கின் விலை 4994 யூரோவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு இந்திய ரூபாயில் 4.14 லட்சமாகும்.

ராயல் எண்ட்பீல்டு கிளாசிக் 350-க்கு போட்டியாக மேஷ் டெஸெர்ட் ஃபோர்ஸ் 400 லிமிடெட் எடிசன்...

முன்னதாக கடந்த ஆண்டில் இந்த நிறுவனம் மேஷ் ஃபோர்ஷ் 400 மாடலை அந்நாட்டு ராணுவத்தின் பச்சை நிற பெயிண்ட் அமைப்பிலும் அறிமுகப்படுத்தியிருந்தது. இதன் லிமிடெட் எடிசன் பைக் மாடல் தான் தற்போது மேஷ் டெஸெர்ட் ஃபோர்ஸ் 400 என்ற பெயரில் சந்தைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

ராயல் எண்ட்பீல்டு கிளாசிக் 350-க்கு போட்டியாக மேஷ் டெஸெர்ட் ஃபோர்ஸ் 400 லிமிடெட் எடிசன்...

மேஷ் ஃபோர்ஸ் 400 மாடலை போன்று இந்த புதிய லிமிடெட் எடிசனும் 1950களில் அமெரிக்க நாட்டின் இராணுவ மோட்டார்சைக்கிள்களின் தோற்றத்தில் காட்சியளிக்கிறது. டிசைன் அமைப்பை பொறுத்தவரையில், இந்த புதிய மாடல் விண்டேஜ் எரிபொருள் டேங்க், ஸ்போக் சக்கரங்கள், ஸ்ப்ரிங்-லோடட் இருக்கைகள், ட்வின் பேஷூட்டர் எக்ஸாஸ்ட்கள் மற்றும் ஃபெண்டரில் பொருத்தப்பட்ட முன்புற நம்பர் ப்ளேட் உள்ளிட்டவற்றை பெற்றுள்ளது.

ராயல் எண்ட்பீல்டு கிளாசிக் 350-க்கு போட்டியாக மேஷ் டெஸெர்ட் ஃபோர்ஸ் 400 லிமிடெட் எடிசன்...

இவ்வாறான பழமையான பைக் மாடலுக்கு உண்டான பாகங்களை பெற்றிருந்தாலும் மேஷ் ஃபோர்ஸ் 400 மாடல், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், ஃப்யூல்-இன்ஜெக்‌ஷன் சிஸ்டம், ஏபிஎஸ் ப்ரேக் சிஸ்டத்துடன் உள்ள முன்புற டிஸ்க் ப்ரேக் போன்ற மாடர்ன் பாகங்களையும் கொண்டுள்ளது.

ராயல் எண்ட்பீல்டு கிளாசிக் 350-க்கு போட்டியாக மேஷ் டெஸெர்ட் ஃபோர்ஸ் 400 லிமிடெட் எடிசன்...

பைக்கில் சஸ்பென்ஷனிற்கு முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க்ஸும், பின்புறத்தில் ட்யூல்-அப்சார்பர்களும் உள்ளன. முன்புறத்தில் 18 இன்ச்சில் மற்றும் பின்புறத்தில் 17 இன்ச்சில் உள்ள ஸ்போக்டு சக்கரங்கள் ஆன்-ரோடு & ஆஃப்-ரோடு என இரு விதமான பயன்பாட்டிற்கும் ஏற்ற டயரை கொண்டுள்ளன.

ராயல் எண்ட்பீல்டு கிளாசிக் 350-க்கு போட்டியாக மேஷ் டெஸெர்ட் ஃபோர்ஸ் 400 லிமிடெட் எடிசன்...

ப்ரேக்கிங்கிற்கு முன் மற்றும் பின் சக்கரத்தில் முறையே 280 மிமீ டிஸ்க் மற்றும் 160 மிமீ ட்ரம் ப்ரேக்குகள், சிங்கிள்-சேனல் ஏபிஎஸ் ப்ரேக்கிங் சிஸ்டத்துடன் உள்ளன. இவற்றுடன் 13 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்ரோல் டேங்கை பெற்றுள்ள இந்த புதிய லிமிடெட் எடிசனின் மொத்த கெர்ப் எடை 163 கிலோவாக உள்ளது.

ராயல் எண்ட்பீல்டு கிளாசிக் 350-க்கு போட்டியாக மேஷ் டெஸெர்ட் ஃபோர்ஸ் 400 லிமிடெட் எடிசன்...

மற்றப்படி பைக்கின் இயக்க ஆற்றல் குறித்து மேஷ் மோட்டார்ஸ் நிறுவனம் எந்த தகவலையும் வெளியிடவில்லை என்றாலும், இந்த புதிய லிமிடெட் எடிசனும் 397சிசி ஏர்-கூல்டு ஃப்யூல்-இன்ஜெக்டட் சிங்கிள்-சிலிண்டர் என்ஜினை தான் பெற்றிருக்கும் என்பது நமக்கு தெரியும்.

ராயல் எண்ட்பீல்டு கிளாசிக் 350-க்கு போட்டியாக மேஷ் டெஸெர்ட் ஃபோர்ஸ் 400 லிமிடெட் எடிசன்...

வழக்கமான மேஷ் ஃபோர்ஸ் பைக்குடன் ஒத்த ஆற்றலை வெளியிடும் இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 27 பிஎச்பி பவரையும், 30 என்எம் டார்க் திறனையும் அதன் புதிய லிமிடெட் எடிசனுக்கு வழங்கும். இந்த புதிய எடிசன் வெறும் 103 யூனிட்களில் மட்டுமே சந்தைப்படுத்தப்பட்டுள்ளதால் ஐரோப்பாவை தாண்டி வேறு நாடுகளுக்கு விற்பனை செய்யப்படாது.

More from DriveSpark

Article Published On: Sunday, May 10, 2020, 12:24 [IST]
English summary
Mash Desert Force 400 debuts – A Royal Enfield rival from France
மேலும்... #ஆட்டோ #auto news
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+