அட என்னப்பா இப்படி இறங்கி வந்துட்டீங்க! மலிவு விலை பைக்கை களமிறக்கும் ஹார்லி.. எப்போது தெரியுமா..?

ஹார்லி டேவிட்சன் நிறுவனம் மிக விரைவில் இந்தியாவிற்கான மலிவு விலை பைக்கை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அட என்னப்பா இப்படி இறங்கி வந்துட்டீங்க..! மலிவு விலை பைக்கை களமிறக்கும் ஹார்லி டேவிட்சன்... எப்போது தெரியுமா..?

உலகப் புகழ்பெற்ற இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான ஹார்லி டேவிட்சன், அதன் மலிவு விலை பைக்கை மிக விரைவில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த தகவலை பென்னட்ஸ் என்ற ஆங்கில தளம் செய்தியாக வெளியிட்டுள்ளது.

அட என்னப்பா இப்படி இறங்கி வந்துட்டீங்க..! மலிவு விலை பைக்கை களமிறக்கும் ஹார்லி டேவிட்சன்... எப்போது தெரியுமா..?

அது வெளியிட்ட செய்தியின்படி, ஹார்லி டேவிட்டன் மற்றுமொரு புகழ்வாய்ந்த இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான பெனல்லியுடன் இணைந்து இந்த மலிவு விலை பைக்கை தயாரிக்க இருப்பது தெரியவந்துள்ளது. மேலும், அந்த மலிவு விலை பைக் வருகின்ற ஜூன் மாதம் அறிமுகம் செய்யப்பட இருப்பதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்த புகைப்படம் ஒன்று தற்போது வைரலாகி வருகின்றது. ஆனால், இந்த புகைப்படம் வெளிவந்து பல நாட்கள் ஆகிவிட்டதாக கூறப்படுகின்றது.

அட என்னப்பா இப்படி இறங்கி வந்துட்டீங்க..! மலிவு விலை பைக்கை களமிறக்கும் ஹார்லி டேவிட்சன்... எப்போது தெரியுமா..?

தற்போது கசிந்திருக்கும் இப்படம், பெனல்லி அண்மையில் நிகழ்த்திய நிகழ்ச்சியின் வெளியிடப்பட்டதாகும். அந்த புகைப்படத்தின்படி, ஹார்லி டேவிட்சன் புதிய 338 சிசி ஸ்ட்ரீட் பைக் இந்த ஆண்டு ஜூன் மாதம் சீனாவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக உறுதியாகியுள்ளது.

இந்த பைக் பெனல்லிக்கு சொந்தமான கியான்ஜியாங் நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கப்பட்டு வருகின்றது.

அட என்னப்பா இப்படி இறங்கி வந்துட்டீங்க..! மலிவு விலை பைக்கை களமிறக்கும் ஹார்லி டேவிட்சன்... எப்போது தெரியுமா..?

ஹார்லி டேவிட்சனின் இந்த பைக் பெனல்லியின் 302எஸ் பைக்கின் பாகங்களைக் கொண்டு கட்டமைக்கப்பட இருப்பதும் தெரியவந்துள்ளது.

ஆகையால், இந்த புதிய மலிவு விலை ஹார்லி டேவிட்சன் பைக், பெனல்லி 302 எஸ் பைக்கின் எஞ்ஜின் மற்றும் ஃபிரேமைக் கொண்டு காட்சியளிக்க உள்ளது.

அட என்னப்பா இப்படி இறங்கி வந்துட்டீங்க..! மலிவு விலை பைக்கை களமிறக்கும் ஹார்லி டேவிட்சன்... எப்போது தெரியுமா..?

இந்த பைக் சீனா மற்றும் இந்திய சந்தைக்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்டு வருகின்றது. எனவே, சீனாவில் அறிமுகம் செய்யப்பட்ட சில நாட்களிலேயே இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகமகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதற்காக அனைத்து பாகங்களும் சீனாவில் இருந்து இறக்குமதி செய்து பின்னர் இந்தியாவில் வைத்து அசெம்பிள் செய்யப்பட்டு விற்பனைக்குக் கொண்டு வரப்பட உள்ளது.

