ஊரடங்கு உத்தரவின்போது மகளுடன் டூ-வீலரில் ஜாலி ரைடு சென்ற பிரபல கிரிக்கெட் வீரர்.. வைரல் வீடியோ!!!
ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும்நிலையில் தல தோனி, அவருடைய மகளுடன் டூ வீலரில் ஜாலி ரைடு செய்வதைப் போன்ற வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், புகழ்வாய்ந்த விளையாட்டு வீரருமான எம்எஸ் தோனி, கிரிக்கெட்டின்மீது மட்டுமின்றி வாகனங்கள் மீதும் அதீத ஆர்வம் கொண்டவராக இருக்கின்றார். இதற்கு அவரிடம் இருக்கும் வாகனங்களின் கலெக்சனே சிறந்த சான்று.

தமிழகர்களால் செல்லமாக தல என்று அழைக்கப்படும் இவரிடத்தில் ஏராளாமன விலையுயர்ந்த சொகுசு கார்கள் மற்றும் பைக்குகள் அணிவகுத்து உள்ளன.
அதில், சில பழமை வாய்ந்த மாடல்களும் அடங்கும். அந்தவகையிலான ஓர் பைக்கில்தான் எம்எஸ் தோனியும், அவரது செல்ல மகள் ஷீவாவும் (ziva) ஜாலி ரைடு சென்றுள்ளனர்.

இந்த சம்பவம், தோனியின் ரசிகர்கள் மத்தியில் பரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பதற்றத்தின் காரணமாக தேசிய ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கின்றது.
இந்நிலையில், ஆபத்தை உணராமல் மகளுடன் தோனி ஜாலி ரைடு செய்திருப்பதாக சிலர் தெரிவித்து வருகின்றனர். ஆனால், இது உண்மை இல்லை.

தல தோனி லாவிஸ் பண்ணை வீட்டில்தான் இவ்வாரு ஜாலி ரைடு செய்துள்ளார். இந்த பண்ணை வீடு மிகப்பெரியது. உட்பகுதியில் ஜாலியாக ரைடு செய்யும் அளவிற்கு பரப்பளவைக் கொண்டது எனது கூறப்படுகின்றது. இங்குதான் தோனி, அவரின் செல்ல மகளுடன் யமஹா ஆர்டி350 பைக்கில் ரைடு சென்றுள்ளார்.
MOST READ: "விலை உயர்வா? வாய்ப்பே இல்ல!" யாரும் எதிர்பார்க்காத அதிரடி அறிவிப்பை வெளியிட்ட பிரபல பைக் நிறுவனம்!தல தோனி லாவிஸ் பண்ணை வீட்டில்தான் இவ்வாரு ஜாலி ரைடு செய்துள்ளார். இந்த பண்ணை வீடு மிகப்பெரியது. உட்பகுதியில் ஜாலியாக ரைடு செய்யும் அளவிற்கு பரப்பளவைக் கொண்டது எனது கூறப்படுகின்றது. இங்குதான் தோனி, அவரின் செல்ல மகளுடன் யமஹா ஆர்டி350 பைக்கில் ரைடு சென்றுள்ளார்.

இந்த ஜாலி ரைடில் அவரது மகள் பின்னால் அமர்ந்து எஞ்ஜாய் செய்திருக்கின்றார். இந்த வீடியோவை தோனியின் மனைவி ஷாக்ஸி அவரது சமூக வலைதள பக்கம் வாயிலாக வெளியிட்டுள்ளார்.
இதுபோன்று, இருவரும் வீடியோவில் காட்சியாவது முதல் முறை அல்ல. இதற்கு முன்னதாக பழமை வாய்ந்த ஜூங்கா காரை இருவரும் சேர்ந்து சுத்தம் செய்வது போன்ற வீடியோ வெளியாகியிருந்தது குறிப்பிடத்தகுந்தது.

இந்நிலையிலேயே இருவரும் பண்ணை வீட்டில் ஜாலி ரைடு செய்வதைப் போன்ற வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. இந்த வீடியோவை வெளியிட்ட தோனியின் மனைவி, "இரு குழந்தைகள் விளையாடிக் கொண்டிருக்கின்றன. ஒன்று பெரியக் குழந்தை, மற்றொன்று சிறிய குழந்தை" என குறிப்பிட்டுள்ளார்.

தோனியிடத்தில் இருக்கும் மிகவும் பழைமையான பைக்குகளில் யமஹா ஆர்டி350 முதன்மை மாடல் ஆகும். இத்துடன் அவரிடத்தில் டுகாட்டி 1098, கவாஸாகி நிஞ்சா இசட்எக்ஸ்-14 ஆர் உள்ளிட்ட ஆடம்பர பைக்குகளும் ஏராளமாக இருக்கின்றன.
இதுமட்டுமின்றி மிகவும் பவர்ஃபுல் மாடல் என்று கருதப்படும் நிஞ்சா எச்2 பைக்கும் அவரிடத்தில் இருக்கின்றது. இந்தியாவிலேயே இந்த பைக் இவரிடத்தில் மட்டுமே இருப்பது குறிப்பிடத்தகுந்தது. இதனை கடந்த 2015ம் ஆண்டு முதல் நபராக தோனி வாங்கியிருந்தார்.

இத்தனை பைக்குள் இருந்தும் யமஹா ஆர்டி350 பைக்கை தோனி இயக்கியுள்ளார். இந்த பைக்கின் மீதுள்ள அளவுகடந்த பிரியமே இதற்கு காரணம் என்று கூறப்படுகின்றது.
கொரோனா வைரஸ் காரணமாக உலகமே இயக்கமற்ற நிலையில் உள்ளது. இதே நிலைதான் இந்தியாவிலும் தற்போது நிலவி வருகின்றது. இதனால் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் மக்கள், முன்பு எப்போதும் இல்லாத வகையில் நேரத்தை குடும்பத்தினருடன் செலவழித்து வருகின்றனர்.
இந்த நிலையிலேயே தல தோனி அவரது மகள் ஷீவாவுடன் ஜாலியாக ரைடு செய்து மகிழ்ந்துள்ளார். இதுமட்டுமின்றி முன்பு விளையாட்டு, அலுவலகம் என எப்போதும் பிசியாகவே இருந்த அவர், அனைத்தையும் ஓரங்கட்டிவிட்டு குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டு வருகின்றார்.
2019ம் ஆண்டு உலக கோப்பையில் இருந்து இந்தியா வெளியேறியதை அடுத்து தோனி சர்வதேச போட்டிகளில் பங்கேற்பதை நிறுத்தியிருக்கின்றார்.

அதேசேயம், மார்ச் மாதம் 29ம் தேதி ஆரம்பிக்கிவிருந்த 13வது ஐபிஎல் போட்டிகளில் அவர் பங்கேற்ப இருந்ததாகக் கூறப்படுகின்றது. ஆனால், இதற்கு கொரோனா வைரஸ் ஆப்பு வைத்துள்ளது. கிரிக்கெட் மட்டுமின்றி ஒலிம்பிக் போன்ற அனைத்து விளையாட்டுகளுக்கும் கொரோனா வைரஸ் முட்டுக் கட்டைப் போட்டிருப்பது குறிப்பிடத்தகுந்தது.


Click it and Unblock the Notifications








