என்ன ஆனாலும் இது குப்புற சாயாது! சென்னை காவல்துறை அடுத்து மும்பை போலீஸில் இணைந்த நவீன மின்சார வாகனம்

மும்பை காவல்துறையில் செல்ஃப் பேலன்ஸ் திறன் கொண்ட மின்சார வாகனங்கள் இணைக்கப்பட்டுள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவலை தொடர்ச்சியாக காணலாம்.

என்ன ஆனாலும் இது குப்புற சாயாது! சென்னை காவல்துறை அடுத்து மும்பை போலீஸில் இணைந்த நவீன மின்சார வாகனம்...

மின்சார வாகனங்களுக்கான தேவை பொதுமக்கள் மத்தியில் மட்டுமின்றி அரசின் சில முக்கியத் துறைக்களிலும் அதிகரித்து காணப்படுகின்றது.

அதிலும், பொதுமக்களிடம் நெருங்கிய தொடர்புடை காவல் மற்றும் பொதுப்போக்குவரத்துறையில் இதன் தேவை சற்று கூடுதலாகவே உள்ளது.

என்ன ஆனாலும் இது குப்புற சாயாது! சென்னை காவல்துறை அடுத்து மும்பை போலீஸில் இணைந்த நவீன மின்சார வாகனம்...

எனவேதான், நாட்டில் உள்ள பல்வேறு மாநில அரசுகள் அதன் பொதுப்போக்குவரத்து வாகனங்களை மின்வாகனங்களுக்கு அப்கிரேட் செய்து வருகின்றது. அதாவது, பொதுமக்கள் பயன்படுத்தும் பொது பேருந்துகள் முதல் அரசு அதிகாரிகளின் அதிகாரப்பூர்வ வாகனங்களை மின்சார தரத்திற்கு உயர்த்தி வருகின்றது.

என்ன ஆனாலும் இது குப்புற சாயாது! சென்னை காவல்துறை அடுத்து மும்பை போலீஸில் இணைந்த நவீன மின்சார வாகனம்...

இந்நிலையில்தான், மும்பை நகர காவல்துறை ரோந்து பணிக்காக தனித்துவமான மின் வாகனங்களை வாங்கியிருக்கின்றது. இது ஓர் இரு சக்கர வாகனங்களால் இயங்கும் செக்வே ரக வாகனங்கள் ஆகும். மின்சார திறனில் இயங்கும் இந்த வாகனங்கள் அதி நவீன தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டவை ஆகும்.

என்ன ஆனாலும் இது குப்புற சாயாது! சென்னை காவல்துறை அடுத்து மும்பை போலீஸில் இணைந்த நவீன மின்சார வாகனம்...

இதனை உறுதிச் செய்கின்ற வகையில், எந்தவொரு சூழ்நிலையிலும் குப்புற சாயாத திறன் அந்த வாகனத்தில் காட்சியளிக்கின்றது. இந்த வாகனத்தைதான் மும்பை நகர காவல்துறை அதன் காவல்துறையின் பயன்பாட்டிற்கு கொண்டுவந்துள்ளது. இதனை அம்மாநிலத்தின் உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் நேற்று காவலர்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

என்ன ஆனாலும் இது குப்புற சாயாது! சென்னை காவல்துறை அடுத்து மும்பை போலீஸில் இணைந்த நவீன மின்சார வாகனம்...

செக்வே மின்சார வாகனம் ஸ்கூட்டர் டைப்பிலானதாகும். இதனை மும்பையின் கடற்கரைப் பகுதி போலீஸார் பயன்படுத்த இருக்கின்றனர். குறிப்பாக, கடற்கரை ஓரத்தில் ரோந்து பணியில் ஈடுபட இந்த வாகனங்கள் அவர்கள் பயன்படுத்த இருக்கின்றனர். இந்த பணிக்காக தற்போது 50 செக்வே வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளன. அவையனைத்தும் அந்நகரத்தின் பாதுகாப்பு பணியல் ஈடுபடுத்தப்பட உள்ளன.

முக்கியமாக உலகையே அச்சுறுத்தி கொரோனா வைரசிடம் இருந்து மாக்களைக் காக்கும் பணியில் அதிகளவில் இது ஈடுபடுத்தப்பட உள்ளது.

என்ன ஆனாலும் இது குப்புற சாயாது! சென்னை காவல்துறை அடுத்து மும்பை போலீஸில் இணைந்த நவீன மின்சார வாகனம்...

