Just In
- 3 hrs ago
டாடா ஹாரியர் காரின் விற்பனை அமோகம்... அடுத்து இந்திய சந்தையை கலக்க வருகிறது புதிய சஃபாரி...
- 4 hrs ago
350,000வது மான்ஸ்டர் பைக்கை டெலிவிரி செய்தது டுகாட்டி!! இந்தியாவில் விற்பனையில் இருக்கா?
- 6 hrs ago
இவ்வளவு கம்மி விலையில் கிடைக்கும்போது வாங்காமல் விட முடியுமா? நிஸான் மேக்னைட் காருக்கு 35 ஆயிரம் முன்பதிவுகள்!
- 6 hrs ago
ஹோண்டா மின்சார பைக் எப்படி இருக்கும் தெரியுமா?.. இணையத்தில் கசிந்த புகைப்படம்...
Don't Miss!
- News
சங்கமம் கலைநிகழ்ச்சிகளுடன் இன்று மினசோட்டா தமிழ் சங்கத்தின் பொங்கல் விழா!
- Sports
தம்பிகளா.. அப்படி ஓரமா போய் உட்காருங்க.. இளம் வீரர்களுக்கு நோ சான்ஸ்.. இந்திய அணி முடிவு!
- Finance
யூனியன் பட்ஜெட் 2020-க்காக சிறப்பு ஆப்.. மோடி அரசின் புதிய டிஜிட்டல் சேவை..!
- Movies
கொல மாஸ்.. சிறுவர் சீர்த்திருத்த பள்ளியில் ‘குட்டி ஸ்டோரி’ பாடும் விஜய்.. வெளியானது வீடியோ பாடல்!
- Lifestyle
எல்லோரும் விரும்பும் கூட்டாளராக நீங்க இருக்க என்ன பண்ணனும் தெரியுமா?
- Education
10-வது தேர்ச்சியா? ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ஹெல்மெட் விஷயத்தில் வருகிறது புதிய ஆர்டர்... புது விதி என்ன கூறுகிறது என தெரியுமா?... வாருங்கள் பார்க்கலாம்!
சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம், இருசக்கர வாகன ஓட்டிகளின் பாதுகாப்பில் முக்கிய அங்கமாக இருக்கும் ஹெல்மெட் விவகாரத்தில் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு பாதுகாப்பு வழங்கக்கூடிய அம்சங்களில் ஹெல்மெட்டும் ஒன்று. எனவேதான், இதனை இந்தியா மோட்டார் வாகன சட்டம் கட்டாயமாக்கியுள்ளது. இருசக்கர வாகன ஓட்டி மட்டுமின்றி பின்னால் அமர்ந்து செல்பவர்களும் கட்டாயம் தலைக் கவசம் அணிய வேண்டும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்தநிலையில், ஹெல்மெட் சார்ந்த புதிய அறிவிப்பு ஒன்றை மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இது வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், வருகின்ற 1 ஜூன் 2021 முதல் ஐஎஸ்ஐ தர சான்று பெற்ற தலைக் கவசங்களை மட்டுமே நாட்டில் விற்பனைச் செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

மத்திய அரசின் இந்த நடவடிக்கையின் மூலம் தற்போது பாதுகாப்பற்ற தரத்தில் விற்பனைக்குக் கிடைக்கும் ஹெல்மெட்டுகளின் விற்பனை முழுமையாக முடக்கப்படும். மேலும், இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு முழுமையான பாதுகாப்பை வழங்கக் கூடிய தலைக்கவசங்கள் மட்டும் விற்பனைக்குக் கிடைக்கின்ற நிலை உருவாகும்.

அதாவது, விற்பனைக்கு வரக்கூடிய அனைத்து ஹெல்மெட்டுகளுமே இந்திய தர நிர்ணய பணியகத்தின் சான்றைப் பெறுவது கட்டாயமாகியிருப்பதால், தரமற்ற ஹெல்மெட்டுகளின் விற்பனை அடியோடு தூக்கப்படும். மேலும், சந்தையில் பாதுகாப்பு திறன்களைக் கொண்ட ஹெல்மெட்டுகள் மட்டுமே கிடைக்கும். ஆகையால், இருசக்கர வாகன ஓட்டிகளால் கூடுதல் பாதுகாப்பான பயணத்தைப் பெற முடியும்.

உச்ச நீதிமன்றம் முன்மொழிந்த உத்தரவின் அடிப்படையில், மத்திய சாலை மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சகம் அண்மையில் தனிக் குழு ஒன்றை அமைத்தது. பல்துறை சார்ந்த நிபுணர்கள், எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் பிஐஎஸ் அமைப்பின் அதிகாரிகள் சிலர் இந்த குழுவில் அடங்குவர். இவர்கள் அனைவரும் இணைந்து ஆலோசித்து பல்வேறு புதுப்பித்தல்களை ஹெல்மெட் தயாரிப்பிற்காக வகுத்துள்ளனர்.

இந்த புதிய விதிகள், ஹெல்மெட் இலகுவான எடையில் இருக்க வேண்டும். அதிக பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என பல்வேறு புதிகளை கொண்டதாக இருக்க வேண்டும் என கூறுகின்றது. இத்துடன், மிக முக்கியமாக இந்திய சாலைகளுக்கு ஏற்றதாக ஹெல்மெட்டுகள் இருக்க வேண்டும். இத்தகைய ஹெல்மெட்டுகளுக்கு மட்டுமே விற்பனைக்கான அனுமதி வழங்கப்படும் என உற்பத்திக்கான பல்வேறு வழிக் காட்டுதல்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதனை வருகின்ற 2021 மே மாத இறுதிக்குள் நடைமுறைப்படுத்த வேண்டும் என ஹெல்மெட் உற்பத்தி நிறுவனங்களுக்கு கூறப்பட்டுள்ளது. இதன்படி, வருகின்ற ஜூன் மாதம் 1ம் தேதி முதல் விற்பனைக்கு வரவிருக்கும் ஹெல்மட்டுகள் 1.2 கிலோகிராம் எடைக்கும் குறைவாக இருக்கும். இதுபோன்ற பல்வேறு மாற்றங்கள் புதிய ஹெல்மெட்டுகளுல் இருக்கும்.

குறைந்தபட்ச எடை விதியை கடந்த 2018ம் ஆண்டே இந்திய அரசு அறிமுகம் செய்துவிட்டது. ஆனால், குறிப்பிட்ட ஒரு சில காரணங்களுக்காக அறிமுகம் செய்யப்பட்ட மிகக் குறைந்த நாட்களிலேயே அந்த அறிவிப்பு பின் வாங்கப்பட்டது. தற்போது மீண்டும் நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.

தற்போது கூறப்பட்டிருக்கும் எடை சிறிது அதிகமாக தென்பட்டாலும்கூட விற்பனைக்கான அனுமதி கிடைக்காது. இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்ட ஹெல்மெட்டுகளுக்கான விற்பனைக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அவை, டிஓடி (DOT) மற்றும் இசிஇ (ECE) ஆகிய சர்வதேச சான்றுடன் விற்பனைக்குக் கிடைக்க இருக்கின்றன.