அதிக பாதுகாப்பு... விலையும் கம்மி... ட்யூவல் சேனல் ஏபிஎஸ் வசதி கொண்ட பைக்குகள்... இதோ பட்டியல்...

குறைந்த விலையில் அதிக பாதுகாப்பு அம்சமான ட்யூவல் சேனல் ஏபிஎஸ் வசதியைக் கொண்டு விற்பனையில் இருக்கும் பைக்குகளின் பட்டியலைத் தொகுத்து வழங்கியுள்ளோம்.

அதிக பாதுகாப்பு... விலையும் கம்மி... ட்யூவல் சேனல் ஏபிஎஸ் வசதி கொண்ட பைக்குகள்... இதோ பட்டியல்...

கார்களைக் காட்டிலும் இருசக்கர வாகனங்களில் பயணிக்கும்போதே அதிக பாதுகாப்பு தேவைப்படுகின்றது. இதனால்தான் மோட்டார் வாகன சட்டத்தில் கொண்டுவரப்படும் பெரும்பாலான சீர்திருத்தங்கள் இருசக்கர வாகனங்களை மையமாகக் கொண்டதாகவே இருக்கின்றன. அந்தவகையில், ரைடர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் புதிதாக நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டதுதான் சிபிஎஸ் மற்றும் ஏபிஎஸ் எனும் புதிய பாதுகாப்பு விதி.

அதிக பாதுகாப்பு... விலையும் கம்மி... ட்யூவல் சேனல் ஏபிஎஸ் வசதி கொண்ட பைக்குகள்... இதோ பட்டியல்...

இவை இரண்டுமே நவீன பிரேக்கிங் அம்சமாகும். இந்த புதிய விதி பைக்குகளுக்கு மட்டுமின்றி கார்களுக்கும் பொருந்தும் என்பது குறிப்பிடத்தகுந்தது. அதாவது, 125 கிலோமீட்டருக்கும் குறைந்த வேகத்தில் பயணிக்கும் வாகனங்களில் சிபிஎஸ் பிரேக்கிங் அம்சமும், 125 கிலோமீட்டருக்கும் அதிகமான திறனைக் கொண்ட வாகனங்களில் ஏபிஎஸ் பிரேக்கிங் வசதியும் கட்டாயம் என அறிவிக்கப்பட்டது.

அதிக பாதுகாப்பு... விலையும் கம்மி... ட்யூவல் சேனல் ஏபிஎஸ் வசதி கொண்ட பைக்குகள்... இதோ பட்டியல்...

ஆகையால், வாகன உற்பத்தி நிறுவனங்கள் இந்த அம்சத்தை அதன் தயாரிப்புகளில் அறிமுகப்படுத்தி வருகின்றன. அந்தவகையில், ட்யூவல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் வசதியுடன் விற்பனைக்குக் கிடைக்கும் விலைக் குறைந்த பைக்குகளைதான் இந்த பதிவில் நாம் பார்க்கிவிருக்கின்றோம்.

அதிக பாதுகாப்பு... விலையும் கம்மி... ட்யூவல் சேனல் ஏபிஎஸ் வசதி கொண்ட பைக்குகள்... இதோ பட்டியல்...

5. சுசுகி ஜிக்ஸெர் 250

விலை ரூ. 1.91 லட்சம்

இந்த பட்டியலில் நாம் பார்க்கிவிருக்கும் விலையுயர்ந்த பைக்காக சுசுகி ஜிக்ஸெர் உள்ளது. இந்த பைக் இந்தியாவில் 150 சிசி முதல் 250 சிசி வரையிலான திறனில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. ஆனால், இதன் 250 சிசி மாடலில் மட்டுமே ட்யூவல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் வசதி வழங்கப்பட்டு வருகின்றது. பிற வாகனங்களில் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் மட்டுமே வழங்கப்படுகின்றது.

அதிக பாதுகாப்பு... விலையும் கம்மி... ட்யூவல் சேனல் ஏபிஎஸ் வசதி கொண்ட பைக்குகள்... இதோ பட்டியல்...

சுசுகி ஜிக்ஸெர் 250 ஓர் முற்றிலும் கவர்ச்சியான பைக்காகும். இது இந்திய சந்தையில் ரூ. 2 லட்சத்திற்கும் குறைவான விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இந்த பைக்கில் ஜிக்ஸெர் எஸ்எஃப் எனும் பெயரில் மிகவும் அழகான வெர்ஷனிலும் விற்பனைச் செய்யப்பட்டு வருகின்றது.

