அசத்தலான வெள்ளை & நீல நிறத்தில் எம்வி அகுஸ்டா புருட்டேல் 1000 ஆர்ஆர் எம்எல் பைக்...
லிமிடேட்-எடிசன் மோட்டார்சைக்கிள்களை தயாரிப்பதில் பிரபலமான எம்வி அகுஸ்டா வெள்ளை மற்றும் நீல நிறத்தில் புருட்டேல் 1000 ஆர்ஆர் பைக் மாடலை விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளது. இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள இந்த பைக்கை பற்றிய தகவல்களை இந்த செய்தியில் இனி பார்ப்போம்.

புருட்டேல் 1000 ஆர்ஆர் பைக்கை பற்றிய தகவல்களை எம்வி நிறுவனம் தனது இணையத்தள பக்கத்தில் வெளியிடவில்லை. மாறாக இந்த பைக்கை பற்றிய தகவல்களை ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. பைக்கின் பெயரில் உள்ள எம்எல் எதை குறிக்கிறது என்பது தெரியவில்லை.

இந்த புதிய பைக், புருட்டேல் 910ஆர், புருட்டேல் 800 இத்தாலியா போன்ற வெள்ளை & நீலம் நிறங்களில் தயாரிக்கப்பட்ட புருட்டேல் அமெரிக்கா பைக்கின் வெவ்வேறு விதமான வெர்சன்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது.

இதில் புருட்டேல் 910ஆர் பைக்கானது இத்தாலி அணியினர் 2006ல் உலக கோப்பை கால்பந்து போட்டியில் சாம்பியன் பட்டம் பெற்றதற்காக தயாரிக்கப்பட்ட மாடலாகும். பைக்கின் ஃப்ரேம் மற்றும் ஸ்விங்கார்ம் ப்ளேட்கள் மேட் கோல்டு ஃபினிஷிங்கிலும், அலுமினியம் ரிம்கள் கருப்பு செருகலுடன் காட்சியளிக்கின்றன.

மற்றப்படி பெயிண்ட் அமைப்பு, மொத்த ஹெட்லேம்ப் செட்அப், பெரிய அளவிலான பெட்ரோல் டேங்க் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட எல்இடி லைட் உடன் உள்ள டின்னி டெயில்கள் போன்றவை தற்போதைய பைக்கில் இருந்து பெரிய அளவில் மாற்றம் அடையவில்லை.

இயக்க ஆற்றலை வழங்குவதற்கு வழக்கமான புருட்டேக் 1000 ஆர்ஆர் பைக்கில் 208 பிஎச்பி பவரை வெளிப்படுத்தக்கூடிய 998சிசி 4-சிலிண்டர் என்ஜின் தான் பொருத்தப்பட்டுள்ளது. இந்த என்ஜினை டுகாட்டி ஸ்ட்ரீட்ஃபைட்டர் வி4 பைக்கிலும் பார்க்க முடியும்.

புருட்டேல் 1000 ஆர்ஆர் பைக் மாடலை எம்வி அகுஸ்டா நிறுவனம் முதன்முதலாக கடந்த 2019ல் அறிமுகப்படுத்தியது. இதில் வழங்கப்பட்டுள்ள என்ஜின் அமைப்பு தான் இந்த புதிய எம்எல் பைக்கிலும் பொருத்தப்பட்டிருந்தாலும், இந்த புதிய வெர்சனில் புதியதாக வால்வு மற்றும் காம்ஷாஃப்ட்கள் வழங்கப்பட்டுள்ளன.

புருட்டேல் 1000 ஆர்ஆர் பைக் மாடல் அதிகப்பட்சமாக 300kph என்ற வேகத்தில் இயங்கக்கூடியது. இதன் ஸ்பெஷல் எடிசனிலும் அதே ஹோலின்ஸ் சஸ்பென்ஷன் மற்றும் ப்ரெம்போ ஸ்டைலிமா ப்ரேக்குகள் தான் பொருத்தப்பட்டுள்ளன.
சிறப்பான பெயிண்ட் அமைப்பு உடன் தயாரிப்புகளை வெளியிட்டு வருவதால் இத்தாலி நாட்டில் பிரபலமான மோட்டார்சைக்கிள் ப்ராண்டாக உள்ள எம்பி அகுஸ்டா இந்திய சந்தையில் எப்போது காலடி எடுத்து வைக்கும் என்பது கேள்வி குறியாகவே உள்ளது.


Click it and Unblock the Notifications