அட என்னப்பா இப்படி இறங்கி வந்துட்டீங்க..! மலிவு விலை பைக்கை களமிறக்கும் ஹார்லி டேவிட்சன்... எப்போது தெரியுமா..?

இதற்கான பணி குர்கானில் உள்ள உற்பத்தி ஆலையில் மேற்கொள்ளப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுபோன்ற நடவடிக்கையால் ஹார்லி டேவிட்சின் இந்த பைக் மற்ற ஹார்லி பைக்குகளைக் காட்டிலும் குறைவான விலையில் விற்பனைக்கு வரலாம் என நம்பப்படுகின்றது.

தற்போது ஹார்லி டேவிட்சனின் ஸ்ட்ரீட் 750 பைக்கே அதிகம் விற்பனையாகும் பைக்குகளில் ஒன்றாக காட்சியளிக்கின்றது.

அட என்னப்பா இப்படி இறங்கி வந்துட்டீங்க..! மலிவு விலை பைக்கை களமிறக்கும் ஹார்லி டேவிட்சன்... எப்போது தெரியுமா..?

ஆனால், இதனை விரைவில் அறிமுகமாக இருக்கும் மலிவு விலை பைக் முறியடித்துவிடும் என கூறப்டுகின்றது. ஆனால், இது 338 சிசி திறன் கொண்ட பைக் என்பதை நாம் கருத்தில் கொண்ட வேண்டும்.

அதேசமயம், இந்த பைக் இந்தியாவில் ஹார்லிக்கான சந்தையை விரிவாக்கம் செய்யும் என்று கூறப்படுகின்றது.

அட என்னப்பா இப்படி இறங்கி வந்துட்டீங்க..! மலிவு விலை பைக்கை களமிறக்கும் ஹார்லி டேவிட்சன்... எப்போது தெரியுமா..?

ஹார்லி டேவிட்சன் இந்தியாவில் விற்பனை செய்யும் விலை குறைவான மாடல்களில் ஸ்ட்ரீட் 750 முதன்மை வகிக்கின்றது. இதன்காரணமாகவே, இது இந்தியாவில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. ஆனால், 338 சிசி பைக்கின் அறிமுகம் ஸ்ட்ரீட் 750 பைக்கின் விற்பனையைக் கணிசமாக பாதிக்கலாம் என கூறப்படுகின்றது.

அட என்னப்பா இப்படி இறங்கி வந்துட்டீங்க..! மலிவு விலை பைக்கை களமிறக்கும் ஹார்லி டேவிட்சன்... எப்போது தெரியுமா..?

இந்த பைக்கில் 749சிசி லிக்யூடு கூல்டு எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 60 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும். இதில், 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. மேலும், இதன் எஞ்ஜின் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையாக மேம்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த தரத்தில் ஹார்லி அறிமுகம் செய்த முதல் பைக் இதுவேவாகும்.

அட என்னப்பா இப்படி இறங்கி வந்துட்டீங்க..! மலிவு விலை பைக்கை களமிறக்கும் ஹார்லி டேவிட்சன்... எப்போது தெரியுமா..?

இந்த ஸ்ட்ரீட் 750 பைக் இந்தியாவில் ரூ.5.22 லட்சம் என்ற விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது, எக்ஸ்ஷோரூம் விலையாகும். விரைவில் அறிமுகமாக காத்திருக்கும் புதிய பைக் இதைக் காட்டிலும் குறைவான விலையில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறிப்பு புகைப்படங்கள் உதாரணத்திற்காக வழங்கப்பட்டவை...

Most Read Articles
English summary
Most Affordable Harley-Davidson Will Be Launched In India Soon. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X