பர்க்மேனுக்கு போட்டி.. மலிவு விலை மேக்ஸி ஸ்கூட்டரை களமிறக்கும் அப்ரில்லா! புள்ளிங்கோக்களை கவர அதிரடி

அப்ரில்லா நிறுவனம் ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்திய மலிவு விலை மேக்ஸி ரகத்திலான ஸ்கூட்டரை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அது எப்போது என்பதுகுறித்த தகவலை இந்த பதிவில் காணலாம்.

பர்க்மேனுக்கு போட்டியாக மலிவு விலை மேக்ஸி ஸ்கூட்டரை களமிறக்கும் அப்ரில்லா... புள்ளிங்கோக்களை கவர அதிரடி...

2020 ஆட்டோ எக்ஸ்போ கிரேட்டர் நொய்டாவில் அமோகமாக நடைபெற்றது. இங்கு உலகளாவிய வாகன உற்பத்தி நிறுவனங்கள் அவற்றின் புத்தம் புதிய தயாரிப்புகளை காட்சிப்படுத்தின. அதில் பெரும்பாலும் புதிதாக அப்கிரேட் செய்யப்பட்ட மற்றும் எதிர்காலத்தில் களமிறக்கப்பட உள்ளே வாகனங்களே அதிகமாக படையெடுத்திருந்தன.

பர்க்மேனுக்கு போட்டியாக மலிவு விலை மேக்ஸி ஸ்கூட்டரை களமிறக்கும் அப்ரில்லா... புள்ளிங்கோக்களை கவர அதிரடி...

அந்தவகையில், ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த பல வாகனங்கள் தற்போது இந்திய சந்தையில் விற்பனைக்கு உறுதி செய்யப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், அப்ரில்லா நிறுவனமும் ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தியிருந்த அதன் குறைந்த விலை எஸ்எக்ஸ்ஆர் 125 மற்றும் எஸ்எக்ஸ்ஆர் 160 ஸ்கூட்டரை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவிருப்பதை உறுதிப்படுத்தியுள்ளது.

பர்க்மேனுக்கு போட்டியாக மலிவு விலை மேக்ஸி ஸ்கூட்டரை களமிறக்கும் அப்ரில்லா... புள்ளிங்கோக்களை கவர அதிரடி...

அநேகரின் கண்களை தன் வசம் ஈர்த்த இந்த ஸ்கூட்டர்கள் நடப்பாண்டின் இறுதிக்குள் விற்பனைக்கு கொண்டுவரப்படும் என்ற தகவலை அது உறுதி செய்திருக்கின்றது. இதில், எஸ்எக்ஸ்ஆர் 125 ஸ்கூட்டர் தற்போது விற்பனையில் இருக்கும் மற்ற மேக்ஸி ரக ஸ்கூட்டர்களைக் காட்டிலும் மலிவு விலைக் கொண்டதாக இருக்கும் என்ற தகவல்கள் வெளியாகிய வண்ணம் இருக்கின்றது.

பர்க்மேனுக்கு போட்டியாக மலிவு விலை மேக்ஸி ஸ்கூட்டரை களமிறக்கும் அப்ரில்லா... புள்ளிங்கோக்களை கவர அதிரடி...

இந்த ஸ்கூட்டர் மலிவு விலையைக் கொண்டதாக இருந்தாலும், அப்ரில்லா நிறுவனத்திற்கே உரித்தான டிசைன் தாத்பரியங்களுடன் விற்பனைக்குக் கிடைக்கும் என்றும் கூறப்படுகின்றது. குறிப்பாக இந்த ஸ்கூட்டர் ஸ்போர்ட் மேக்ஸி வடிவமைப்பில் உருவாக்கப்பட்டிருக்கின்றது.

பர்க்மேனுக்கு போட்டியாக மலிவு விலை மேக்ஸி ஸ்கூட்டரை களமிறக்கும் அப்ரில்லா... புள்ளிங்கோக்களை கவர அதிரடி...

ஆகையால், இது விற்பனைக்கு வரும் பட்சத்தில் அநேகளவிலான புள்ளிங்கோக்களைக் கவரும் என தெரிகின்றது. இதன் ஸ்டைல் மற்றும் திறன் அவர்களைக் கவர்கின்ற வகையிலேயே இருக்கின்றது.

பர்க்மேனுக்கு போட்டியாக மலிவு விலை மேக்ஸி ஸ்கூட்டரை களமிறக்கும் அப்ரில்லா... புள்ளிங்கோக்களை கவர அதிரடி...

ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த அப்ரில்லா எஸ்எக்ஸ்ஆர் 160 ஸ்கூட்டரில் காணப்படும் அனைத்து மின் விளக்குகளும் எல்இடி தரத்தில் இருக்கின்றது. இத்துடன், இந்த ஸ்கூட்டரில் டிஸ்க் பிரேக் பாதுகாப்பான பயணத்தை உறுதிப்படுத்தும் வகையில் கொடுக்கப்பட்டுள்ளது.

ஆனால், இதன் சிறிய மாடலாக காட்சிப்படுத்தப்பட்ட எஸ்எக்ஸ்ஆர் 125 ஸ்கூட்டரில் டிஸ்க் பிரேக் மற்றும் ஃபுல் எல்இடி ஹெட்லேம்ப் நீக்கப்பட்டுள்ளது.

பர்க்மேனுக்கு போட்டியாக மலிவு விலை மேக்ஸி ஸ்கூட்டரை களமிறக்கும் அப்ரில்லா... புள்ளிங்கோக்களை கவர அதிரடி...

இந்த ஸ்கூட்டரின் விலையை மலிவானதாக மாற்றும் நோக்கில் அப்ரில்லா நிறுவனம் இத்தகைய நடவடிக்கையை கையாண்டுள்ளது. இதேபோன்று, ஒரு சில சிறப்பு அம்சங்கள் இந்த ஸ்கூட்டரில் தவறலாம் என கூறப்படுகின்றது. இவையனைத்தையும் விலை குறைப்பு நடவடிக்கையாக அப்ரில்லா மேற்கொண்டுள்ளது.

பர்க்மேனுக்கு போட்டியாக மலிவு விலை மேக்ஸி ஸ்கூட்டரை களமிறக்கும் அப்ரில்லா... புள்ளிங்கோக்களை கவர அதிரடி...

அதேசமயம், ஏற்கனவே விற்பனையில் இருக்கும் எஸ்ஆர் 125 மாடலில் காணப்படுகின்ற ஒரு சில அம்சங்களை இந்த எஸ்எக்ஸ்ஆர்125 மாடலில் காணமுடியும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

பர்க்மேனுக்கு போட்டியாக மலிவு விலை மேக்ஸி ஸ்கூட்டரை களமிறக்கும் அப்ரில்லா... புள்ளிங்கோக்களை கவர அதிரடி...

குறிப்பாக இவ்விரு ஸ்கூட்டர்களிலும் ஒரே மாதிரியான எஞ்ஜின்தான் காணப்படுகின்றது. அது, 124 சிசி திறன் கொண்ட ப்யூவல் இன்ஜெக்டட் எஞ்ஜின் ஆகும். இது அதிகபட்சமாக 9.4 பிஎச்பி மற்றும் 8.2 என்எம் டார்க்கை வெளிப்படுத்தும் சக்தியைக் கொண்டுள்ளது.

இந்த ஸ்கூட்டரில் சிறப்பான சஸ்பென்ஷனை வெளிப்படுத்தும் வகையில் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகள் முன்பக்கத்ததிலும், பின் பக்கத்தில் சிங்கிள் ஷாக் அப்சார்பரும் நிறுவப்பட்டுள்ளது.

பர்க்மேனுக்கு போட்டியாக மலிவு விலை மேக்ஸி ஸ்கூட்டரை களமிறக்கும் அப்ரில்லா... புள்ளிங்கோக்களை கவர அதிரடி...

இத்துடன், இரு முனைகளிலும் 12 இன்ச் கொண்ட வீல்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதில், அப்ரில்லாவின் பெரிய அளவு மாடலான எஸ்எக்ஸ்ஆர் 160 வருகின்ற செப்டம்பர் மாத்திலும், இதையடுத்து எஸ்எக்ஸ்ஆர் 125 நடப்பாண்டின் இறுதியிலும் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளன.

பர்க்மேனுக்கு போட்டியாக மலிவு விலை மேக்ஸி ஸ்கூட்டரை களமிறக்கும் அப்ரில்லா... புள்ளிங்கோக்களை கவர அதிரடி...

இவ்விரு ஸ்கூட்டர்களும் இந்தியாவில் ஏற்கனவே விற்பனையில் இருக்கும் பர்க்மேன் 125 மற்றும் ஹோண்டா ஆக்டிவா 125 ஆகிய ஸ்கூட்டர்களுக்கு கடுமையான போட்டியை வழங்கவிருக்கின்றன.

Source: bikewale

Most Read Articles

மேலும்... #அப்ரில்லா #aprilia
English summary
More Affordable SXR 125 Will Be Launching In India. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X