கோபத்தில் இளம்பெண் செய்த காரியம்... அரண்டுபோன போலீஸ்... இணையத்தில் வைரலாகும் வீடியோ..!

கோபத்தில் இளம்பெண் செய்த காரியம் வீடியோவாக இணையத்தில் வைரலாகி வருகின்றது. இதுகுறித்த தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

கோபத்தில் இளம்பெண் செய்த காரியம்... அரண்டுபோன போலீஸ்... இணையத்தில் வைரலாகும் வீடியோ..!

இணையத்தில் இளம்பெண் ஒருவர் போலீஸ்காரரை சரமாரியாகத் தாக்குவதைப் போன்ற வீடியோக் காட்சிகள் வைரலாகி வருகின்றது. தன்னைவிட வயதில் பல வருடங்கள் பெரியவர் என்றும்கூட பாராமல் இளம்பெண் அந்த போலீஸ்காரரின் கண்ணத்தில் அறைவது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோபத்தில் இளம்பெண் செய்த காரியம்... அரண்டுபோன போலீஸ்... இணையத்தில் வைரலாகும் வீடியோ..!

தன்னைப் போலீஸ்காரர் கடுமையாக துஷ்பிரயோகம் செய்ததன் காரணத்தினாலயே இவ்வாறான காரியத்தைச் செய்ததாக அந்த இளம்பெண் போலீஸாரிடத்தில் கூறியுள்ளார். இருப்பினும், சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் இளம்பெண் மீது மட்டும் வழக்குப் பதிவு செய்து, கைதும் செய்திருக்கின்றனர். இத்துடன், இளம்பெண்ணுக்கு ஆதரவாக வாக்குவாதத்தில் ஈடுபட்ட இளைஞர் ஒருவரையும் போலீஸார் கைது செய்திருப்பதாக தகவல் தெரிவிக்கின்றன.

கோபத்தில் இளம்பெண் செய்த காரியம்... அரண்டுபோன போலீஸ்... இணையத்தில் வைரலாகும் வீடியோ..!

இந்த சம்பவம் மஹாராஷ்டிரா மாநிலம், மும்பையில் அரங்கேறியிருக்கின்றது. கடந்த 23ம் தேதி அன்று அரங்கேறிய இந்த சம்பவத்தின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகத் தொடங்கியுள்ளது. மேலும், இதன் மூலமே சம்பவம்குறித்த தகவலும் வெளியுலகிற்கு தெரியவந்துள்ளது. மும்பையின் மஸ்ஜித் பந்தர் பகுதியைச் சேர்ந்தவர் சாத்விகா திவாரி. வயது 30 என கூறப்படுகின்றது.

கோபத்தில் இளம்பெண் செய்த காரியம்... அரண்டுபோன போலீஸ்... இணையத்தில் வைரலாகும் வீடியோ..!

இவரே போலீஸாரால் தற்போது சிறையில் அடைக்கப்பட்ட இளம்பெண் ஆவார். இவர், கடந்த 23ம் தேதி அன்று இருசக்கர வாகனத்தில் பயணிக்கும்போது தலைக்கவசம் அணியவில்லை என கூறப்படுகின்றது. இதன்காரணமாகவே, மும்பைப் போக்குவரத்து காவலர் ஏக்நாத் பார்டே (இளம்பெண்ணால் தாக்குதலுக்கு ஆளான போலீஸ்), சாத்விகாவை மடக்கியுள்ளார். மேலும், அந்த நேரத்தில் முகக்கவசமும் அணியவில்லை என கூறப்படுகின்றது. ஆகையால், இதுகுறித்து இளம்பெண்ணிடம் ஏக்நாத் கேள்விகளை எழுப்பியுள்ளார்.

கோபத்தில் இளம்பெண் செய்த காரியம்... அரண்டுபோன போலீஸ்... இணையத்தில் வைரலாகும் வீடியோ..!

இதில், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டத் தொடங்கியிருக்கின்றது. அப்போது போலீஸார் சாத்விகாவை மிகவும் கடுமையான வார்த்தைகளால் திட்டி தீர்த்ததாகக் கூறப்படுகின்றது. இதனால், கடும் ஆத்திரமுற்ற சாத்விகா போலீஸ்காரர் என்றும் பாராமல் அவரைத் தாக்கத் தொடங்கியுள்ளார். இதனை அவ்வழியாக சென்ற பொதுமக்கள் தங்களின் செல்போனில் வீடியோ எடுக்கத் தொடங்கினர்.

கோபத்தில் இளம்பெண் செய்த காரியம்... அரண்டுபோன போலீஸ்... இணையத்தில் வைரலாகும் வீடியோ..!