அதிக பாதுகாப்பு... விலையும் கம்மி... ட்யூவல் சேனல் ஏபிஎஸ் வசதி கொண்ட பைக்குகள்... இதோ பட்டியல்...

இந்த பைக்குகளில் 248.8 சிசி திறன் கொண்ட ஆயில் கூல்டு எஞ்ஜின் பொருத்தப்பட்டிருக்கின்றது. இது அதிகபட்சமாக 26.8 பிஎஸ் பவரையும், 23.5 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். இந்த எஞ்ஜின் 6 ஸ்பீடு கியர்பாக்ஸில் இயங்கும். இது ஸ்போர்ட்ஸ் பைக்குகளுக்கு இணையான திறனை வெளிப்படுத்த உதவும்.

அதிக பாதுகாப்பு... விலையும் கம்மி... ட்யூவல் சேனல் ஏபிஎஸ் வசதி கொண்ட பைக்குகள்... இதோ பட்டியல்...

4. பஜாஜ் டோமினார் 250

விலை: ரூ. 1.84 லட்சம்

செலவு செய்யப்படும் பணத்திற்கான மதிப்பு என எதிர்பார்க்கும்போது, பாஜாஜ் டோமினார் 250 பைக்கே சிறந்த மோட்டார்சைக்கிளாக இருக்கின்றது. எனவேதான் 200 சிசி பைக்குகளின் வரிசையில் அதிகம் விற்பனையாகும் பைக்காக இது உள்ளது. இந்த பைக்கின் அம்சங்கள் மற்றும் டிசைன் உள்ளிட்டவை டோமினார் 400 மாடலை ஒத்தவாறு இருக்கின்றது. ஆனால், இதில் கேடிஎம் ட்யூக் 250ல் காணப்படும் எஞ்ஜின் பயன்படுத்தப்படுகின்றது.

அதிக பாதுகாப்பு... விலையும் கம்மி... ட்யூவல் சேனல் ஏபிஎஸ் வசதி கொண்ட பைக்குகள்... இதோ பட்டியல்...

அதேசமயம், இதன் திறன் வெளிப்பாடு கேடிஎம் ட்யூக்கைக் காட்டிலும் குறைந்ததாக இருக்கின்றது. ஆனால், எரிபொருள் சிக்கனத்தில் இதுதான் பெஸ்ட்.

இந்த பைக்கில் 199.5 சிசி திறனிலான எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 26.8 பிஎஸ் பவரையும், 25.3 என்எம் டார்க்கை வெளிப்படுத்தும். இது கேடிஎம் ட்யூக்கைக் காட்டிலும் 3 பிஎஸ் மற்றும் 0.5 என்எம் குறைவாகும். இந்த எஞ்ஜின் 6 ஸ்பீடு கியர்பாக்ஸில் இயங்கும்.

அதிக பாதுகாப்பு... விலையும் கம்மி... ட்யூவல் சேனல் ஏபிஎஸ் வசதி கொண்ட பைக்குகள்... இதோ பட்டியல்...

3. யமஹா ஒய்இசட்எஃப் ஆர்15 வி3.0

விலை: ரூ. 1.68 லட்சம்

யமஹா நிறுவனத்தின் ஆர்15 மாடல் உலகெங்கிலும் உள்ள இளைஞர்களின் விருப்பமான தேர்வாக உள்ளது. இந்தியாவிலும் இந்த பைக்கிற்கான ரசிகர்கள் ஏராளம். எனவேதான் இந்த வரிசையில் பல்வேறு தேர்வுகளை யமஹா வழங்கி வருகின்றது. அந்தவகையில் ட்யூவல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் வசதியுடன் விலை குறைந்த மடாலாக விற்பனைக்குக் கிடைக்கும் ஓர் பைக்காக ஒய்இசட்எஃப் ஆர்15 வி3.0 உள்ளது.

அதிக பாதுகாப்பு... விலையும் கம்மி... ட்யூவல் சேனல் ஏபிஎஸ் வசதி கொண்ட பைக்குகள்... இதோ பட்டியல்...

