பைக் மாடிஃபைடில் மீண்டும் மெர்சல் காட்டியுள்ள கேரளா... இம்முறை கேடிஎம் ஆர்சி200 பைக்...

கேரளாவை சேர்ந்த கேடிஎம் ஆர்சி200 பைக் ஒன்று புனேவை சேர்ந்த கஸ்டமைஸ்ட் நிறுவனத்தால் புதிய தோற்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இதுகுறித்து தி டிமோன்ஸ்பீடு என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள படங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

பைக் மாடிஃபைடில் மீண்டும் மெர்சல் காட்டியுள்ள கேரளா... இம்முறை கேடிஎம் ஆர்சி200 பைக்...

முன்னணி இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான கேடிஎம் இந்த வருட துவக்கத்தில் அதன் மொத்த சிங்கிள்-சிலிண்டர் லைன்-அப்பையும் பிஎஸ்6 தரத்தில் அப்டேட் செய்து வருகிறது. மேலும் புத்தம் புதியதாக 390 அட்வென்ஜெர் ட்யூல்-ஸ்போர்ட் மோட்டார்சைக்கிளையும் அறிமுகப்படுத்தி இருந்தது.

பைக் மாடிஃபைடில் மீண்டும் மெர்சல் காட்டியுள்ள கேரளா... இம்முறை கேடிஎம் ஆர்சி200 பைக்...

பிஎஸ்6 அப்டேட்டை பெற்ற மோட்டார்சைக்கிள்களுள் ஒன்றாக உள்ள கேடிஎம் ஆர்சி200-ன் விலை எக்ஸ்ஷோரூமில் ரூ.1.97 லட்சமாக உள்ளது. இதில் 199.5சிசி லிக்யூடு டிஒஎச்சி சிங்கிள்-சிலின்டர் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 10,000 ஆர்பிஎம்-ல் 24.65 பிஎச்பி பவரையும், 8,000 ஆர்பிஎம்-ல் 19.2 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்துகிறது.

பைக் மாடிஃபைடில் மீண்டும் மெர்சல் காட்டியுள்ள கேரளா... இம்முறை கேடிஎம் ஆர்சி200 பைக்...

இந்த என்ஜின் உடன் ட்ரான்ஸ்மிஷனிற்கு 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. வெவ்வேறு ஸ்டைலிங் அணுகுமுறை மற்றும் ஈர்க்கக்கூடிய செயல்திறனால் 200சிசி சிங்கிள்-சிலிண்டர் மோட்டார்சைக்கிள் பிரிவில் இளம் தலைமுறையினரை கவர்ந்திழுக்கும் பைக்காக ஆர்சி200 விளங்குகிறது.

பைக் மாடிஃபைடில் மீண்டும் மெர்சல் காட்டியுள்ள கேரளா... இம்முறை கேடிஎம் ஆர்சி200 பைக்...

இருப்பினும் இந்த பைக்கை சிலர் தங்களுக்கு ஏற்றவாறு மாடிஃபைடு செய்ய மறப்பதில்லை. இதற்காக அவர்கள் சில சந்தைக்கு பிறகான பாகங்கள் மற்றும் நேர்த்தியான பெயிண்ட்/வ்ராப் அமைப்புகளை பயன்படுத்துகின்றனர். இதற்கு ஒரு உதாரணம் தான் இந்த கேரள ஆர்சி200 பைக்.

பைக் மாடிஃபைடில் மீண்டும் மெர்சல் காட்டியுள்ள கேரளா... இம்முறை கேடிஎம் ஆர்சி200 பைக்...

கஸ்டமைஸ்ட் மாற்றமாக பைக்கிற்கு பளபளப்பான மெட்டாலிக் ப்ளூ/வொய்ட் காம்போ, பளபளப்பான கருப்பு நிற தீம் உடன் உரிமையாளர் கொண்டுவந்துள்ளார். இருப்பினும் ஸ்டாக் மாடலின் ஆரஞ்ச் நிறம் இருந்தாலும் மிகவும் குறைவான இடங்களில் மட்டுமே காட்சியளிக்கிறது.

பைக் மாடிஃபைடில் மீண்டும் மெர்சல் காட்டியுள்ள கேரளா... இம்முறை கேடிஎம் ஆர்சி200 பைக்...

இந்த வ்ராப் செயல்பாடுகள் அனைத்தும் ஸெட் ஒன் என்ற மையத்தில் நடைபெற்றுள்ளது. இவற்றுடன் சில கஸ்டம் பாகங்களையும் இந்த பைக் புனேவை சேர்ந்த ஆட்டோலாக் டிசைன் என்ற கஸ்டமைஸ்ட் நிறுவனத்தில் இருந்து பெற்றுள்ளது. பைக்கில் முக்கியமான அம்சமாக இருக்கை ஒற்றையாக வழங்கப்பட்டுள்லது.

பைக் மாடிஃபைடில் மீண்டும் மெர்சல் காட்டியுள்ள கேரளா... இம்முறை கேடிஎம் ஆர்சி200 பைக்...

இதனால் பைக்கை தினசரி பயன்பாட்டிற்கு பயன்படுத்துவது முடியாததாகவே இருக்கும். ஏனெனில் மோட்டோஜிபி பைக்குகளில் உள்ள அளவிற்கு கூட இருக்கையில் குஷின் இருக்க வாய்ப்பில்லை. மற்றப்படி என்ஜின் அமைப்பில் எந்த மாற்றமும் கொண்டுவரப்படவில்லை.

More from DriveSpark

Article Published On: Monday, July 13, 2020, 17:30 [IST]
English summary
KTM RC 200 modified by owner in Kerala – Gets styling upgrade, new colour
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+