மேலும், போலீஸார்களின் பைக்குகளால் ஏற்படும் பெட்ரோல் செலவைக் கணிசமாக குறைக்கும் நோக்கில் இந்த வாகனங்கள் களமிறக்கப்பட்டுள்ளன. இவை குறைந்த பராமரிப்பில் அதிக பயன்பாட்டை வழங்கக்கூடியவை ஆகும்.

என்ன ஆனாலும் இது குப்புற சாயாது! சென்னை காவல்துறை அடுத்து மும்பை போலீஸில் இணைந்த நவீன மின்சார வாகனம்...

இதேபோன்ற செக்வே வாகனங்களைதான் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னைப் போலீஸாரின் பயன்பாட்டிற்கும் வழங்கப்பட்டது. அவற்றின் தற்போதைய நிலை கேள்விக்குறியாக உள்ளது. அதேசமயம், இந்த வாகனங்கள் பரிசோதனை ஓட்டத்தின் அடிப்படையிலேயே மிகவும் குறைந்த எண்ணிக்கையில் வாங்கப்பட்டிருந்தன.

என்ன ஆனாலும் இது குப்புற சாயாது! சென்னை காவல்துறை அடுத்து மும்பை போலீஸில் இணைந்த நவீன மின்சார வாகனம்...

இந்த நிலையில்தான் மும்பை நகராட்சி உலக அளவில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு காவல்துறையை முன்னேற்றும் விதமாக செக்வே மின்சார ஸ்கூட்டர்களை களமிறக்கியிருக்கின்றது.

இதுபோன்று அரசு துறையில் மின் வாகனங்களைக் களமிறக்குவதன்மூலம் தேவையில்லாத செலவை குறைப்பதுடன், சுற்றுப்புறச் சூழலுக்கும் தீங்கின்றி பொது சேவையில் ஈடுபடு முடியும்.

என்ன ஆனாலும் இது குப்புற சாயாது! சென்னை காவல்துறை அடுத்து மும்பை போலீஸில் இணைந்த நவீன மின்சார வாகனம்...

இதுமட்டுமின்றி, பொதுமக்களுக்கும் ஓர் முன்னுதாரணமாக அமைய இதுபோன்ற செயல்கள் வழிவகுக்கும். தற்போதுவரை இந்திய மக்கள் மத்தியில் மின்சார வாகனங்கள் பெரியளவில் வரவேற்பைப் பெறாமல் இருப்பதற்கு, அதன்மீதான நம்பிக்கை இல்லாததே முக்கிய காரணமாக உள்ளது. எனவே, பொதுத்துறையில் மின் வாகனங்களை களமிறக்குவதன்மூலம் மக்கள் மத்தியில் அதன் மீதான நம்பிக்கையை விதைக்க முடியும்.

என்ன ஆனாலும் இது குப்புற சாயாது! சென்னை காவல்துறை அடுத்து மும்பை போலீஸில் இணைந்த நவீன மின்சார வாகனம்...

அதேசமயம், மின் வாகனங்களை புறக்கணிக்க அதன்மீது நம்பிக்கை இல்லாதது மட்டுமே காரணமல்ல. போதிய கட்டமைப்பு இல்லாததும் ஓர் காரணமாகும். ஆம், இந்தியாவில் மின்சார வாகனங்களை சார்ஜ் செய்வதற்கான மின் நிலையங்கள் மிக மிக குறைந்தளவில் இருக்கின்றது. இந்த கட்டமைப்பு வசதி குறைபாட்டின் காரணத்தினாலயே மக்கள் பலர் மின் வாகனங்களைத் தவிர்க்கின்றனர்.

என்ன ஆனாலும் இது குப்புற சாயாது! சென்னை காவல்துறை அடுத்து மும்பை போலீஸில் இணைந்த நவீன மின்சார வாகனம்...

ஆனால், இந்த நிலை விரைவில் மாறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மின் வாகனங்களின் விற்பனையை ஊக்குவித்து வரும் அரசு, அதற்கான கட்டமைப்புகளை அதிகப்படுத்தும் முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றது. இதைத்தொடர்ந்து, சில தனியார் நிறுவனங்களும் அதன் மின்சார தயாரிப்புகளை விற்பனைச் செய்வதற்காக அடிப்படை வசதிகளை உருவாக்கும் பணயில் களமிறங்கியிருக்கின்றன. எனவே, எதிர்கால இந்திய சாலைகளை மின்சார வாகனமே ஆளும் என்பது உறுதியாகியுள்ளது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Mumbai Police Receive Personal Segway At Marine Drive To Monitor Social Distancing Details. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X