இந்த பைக்கில் 155 சிசி திறன் கொண்ட லிக்யூடு கூல்டு மோட்டார் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இது, அதிகபட்சமாக 18.5 பிஎஸ் பவரையும், 14.1 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். இந்த பைக்கில் ஸ்லிப் மற்றும் அசிஸ்ட் கிளட்ச் சிஸ்டமும் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. இந்த அம்சங்களை இது பெற்றிருப்பதால் 150 சிசி வரிசையில் இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் பைக்கிலேயே மிகவும் காஸ்ட்லியான பைக்காக இது உள்ளது.

அதிக பாதுகாப்பு... விலையும் கம்மி... ட்யூவல் சேனல் ஏபிஎஸ் வசதி கொண்ட பைக்குகள்... இதோ பட்டியல்...

4. பஜாஜ் பல்சர் என்எஸ் 200

விலை: ரூ. 1.51 லட்சம்

பஜாஜ் பல்சர் என்எஸ் ஓர் பல்சரின் அடுத்த தலைமுறை மாடல் ஆகும். இது மோட்டார்சைக்கிள் பிரியர்களின் மிகவும் பிடித்தமான பைக்காக இருக்கின்றது. இதன் ஸ்டைல் மற்றும் திறன் வெளிப்பாடு வாவ் என்று கூறுகின்ற வகையிலேயே இருக்கின்றது. இந்த பைக்கில் காணப்படும் எஞ்ஜின் கேடிஎம் ட்யூக் 200 பைக்கிற்கு இணையானதாக உள்ளது. எனவே, இந்தியாவின் மிகச் சிறந்த பெர்ஃபார்மென்ஸ் பைக்காக இது காட்சியளித்து வருகின்றது.

அதிக பாதுகாப்பு... விலையும் கம்மி... ட்யூவல் சேனல் ஏபிஎஸ் வசதி கொண்ட பைக்குகள்... இதோ பட்டியல்...

என்எஸ் 200 பைக்கில் 199.5 சிசி திறன் கொண்ட லிக்யூடு கூல்டு எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இது அதிகபட்சமாக 24.1 பிஎஸ் பவரையும், 18.5 என்எம் டார்க்கை வெளிப்படுத்தும். இது 6 ஸ்பீடு கியர்பாக்ஸில் இயங்குகின்றது. ஆறாம் கியரில் பைக் செல்லும்போது கூடுதல் க்ரூஸ் திறனை இது வெளிப்படுத்தும்.

அதிக பாதுகாப்பு... விலையும் கம்மி... ட்யூவல் சேனல் ஏபிஎஸ் வசதி கொண்ட பைக்குகள்... இதோ பட்டியல்...

1. டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி

விலை: ரூ. 1.49 லட்சம்

ட்யூவல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் வசதியுடன் விலை குறைவாக பைக்காக டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி உள்ளது. 4வி என்பது இந்த பைக்கின் எஞ்ஜினில் இருக்கும் நான்கு வால்வு திறனைக் குறிக்கின்றது. இதுமட்டுமின்றி டிஓஎச்சி ஆர்கிடெக்சர் அம்சம் இதன் எஞ்ஜினுக்கு வழங்கப்பட்டிருக்கின்றது.

5 ஸ்பீடு கியர்பாக்ஸில் இயங்கும் இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 20.8 பிஎஸ் பவரையும், 16.8 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். இது ஓர் 197.75 சிசி திறனுடைய எஞ்ஜின் ஆகும்.

அதிக பாதுகாப்பு... விலையும் கம்மி... ட்யூவல் சேனல் ஏபிஎஸ் வசதி கொண்ட பைக்குகள்... இதோ பட்டியல்...

மேலே பார்த்த அனைத்தும் பைக்குகளிலும் இரு சேனல் ஏபிஸ் பிரேக்கிங் அம்சம் வழங்கப்பட்டிருக்கின்றது. அப்படியானால், இவற்றில் பாதுகாப்பு சற்று அதிகம் என்று அர்த்தம். இந்த பிரேக்கிங் அம்சம் வழுவழுப்பான பாதையில்கூட சீரான பிரேக்கை பைக்குகளுக்கு வழங்க உதவும். எனவே, மழை மற்றும் அவசர காலங்களில் எந்தவொரு சிக்கலுமின்றி பிரேக்கை செயல்படுத்தி பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ள முடியும்.

Most Read Articles
English summary
Most Affordable Dual-Channel ABS Bikes In India. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X