மேலும், சம்பவம்குறித்து சிலர் போலீஸாருக்கும் தகவல் கொடுத்தனர். ஆனால், அவர்கள் வருவதற்குள்ளாக போக்குவரத்து போலீஸாரை நடுத் தெருவில் இழுத்து வந்து இளம்பெண் மிகக்கடுமையாக தாக்கினார். பொதுமக்கள் மற்றும் சக போக்குவரத்து காவலர்கள் சமாதானம் செய்தும் அவரின் ஆத்திரம் அடங்கவில்லை. பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த சட்ட ஒழுங்கு பெண் காவலரும் சாத்விகாவைக் குளிர்விக்கும் முயற்சியில் இறங்கினர்.

கோபத்தில் இளம்பெண் செய்த காரியம்... அரண்டுபோன போலீஸ்... இணையத்தில் வைரலாகும் வீடியோ..!

இருப்பினும் அடங்க மறுத்து அவர்களிடத்திலும் அவர் வாக்குவாதத்திலேயே ஈடுபட்டார். இதனால், அப்பகுதியில் சில நேரங்கள் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து, போக்குவரத்து காவலர் ஏக்நாத் மற்றும் இளம்பெண் சாத்விகா ஆகிய இருவரையும் போலீஸார் காவல்நிலையம் அழைத்துச் சென்றனர். அங்கு போக்குவரத்து காவலர் வழங்கிய புகாரின் பேரில் இளம்பெண் மீது மட்டும் பல்வேறு பிரிவுகளின்கீழ் போலீஸார் வழக்கு பதிந்திருக்கின்றனர்.

கோபத்தில் இளம்பெண் செய்த காரியம்... அரண்டுபோன போலீஸ்... இணையத்தில் வைரலாகும் வீடியோ..!

மேலும், போக்குவரத்துப் போலீஸார் மீது எந்தவொரு வழக்கும் பதிவு செய்யாமல் அவரை எல்.டி., மார்க் காவல்நிலைய அதிகாரிகள் விடுவிக்க முயற்சித்ததாகக் கூறப்படுகின்றது. இதனால், காவல்நிலையத்திலும் சாத்விகா வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கின்றார். இந்த நிலையில், இளம்பெண் சாத்விகா திவாரி மீது ஐபிசி பிரவுகள் 571/2020, 353, 332, 504, 506, 34 ஆகியவற்றின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

கோபத்தில் இளம்பெண் செய்த காரியம்... அரண்டுபோன போலீஸ்... இணையத்தில் வைரலாகும் வீடியோ..!

இது மிகக் கடுமையானக் குற்றப் பிரிவுகள் ஆகும். இந்த பிரிவுகளின்கீழ் பதிவுச் செய்யப்பட்டிருக்கும் குற்றங்கள் அனைத்தும் நிரூபிக்கப்பட்டால் இளம்பெண்ணிற்கு குறைந்தது ஒரு வருடமாவது சிறைத் தண்டனை வழங்கக் கூடும். இளம்பெண்ணிற்கு உதவியாக கைது செய்யப்பட்ட கான் என்ற இளைஞருக்கு என்ன மாதிரியான தண்டனை வழங்கப்பட்டுள்ளது என்ற தகவல் தெரியவில்லை.

கோபத்தில் இளம்பெண் செய்த காரியம்... அரண்டுபோன போலீஸ்... இணையத்தில் வைரலாகும் வீடியோ..!

இந்த சம்பவத்தில் போலீஸார் ஒரு தரப்பாக மட்டுமே செயல்பட்டிருப்பதாக புகார்கள் எழுந்த வண்ணம் இருக்கின்றது. இதேபோன்று, மிக சமீபத்தில் போலீஸாரிடத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகக் கூறி, பெண் ஜொமேட்டோ ஊழியரை மும்பைப் போலீஸார் கைது செய்து சிறையிலடைத்தனர். அவருக்கு ஒரு வருடம் சிறைத் தண்டனை வழங்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகின்றது.

கோபத்தில் இளம்பெண் செய்த காரியம்... அரண்டுபோன போலீஸ்... இணையத்தில் வைரலாகும் வீடியோ..!

இந்நிலையிலேயே மற்றுமொரு இளம்பெண்ணைப் போலீஸாரிடம் அத்துமீறியதாகக் கூறி மும்பைப் போலீஸார் கைது செய்திருக்கின்றனர். இரண்டு மாதங்களுக்கு உள்ளாகவே நடைபெற்றிருக்கும் இந்த தொடர் சம்பவங்களால் மும்பை வாசிகள் அதிர்ச்சியில் உறைந்திருக்கின்றனர்.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Mumbai Woman Slaps Traffic Police For Allegedly Abusing Her Video. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X